'உலகின் ஏனைய அபிவிருத்தி அடைந்த நாடுகளோடு ஒப்பிடும் போது இலங்கையானது மிகக்குறைவளவான ஆக்கபூர்வஃவிஞ்ஞான வெளியீடுகளைக்கொண்ட அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகும். ஆக்கங்களுக்கு புலமைச்சொத்து போன்ற சட்ட அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பு வழங்குதலானது அபிவிருத்தி குன்றியஇ அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு மற்றும் பொதுவில் மனித குலத்திற்கே உதவுவதில்லை. இத்தகைய நிலையில் பல்வேறு புலமைச்சொத்து உரிமைகளை முழுமையான சட்ட பரப்பெல்லையை நிறுவி நடைமுறைப்படுத்துவதன் மூலம் பாதுகாத்தலும் விருத்தி செய்தலும் போதுமான நியாயப்படுத்தல்களை கொண்டிருக்கவில்லை' என்ற கூற்றை புலமைச்சொத்து சட்டத்தின் தார்ப்பரியத்தை அடிப்படையாக வைத்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
புலமைச்சொத்து சட்டமானது உள அல்லது ஆக்கபூர்வ ஊழியத்தின் (Mental Labour) உருவாக்கம், பயன்பாடு மற்றும் முகாமைத்துவத்தை நெறிப்படுத்தி ஆளும் சட்டம் எனலாம். இதில் ஆக்கவுரிமை (Patent) கைத்தொழில் வடிவமைப்புகள் (Industrial Design)இ வர்த்தக குறியீடுகள் (Trade mark), பதிப்புரிமை (copy right), வெளிப்படுத்தப்படாத தகவல்கள் (Undisclosed information) என்பன பொதுவில் உள்ளடங்குகின்றன. இச்சட்டத்திற்கான அடிப்படை தேவைப்பாடுகளாக பொதுவில் புதியது புனைதல் ((novelty), கண்டுபிடிப்பு படிமுறை (inventive step) அசலான தன்மை (originality) தனித்துவத்தன்மை போன்றன காணப்படுகின்றன எனலாம்.
புலமைச்சொத்து சட்டத்தின் நியாயப்படுத்தல்களின் ஆராய்வு
ஒரு தரப்பினர் தற்போதிருக்கும் சட்டங்கள் புலமைச்சொத்துக்களை பாதுகாக்க போதுமானவை அல்ல என ஆர்ப்பரித்துக்கொண்டிருக்க உதாரணமாக பதிப்புரிமை மற்றும் காப்புரிமை என்பன வெளிப்படையாக பல்லூடக ஆக்கங்கள் மற்றும் மென்பொருட்களுக்கும் விரிவுபடுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருதலை குறிப்பிடலாம். மறுபுறத்தில் வலுவான புலமைச்சொத்து பாதுகாப்பிற்கு எதிர்ப்பு தெரிவிப்போரான அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பிரதிநிதிகள், நுகர்வோர், புலமைச்சொத்துக்களை பயன்படுத்துவோர், மரபுரீதியான தாராள பொருளியல் கொள்கையாளர்கள், பின்நவீனத்துவ கொள்கையாளர்கள், சூழலியளாளர்கள் அல்லது மதம் சார் குழுக்கள் என நீண்ட பட்டியலில் உள்ளடங்குவோர் தொகையும் குறிப்பிடத்தக்கது.
புலமைச்சொத்துக்கான நியாயப்படுத்தல்கள் இருவிதமாக வகைப்படுத்தப்படுகிறது. ஒழுக்கவியல், நன்னெறி சார் விடயங்கள் முதலாவதாகும். அடுத்தது புலமைச்சொத்துரிமை விரும்பத்தகு செயற்பாடுகளை ஊக்குவிப்பதாய் அமையும் என்றும் குறிப்பாக ஆக்கவுரிமை புதிய ஆய்வுகளுக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வித்திடுவதும் வர்ததக குறியீடுகள் உயர் தர உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்;ய வர்த்தகர்களை ஊக்குவிப்பதும் எடுத்துக்காட்டத்தக்கது. இதற்கான நியாயப்படுத்தல்களை நுணுக்கமாக நோக்கின்
பதிப்புரிமைக்கான நியாயப்படுத்தல்கள்
பதிப்புரிமை என்பது 'ஒரு நபர் தனது புலமைத்துவ திறமைகளையும் மற்றும் எண்ணங்களின் வெளிப்பாட்டினையும் ஆக்குதிறனையும் பாதுகாப்பதற்கும் அதிலிருந்து நிதி மூலமான நன்மையை பிறர் அடைவதனை தடுக்கவும் உள்ள மீறப்பட முடியாத சொத்து தொடர்பான உரிமை' எனலாம். இது வெளியிடப்பட்ட எழுத்தாக்கங்களை அதிகாரமின்றி வெளியிடுவதை தடுக்கும் முறையாகும்.
முதலாவதாக இயற்கைச்சட்டத்தின் படி தனிநபர் ஒருவரின் உள ஊழியம் அவரது ஆதனமாகவே கருதப்படவேண்டும். இதன் படி குறித்த ஆக்கம் அந்த தனிநபரின் தனித்த இயல்பை பிரதிபலிக்கும் என்ற கருதுகோளால் இயற்கைச்சட்டம் அதை பாதுகாக்க வேண்டுகிறது. அதேநேரம் இயற்கைச்சட்டத்தின் இன்னொரு கருத்தாக அமைவது (ஜோன் லொக்கின் கருத்தின் படி) நபர்கள் அவர்களது ஊழியத்தினாலான உற்பத்தி மீது இயற்கை உரிமைகளை கொண்டிருப்பர் எனும் ரீதியில் உள ஊழியத்தின் வெளிப்பாடுகளுக்கும் இது பிரயோகமுடையதாகும் என கூறப்படுகிறது.
ஆக்குனருக்கு ஆக்கபூர்வ வேலையில் ஈடுபட்டு பொதுமக்களுக்கென வெளியிட்டமைக்காக வழங்கப்படும் வெகுமதியே இத்தகைய பாதுகாப்பு என வாதிடப்படுவதுமுண்டு. இவ்வெகுமதியின் சட்ட வெளிப்படுத்துகையே பதிப்புரிமைச்சட்டமாகும் என்பதே அடுத்த நியாயப்படுத்தலாகும். மேலும் இத்தகைய பாதுகாப்பு இருப்பினே சமூகத்தின் ஏனையோரையும் ஊக்குவிக்கும்; காரணியாகும் என்பது இன்னுமொரு நியாயப்படுத்தலாகும். இதனால் பல வெளியீடுகளும் ஆக்கங்களும் சமூகத்திற்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்கவுரிமைக்கான நியாயப்படுத்தல்கள்
கைத்தொழில் பிரயோகமுடையதான புதிய கண்டுபிடிப்பொன்றை அல்லது எண்ணக்கருவை ஆக்கிய நபருக்கு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு பிரத்தியேக உரிமை வழங்குதலை ஆக்கவுரிமை எனலாம். பொதுமக்கள் பதிலீடாக நன்மைகளை பெறுவதினால் ஆக்கவுரிமை வழங்கப்படுதலிலான விளைவுகளை சகித்துக் கொள்ள வேண்டும் என்று நியாயம் கற்பிக்கப்படுகிறது.
முதலாவது சாதகமான காரணியாக ஆக்கவுரிமை தனிநபர்களின் அல்லது நிறுவனங்களின் தகவல்களை இரகசியமாய் மறைந்து போகாமல் நடைமுறையில் பயன்படுத்துவதற்கு ஏற்றவிதத்தில் வெளிப்படுத்துவதை ஊக்குவிக்கிறது என்பதை கொள்ளலாம். அடுத்ததாக புதிய கண்டுபிடிப்புகளுக்கும் புனைதல்களுக்கும் ஆக்கவுரிமை வழங்குதல் ஊக்குவிப்புக் காரணியாக
வியாபார குறியீடுகளுக்குரிய நியாயப்படுத்தல்கள்
வியாபார குறியீடு என்பது ஒரு தொழில் முயற்சியில் பண்டங்களை வேறு தொழில் முயற்சியிலிருந்து பிரித்தறிய உதவும் ஏதேனும் சைகை எனலாம். ஒரு குறியீட்டிற்கு புதிய அர்த்தத்தை கொடுத்தல் இங்கு நிகழ்கிறது. இதன் சாதகமான விடயங்களாக நுகர்வோர் ஒரே மாதிரியான பண்டங்களை ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்தி பார்க்க உதவுதல், தரத்தை மேம்படுத்த உதவுதல், உலகளாவிய வர்த்தகத்தில் பொதுவான சீர்தன்மையையும் நியாயமான வர்த்தக போட்டியினையும் உருவாக்குதல், பொருட்களின் விளம்பரம், விற்பனைக்கு இலகுவான உத்தியை வழங்குதல் போன்றவற்றை குறிப்பிடலாம். பிரதான நன்னெறி சார் காரணமாக அமைவது விதைக்காத ஒருவர் குறித்த அறுவடையை பெறக்கூடாது என்பதாகும். அதாவது முறையற்ற செல்வச் சேர்க்கை மற்றும் சட்ட முரணான போட்டி என்பவற்றிற்கு எதிரான பாதுகாப்பை அளிக்கிறது.
இத்தகைய நியாயப்படுத்தல் அனைத்தும் சேர்ந்ததாகவே ஏனைய புதிதாக உள்வாங்கப்படும் புலமைச்சொத்து சட்ட பிரிவுகளுக்கும் அடிப்படையாக அமைகின்றன. இவ்வனைத்து நியாயப்படுத்தல்களுக்கும் பொதுவான விமர்சனமாக அமைபவற்றை நோக்கின் புலமைச்சொத்து சட்டத்தின் பல்வேறு பிரிவுகளுக்குள் பல முக்கியமான வித்தியாசங்கள் இருப்பினும் பொதுவில் இவை அனைத்தும் கொண்டுள்ள அம்சம் எண்ணங்கள், கண்டுபிடிப்புகள், குறியீடுகள் மற்றும் தகவல்கள் போன்ற தொட்டுணர முடியாதவை மீதான சொத்து பாதுகாப்பை அளிப்பதாகும்.
காணி போன்ற தொட்டுணரக்கூடிய வளங்களுக்கு தனியார் ஆதன உரிமைகள் வழங்குதலுக்கான நியாயப்படுத்தலாக காணப்படுவது குறித்த வளங்கள் அருகிச் செல்லக்கூடியது அல்லது எல்லைப்படுத்தப்பட்டவை என்பதுவும் அவற்றை பகிர்தல் கடினம் என்பதாலாகும். இதனோடு ஒப்பிடுகையில் எண்ணங்கள் மற்றும் தகவல்கள் அருகிச் செல்லாது என்பதுடன் மூல உரித்தாளரின் பயன்படுத்தலுக்கான உரிமையை பாதிக்காத வண்ணமே ஏனையோர் இவற்றை பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது. ஆயினும் புலமைச்சொத்து சட்டமானது செயற்கையான பற்றாக்குறையை அல்லது அருகிய தன்மையை உருவாக்குகிறது என்று விமர்சிக்கப்படுகிறது.
ஆக எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்படினும் தனிநபர் அக்கறை மற்றும் பொது மக்கள் அக்கறை என்பவற்றுக்கிடையிலான சமப்படுத்தலுக்கும் மேலும் முன்னதாகவே கூறப்பட்ட நியாயப்படுத்தல்கள் காரணமாகவும் புலமைச்சொத்து சட்டம் அவசியம் என்பது புலனாகிறது. புலமைச்சொத்து சட்டத்தின அவசியம் மறுக்கப்பட முடியாத ஒன்றாகி விட்ட நிலையில் இனி அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கும் புலமைச்சொத்து சட்டத்தின் தேவையின் விகிதாசாரத்தை அவதானித்தல் ஆய்வில் தேவைப்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்தினதும் தொடர்பாடலினதும் பாரியளவிலான தொழினுட்ப அபிவிருத்தி வர்த்தகத்தினதும் வியாபாரத்தினதும் உலகமயமாக்கலை விளைவித்துள்ளது. இது புலமைச் சொத்துக்களிலும் பாரிய செல்வாக்கை செலுத்தியுள்ளது என்பதோடு புலமைச்சொத்துக்கள் சர்வதேச மயப்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்கலாம். புலமைச்சொத்து பொருளாதார நிலைமைகளோடு நெருங்கிய தொடர்புடையவை எனும் வகையில் சர்வதேச தராதரம் ஒன்று கொண்டுவரப்படுகையில் அனைத்து நாடுகளினதும் அனைத்து விடயங்களும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் என்பது தெளிவு.
TRIPS உடன்படிக்கை உருவாகிய வரலாற்றை நோக்கும் போது உயர் தொழினுட்பமும் அதிக ஆக்க படைப்புகளின் வெளியீடும் காணப்பட்ட அபிவிருத்தி அடைந்த நாடுகளே இத்தகைய உரிமைகளை பாதுகாப்பதில் முனைப்பாய் இருந்துள்ளன என்பதை அவதானிக்கலாம். "Developing countries participate in global intellectual property systems as 'second comers' in a world that has been shaped by 'first comers,' என்ற கூற்று இங்கு எடுத்துக்காட்டத்தக்கது. ஐக்கிய அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகள் இவற்றில் குறிப்பிடத்தக்கன.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளைப் பொறுத்தவரை புலமைச்சொத்துக்கான இறுக்கமானதும் பாரியளவிலானதுமான பாதுகாப்பு சிறந்ததாக அமையாது என்பது கீழ்வரும் காரணங்களால் நியாயப்படுத்தப்படுகிறது.
இந்நாடுகளைப் பொறுத்தவரை பொருளாதார இடர்பாடுகள் காரணமாக தொழினுட்ப ஆக்கங்கள் மற்றும் புத்தாக்கங்கள் மிகக்குறைவாகவே காணப்படுகின்றன. இங்கு சுகாதாரம், விவசாயம், கல்வி மற்றும் தகவல் தொடர்பாடல் வளர்ச்சிக்கு, புலமைச்சார் விடயங்கள் ஒரு தனிநபரின் உரிமையாக மட்டுப்படுத்தப்படும் போது தடைக்கல்லாய் அமைவதோடு இத்தகைய முறைமை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு தேவையான உற்பத்தி பொருட்கள் மற்றும் தொழினுட்பங்களுக்கான அணுகுதலுக்கான கிரயத்தையும் அதிகரிக்கிறது. இந்நிலையில் அபவிருத்தி அடைந்து வரும் நாடுகள் உயர் தொழினுட்பங்களை பெறுவதற்கு அபிவிருத்தியடைந்த நாடுகளின் பல்தேசிய கம்பனிகளில் பாரியளவிற்கு தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புலமைச்சொத்து சட்ட முறைமை விருத்தியடைந்த பொருளாதாரத்திற்கே மிகவும் பொருத்தமானதாக உள்ளது என்பது பரவலான குற்றச்சாட்டாகும். இது அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு மேலதிக இலாபங்களை பெற்றுத்தரும்; அதேநேரம் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் உள்ள நிறுவனங்கள் தொழினுட்ப அனுமதிகள் மற்றும் உற்பத்தி உரிமைகளுக்காக உயரிய கொடுப்பனவுகளை செய்ய வேண்டி ஏற்படுகிறது. இது வளர்முக நாடுகளில் பிரதான பிரச்சினையாக உள்ள வறுமையை ஓழித்தலை மேலும் தாமதப்படுத்துகிறது.
பொதுவில் புலமைச்சொத்து சட்டப்பிரிவுகளில் அதிகம் அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு பாதிப்பாய் அமைவது ஆக்கவுரிமையாகும். ஒருவருக்கு ஒரு கண்டுபிடிப்பிற்கான ஆக்கவுரிமை வழங்கப்படுமிடத்து இத்தகைய ஆக்கம் மீது அவருக்கு குறிப்பிடத்தக்க காலத்திற்கு அது தொடர்பிலான அனைத்து செயற்பாட்டிற்கும் பிரத்தியேக உரிமை வழங்கப்படுகிறது. குறிப்பாக இதனை முதன்மையாக பயன்டுத்தும் துறையாக மருந்துகள் தயாரிக்கும் தொழில் (phயசஅயஉநரவiஉயட) காணப்படுகிறது. எயிட்ஸ் மற்றும் மலேரியா போன்ற நோய்களுக்கான மருந்துகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளைப் பொறுத்தவரை பாரிய தேவையாக காணப்படினும் இத்தகைய ஆக்கவுரிமை முறை இவற்றிற்கும் செய்யப்படுமிடத்து அதை இத்தகைய நாடுகள் அணுகிப் பயன்பெறுதல் நடைமுறைச் சாத்தியமற்றதாகவே காணப்படும்.
உலக தொழினுட்ப முறை என்றுமில்லாதவாறு எல்லா துறைகளிலும் செல்வாக்கு செலுத்தியவாறு வளர்ச்சியடைந்து வருகிறது. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் முன்னேற அபிவிருத்தி அடைந்து வரும் மற்றும் அபிவிருத்தி குன்றிய நாடுகளுக்கு இயலாததாக உள்ளது என்பதோடு இதற்கு வளப்பாற்றாக்குறை பிரதான காரணமாக உள்ளது. இன்று சுரூனு எனப்படும் சுநளநயசஉh யனெ னுநஎநடழிஅநவெ என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் நிலமை அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது. இத்தகைய செயற்பாடுகள் மூலம் அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு நிகராக தொழினுட்ப விளைவுகளை பெற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு குறிப்பாக குறை அபிவிருத்தி நாடுகளுக்கு சமூக பொருளாதார, அரசியல் காரணிகள் காரணமாய் உள. இதனால் இரு தரப்பு நாடுகளுக்கிடையேயும் தொழினுட்ப இடைவெளி அதிகரித்தே காணப்படுகிறது என்பதோடு இறுக்கமான புலமைச்சொத்து சட்ட பாதுகாப்புக்கள் மேலும் இவ் இடைவெளியை விஸ்தரிக்கவல்லது.
அபிவிருத்தி அடைந்த நாடுகள் தம் சுய வணிக அக்கறைகளுக்கு அதிகம் முக்கியம் கொடுத்தல் வழமையான விடயமாகும். குறிப்பாக TRIPS தாவர விலங்குகள் மீது ஆக்கவுரிமை செய்வதையும் அனுமதிக்கும் நிலையில் இவ்வேற்பாடு வறிய நாடுகளின் விவசாய நடவடிக்கைகளை பாதிக்கலாம். மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பல பாரம்பரிய அறிவு பொதுவில் வழக்கத்தில் இருத்தலும் அவை குறுகிய இறுக்கமான புலமைச்சொத்து சட்டம் மூலம் செல்வந்த நாடுகளால் துஷ்பிரயோகம் பண்ணப்படலாம் என்பதும் அவதானிக்கத்தக்கது. ஆக்கவுரிமை சட்டத்தின் படி ஏலவே பொதுவில் உள்ள ஒரு விடயம் (Prior Art) தொடர்பில் காப்புரிமை கோர முடியாது. ஆனால் ஐக்கிய அமெரிக்கா போன்ற சில நாடுகள் இத்தகைய அறிவு தம் நாட்டின் எல்லைக்கு அப்பால் காணப்படும் போது அதை அங்கீகரிப்பதில்லை என்பது பல பாரம்பரிய அறிவு சரளமாய் உள்ள அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு பாதகமானதாகும். உதாரணமாக 1994 ல் ஐரோப்பிய ஆக்கவுரிமை அலுவலகத்தால் ஐக்கிய அமெரிக்காவைச்சேர்ந்த W.R.Grace & CO மற்றும் U.S. Department of Agriculture இனால் முன்வைக்கப்படட கோரிக்கைக்கு இலங்கை இந்தியாவில் பரவலாக உள்ள வேப்பெண்ணெயால் தாவரங்கள் மீதான பங்கை கட்டுப்படுத்தும் முறையொன்றிற்கு (hydrophobic extracted neem oil) ஆக்கவுரிமை வழங்கப்பட்டதும் அதற்கு எதிராக வழக்கிட்டு பல சர்ச்சையின் பின் அவ்வாக்கவுரிமை மறுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆரோக்கியமான வர்த்தக போட்டி குறைவாக உள்ள இந்நாடுகளில் இறுக்கமான புலமைச்சொத்து சட்டம் மேலும் பாதகங்களை கொண்டு வரலாம் என விவாதிக்கப்படுகிறது. இந்தளவில் பாதகமான அம்சங்கள் இருப்பினும் முழுதும் மனித குலத்திற்கே எதிரானது என குறிப்பிட முடியாதளவிற்கு புலமைச்சொத்து சட்டம் போதுமான சாதகமான அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்பது ஆரம்பத்திலேயே விளக்கப்பட்ட விடயமாகும். ஆக புலமைச்சொத்து சட்டம் அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்தப்படலாமா என்பதையே அடுத்ததாக பார்க்க வேண்டும்.
WTO மற்றும் WIPO என்பனவே புலமைச்சொத்து சட்டத்தை நெறிப்படுத்தும் நிறுவனங்களாக அமைந்துள்;ளன. இது தொடர்பில் ஆக்கப்பட்ட TRIPS உடன்படிக்கை அதன் தரப்பினர் அனைவரையும் இவ்வுடன்படிக்கையின் அடிப்படையிலமைந்த நியதிச்சட்டத்தை உருவாக்கி அமுல்படுத்தும் கடப்பாட்டை அரசுகளுக்கு விதிக்கின்றன. இவ்வுடன்படிக்கை அபிவிருத்தி அடைந்த நாடுகளினதும், அபிவிருத்தி அடைந்து வரும் மற்றும் அபிவிருத்தி குன்றிய நாடுகளின் பொருளாதார சமனிலையின்மையை கருத்திற்கொண்டு அதன் அமுல்படுத்தலில் சில நெகிழ்வுத்தன்மைகளை கொண்டுள்ளன. இதன் படி அபிவிருத்தி குன்றிய நாடுகள் இவ்வுடன்படிக்கையின் ஏற்பாடுகளை அமுல்படுத்துவதற்கான காலவரையறை ஏனையவற்றை விட அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் அபிவிருத்தி குன்றிய மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் புலமைச்சொத்து சட்டத்தை ஏகாதிபத்திய தனியுரிமையின் கருவியாக நோக்கினும் தற்போது தம் நிலை பேண் அபிவிருத்தியின் வழிமுறையாக நோக்கும் விதத்தில் அவ் அபிப்பிராயத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
· Compulsury licensing என்றொரு பொறிமுறை இருத்தல் வளர்முக நாடுகளுக்கு புலமைச்சொத்து அமுல்படுத்தலின் பாதங்களை குறைக்கவல்ல ஒரு விடயமாகும். அதாவது இதன்படி நியாயமான காரணத்தின் அடிப்படையில் ஒருவரது ஆக்கவுரிமையை மட்டுப்படுத்த அரசுக்கு முடியும் என்பதோடு நாட்டிற்கு நலன் பயக்கும் விதத்தில் குறித்த பொருளை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய ஏதுவாய் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் முடியும்.
· மேலும் விதந்துரைக்கப்படும் ஒருவிடயமாவது வித்தியாசப்படுத்தப்பட்ட விலைகளை பாவித்தலாகும் (Differential Pricing). உதாரணமாக இதன் மூலம் ஒரே மருந்துகளுக்கு வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒரு விலையும் வளர்முக நாடுகளில் ஒரு விலையும் பேணப்படலாம்.
· ஆக்கவுரிமை விண்ணப்பங்களில் கண்டுபிடிப்பிற்கு மூலமாயமைந்த பருப்பொருளின் புவியியல் நிலையத்தையும் வெளிப்படுத்துமாறு வேண்டின் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் உத்தேசிக்கப்பட்டுள்ள ஆக்கவுரிமையானது தம் உரிமைகளை மீறுவதாயிருப்பின் உடன் நடவடிக்கைகள் எடுக்கக்கூடியதாக இருக்கும்.
· உரிய முறையில் தத்தம் நாட்டிற்கு ஏற்றவாறு இச்சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் பாரம்பரிய அறிவு, பாரம்பரிய கலாசார வெளிப்படுத்துகைகள் மற்றும் கிடைக்க இருக்கும் மரபணு வளங்கள் உரிய முறையில் பாதுகாக்கப்படலாம்.
இலங்கை பற்றிய ஒரு நோக்கு
இலங்கையின் 2003 ம் ஆண்டு 36ம் இலக்க புலமைச்சொத்து சட்டம் உடன்படிக்கைக்கு இலங்கை ஒரு தரப்பினர் எனும் வகையில் அதன் ஏற்பாடுகளை உள்வாங்கி உருவாக்கப்பட்டதாகும். சர்வதேச தராதரங்களை நம் நாட்டிற்கு ஏற்றவிதத்தில் உள்வாங்க வேண்டிய கடப்பாட்டை இச்சட்டம் பெருமளவிற்கு நிறைவேற்றியுள்ளது எனலாம். சில ஏற்பாடுகளை உதாரணத்திற்கு அவதானிப்பின் குறிப்பான ஏற்பாடாக ஆக்கவுரிமைக்கு மட்டுப்பாடுகளை விதிக்கும் பிரிவு 86 ஐ குறிப்பிடலாம். இதன் உபபிரிவு 2(இ) ஆனது பணிப்பாளர் நாயகம் தேசிய பாதுகாப்பு, ஊட்டச்சத்து, சுகாதாரம் அல்லது தேசிய பொருளாதாரத்தின் வேறு முக்கியமான நோக்கங்களுக்காக விதந்துரைக்கப்பட்ட நடபடிமுறைகளை தேவைப்படுத்தாது குறித்த கண்டுபிடிப்பின் பாவனைக்கு கட்டாய அனுமதியை பொது அக்கறையின் அடிப்படையில் ஒருவருக்கு வழங்கலாம் என்கிறது. இங்கு நோக்கங்கள் மிகவும் பரந்தளவில் பொருள்கோடப்படக் கூடியதாக இருத்தல் இலங்கை போன்றதொரு அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டிற்கு சாதகமாய் அமையக்கூடியதொரு விடயமாகும். அதே போல் வுசுஐPளு சமவாயத்தில் ஆக்கவுரிமைக்கு உரித்துடைய சிலவும் நமது நியதிச்சட்டத்தில் ஆக்கவுரிமை பெறப்படமுடியாது என வெளிப்படையாக மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
TRIPS உடன்படிக்கையில் '“Plants and animals other than micro-organisms, and essentially biological processes for the production of plants and animals other than non-biological and microbiological processes.”என்றும் குறிப்பிடுவது ஆக்கவுரிமை கோரக்கூடிய பரப்பெல்லையை குறைப்பதாக நமது நியதிச்சட்டம் அமைவதை தெளிவுறுத்துகிறது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடு எனும் வகையில் நாம் இறுக்கமான புலமைச்சொத்து சட்டத்தை கொண்டிருப்பது நமக்கு பாதகமாயமையலாம்.
முடிவுக் குறிப்புக்கள்
புலமைச்சொத்து சட்டம் பொருளியல் சமத்துவம் இல்லாத நிலையில் சர்வதேச தராதரத்தை கொண்டிருப்பது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு பாதகமானதே எனினும் முழுதும் மனித குலத்திற்கு எதிரான ஒரு சட்ட பொறிமுறை என கருத முடியாது என்பதே ஏற்கப்படக்கூடிய பொதுவான கருத்தாகும். தூரநோக்கில் பார்ப்பின் நீண்ட கால செயன்முறையில் வளர்முக நாடுகளின் அபிவிருத்திக்கும் கூட ஏதுவான காரணியாக இதை பயன்படுத்தலாம் என்பது தெளிவாகிறது. ஆயினும் வளர்ச்சியடைந்த நாடுகள் வேண்டுவது போன்ற மேலும் இறுக்கமான சட்டப்பரப்பு உண்மையில் விரும்பத்தகுந்ததல்ல என்பதுவும் குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும் வளரச்சியடைந்த நாடுகளும் பல்தேசிய கூட்டுத்தாபனங்களும் வளர்முக நாடுகளில் புலமைச்சொத்து தொடர்பிலான புதிய தராதரங்களை அமுல்படுத்துவதற்கு போதுமான தொழினுட்ப, நிதி உதவிகளை வழங்கவேண்டும் என்பதோடு இவை ஆரோக்கியமான வர்த்தக போட்டியை மையப்படுத்தியதாயும் அவர்களின் நிலைபேண் அபிவிருத்தியை கருத்திறிகொண்டதாகவும் அமையவேண்டும் என்பது அவசியமாகும்.
A .அர்ஜுன்

அமையும். Lord Oliver Asahi வழக்கில் “Underlying purpose of the patent system is the encouragement of improvements and innovation. In return for making known his improvement to the public the inventor receives the benefit of a period of monopoly during which he becomes entitled to prevent other from performing his invention except by his license என்ற கூற்று ஆக்கவுரிமையின் நோக்கத்தை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

0 comments:
Post a Comment