22:59
0

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelegence) எனப்படும் ஐந்தாம் தலைமுறைக் கணனிகள் தற்போது படிப்படியாக உருவாக்கப்பட்டு வருகின்றன.
இக் கணினிகளில் தரவுகள் சேமிக்கப்படும் முறையானது போட்டோன்களை அடிப்படையாகக் கொண்டதாக காணப்படுகின்றது.

இவ்வாறான கணினி தொழில்நுட்பமானது Quantum Computing என அழைக்கப்படுகின்றது.

தற்போது இக் கணினிக்கு தேவையான குவாண்டம் தர்க்க வாயிலை (Quantum Logic Gate) சிலிக்கனைப் பயன்படுத்தி அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழக பொறியியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

சம காலத்தில் பாவனையில் உள்ள கணினிகளில் 0,1 என்ற பிட்களின் அடிப்படையில் தரவுப் பரிமாற்றம் இடம்பெறும். அதேபோன்று குவாண்டம் தர்க்க வாயிலில் குறித்த எண்கள் கியூபிட்ஸ் (Qubits) என அழைக்கப்படுகின்றன.

இதேவேளை குறித்த பொறியியலாளர் குழுவானது ட்ரான்ஸ்சிஸ்டர்கள்(Transistors) எனப்படும் குறைகடைத்திகளை உள்ளடக்கிய சிப்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஒவ்வொரு சிப்பும் ஏறத்தாழ 1 பில்லியன் ட்ரான்ஸ்சிஸ்டர்களை உள்ளடக்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment