தற்போது பாவனையில் உள்ள வயர்கள் மூலமான இணைய இணைப்பு மற்றும் வயர்கள் அற்ற இணைய இணைப்புக்களான புளூடூத், Wi-Fi என்பனவற்றை தாண்டி மின்குமிழ்கள் மூலம் இணைய இணைப்பு வழங்குவது தொடர்பான தகவல்கள் ஏற்கணவே வெளியாகியிருந்தன.
இவ்வாறான நிலையில் முதன் முறையாக இத் தொழில்நுட்பம் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
சாதாரண இணைய வலையமைப்புக்களை விடவும் 100 மடங்கு வேகமாக தரவுகளைக் கடத்தக்கூடிய இத்தொழிநுட்பம் Visible Light Communication (VLC) என்று அழைக்கப்படுகின்றது.
இதன் வேகமானது ஆரம்பத்தில் செக்கனுக்கு 224 ஜிகா பிட்ஸ்களாக காணப்பட்ட போதிலும் தற்போது செக்கனுக்கு 1 ஜிகா பைட் எனும் வேகத்தினை எட்டச் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலமே சமகாலத்திலுள்ள இணைய இணைப்புக்களை விடவும் 100 மடங்கு வேகமாகச் செயற்படக்கூடியதாக காணப்படுகின்றது.
0 comments:
Post a Comment