07:35
0

சர்க்கரை நோயை சில நொடிகளில் கண்டுபிடித்துவிடும் புதிய ஸ்மார்ட்போன் கருவி ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

 அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர்.மார்கோ அந்தானியோ ரைட் தலைமையிலான குழு இதனை உருவாக்கியிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கருவி மூலம் ஊசி ஏதுமின்றி வெறும் எச்சிலை மட்டுமே கொண்டு ஒரு நபருக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா? இல்லையா? என சோதித்து அறிய முடியும். டைப் 2 டயாபிடிசையும் கூட எளிதாக கண்டறிய முடியும் என்கின்றனர் இந்த விஞ்ஞானிகள். இந்த ஸ்மார்ட்போனில் இணைக்கப்பட்டுள்ள காட்ரிஜ் கழற்றி மாட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் உள்ள கேமிராவுடன் கூடிய பயாலஜிக்கல் இண்டிகேட்டர் எச்சலில் இருந்து சர்க்கரை நோயை சோதித்து அறிந்து கண்டுபிடிக்கிறது. ஹூஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த மைக்ரோ கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

0 comments:

Post a Comment