08:20
0

ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை சோதனை செய்வதன் மூலம் நோயாளிகள் குணமடையும் வேகத்தை அறிந்துகொள்ளலாம் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அதாவது, அறுவை சிகிச்சைக்கு முன்னர் நோயாளிகளிடம் இருந்த ரத்த மாதிரிகள் பெறப்படுகிறது.

அந்த ரத்த மாதிரியில் உள்ள வெள்ளை அணுக்களின் விகிதங்கள் மூலமாக நோயாளிகள் பூரணமாக குணமடைய எடுத்துக்கொள்ளும் காலஅவகாசத்தை தெரிந்துகொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறிய அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்முடிவு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எப்போது சிகிச்சையளிக்க ஆரம்பிக்கலாம் என்பதை கணக்கிட ஏதுவாக இருக்கும் என கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment