22:20
1

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்க 2001ம் ஆண்டு முதல் நியமப் புள்ளி (Standard Score அல்லது Z-Score) முறையே அமுல்படுத்தப்படுகின்றது.

2000ம் ஆண்டுக்கு முன்னர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு மாணவர்களுடைய உயர்தரப் பரீட்சையில் மொத்தப்புள்ளிகளை அடிப்படையாக வைத்து அவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதித்தது. இம்முறையில் எந்தவொரு பாடப்புள்ளியும் மற்றைய பாடப்புள்ளிகளுடன் ஒப்பிடப்படுவதில்லை.

ஆனால், இன்று மாணவர்கள் வெவ்வேறு பாடங்களில் பெறும் புள்ளிகள் ஒப்பிடப்பட்டே நியமப் புள்ளி பெறப்படுகிறது. ஒரு மாணவன் ஒவ்வொரு பாடத்திற்கும் சம புள்ளி பெற்றாலும்கூட ஒவ்வொரு பாடத்திலும் பெறப்படும் புள்ளிகள் சமனாகாது.

ஏனெனில், ஒவ்வொரு வினாத்தாளினதும் தராதரம் ஒன்றிலிருந்து ஒன்று முரண்பட்டது. இவ்வேறுபாடுகளை நீக்கி வேறு வினாத்தாள்களின் மொத்தப்புள்ளிகளைச் சமன் செய்வதற்காகவே பல்கலைக்கழக ஆணைக் குழுவினால் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தெரிவு முறை பல நாடுகளில் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தற்பொழுது க.பொ.த உயர்தரப் பரீட்சையானது போட்டிமிகுந்த ஒன்றாகும். ஏனெனில் பரீட்சைக்குத் தோற்றுகின்றவர்களில் குறைந்த சதவீதத்தினரே (10 - 12 percentage) பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படுகிறனர். இவ்வாறு பல்கலைக்ககழகங்களுக்குத் தெரிவு செய்யப்படுபவர்கள் Z Score எனும் புள்ளியினடிப்படையிலே தெரிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Z Score பற்றி பல மாணவர்கள் தெளிவாக அறிந்திருப்பதில்லை. இதனால் உயர்தரத்தில் கால்பதிக்கும் புதிய மாணவர்கள் தமக்குரிய பாடங்களைத் தெரிவு செய்கின்றபோது பல்வேறு குழப்பநிலைமைகளுக்கு ஆளாகின்றனர். சில வேளைகளில் ஒருவருடக் கற்றலின் பின்பும் பாடத்திலிருந்து மாறுகின்றனர்.

குறிப்பாக சிலர் தமக்கு விருப்பமில்லாத பாடங்களையும் ஒரு வற்புறுத்தலின் பேரில் எடுக்கப்படுகின்ற நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர்.

எனவே உயர்தர மாணவர்களினது இந்த குழப்ப நிலைமைகளைத் தீர்ப்பதற்காக இங்கு இந்த Z-Score கணிப்பு முறை பற்றி விளக்கப்படுகின்றது.

இந்த கணிப்பு முறையினை இங்கு கலைப்பிரிவில் உள்ளடங்கும் சில பாடங்களுக்க்கான மாதிரித் தரவுகளைக் கொண்டு கணிப்புக்கு உட்படுத்துவோம்.

கணிப்பு முறைக்கு பிரேத்தியேகமாக Z-Score கணிப்புக்குரிய சூத்திரம், சராசரி , நியமவிலகல் ஆகியவற்றுக்குரிய சூத்திரம் தேவையாகும்.



X = குறிப்பிட்ட பாடத்தில் குறிப்பிட்ட மாணவனுடைய புள்ளி
Ẍ = குறிப்பிட்ட பாடப் புள்ளிகளின் சராசரி
SD = குறிப்பிட்ட பாடத்திற்குரிய நியமவிலகல்
மேலும் இங்கு இடை (சராசரி) மற்றும் நியமவிலகல் அறிவதற்கான சூத்திரத்தை அறிந்து கொள்ளவேண்டும்.





மேற்கூறப்பட்ட உப சூத்திரங்களின் மூலம் பெறப்படுகின்ற பெறுமானங்களைக் கொண்டு Z Score இற்குரிய சூத்திரத்தில் பிரதியிடுகின்றபோது Z Score பெறுமானத்தை அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

பின்வரும் அட்டவணையிலே 5 மாணவர்கள் கலைப்பிரிவில் எடுத்த பாடங்களும் பெற்றுக்கொண்ட புள்ளிகளும் தரப்பட்டுள்ளன.



தமிழ் பாடத்தின் இடை (Ẍ) = 320/ 5 = 64
புவியியல் பாட இடை(Ẍ) = 260/4 = 65
அளவையியல் பாட இடை (Ẍ) = 261/3=87
பொருளியல் பாட இடை (Ẍ) = 141/3 = 47

இடைகளைக் கணித்துப் பெற்றதன் பின்னர் ஒவ்வொரு பாடத்திற்குமுரிய நியமவிலகலைக் கணித்தறிய வேண்டும்.
1) தமிழ் பாடத்திற்குரிய நியமவிலகல் கணித்தல்.





2) புவியியல் பாடத்திற்கான நியமவிலகல் கணித்தல்.





3) அளவையியல் பாடத்திற்கான நியமவிலகல் கணித்தல்





4) பொருளியல் பாடத்திற்கான நியமவிலகல் கணித்தல்.





இவ்வாறு ஒவ்வொரு பாடத்திற்கும் இடை மற்றும் நியமவிலகலைக் கணித்தறிந்த பின்னர் அவற்றை ஒரு அட்டவணைப்படுத்தல் மிகவும் கணிப்புக்கு இலகுவானதாகும்.



இப்பொழுது ஒவ்வொரு மாணவருக்கும் உரிய Z Score புள்ளியினைக் கணிக்க முடியும்.



1) சுபாசின் Z Score கணித்தல்.



2) சதாமின் Z Score கணித்தல்.



3) கஸ்ட்ரோவின் Z Score கணித்தல்.



4) அன்சிகாவின் Z Score கணித்தல்.



5) மதுமிதாவின் Z Score கணித்தல்.



இறுதியாக நாம் இங்கு கணித்துப் பெறப்பட்ட புள்ளிகளுக்கும், அதனடிப்படையில் கிடைக்கப்பெறும் நிலையையும், ஆரம்பத்தில் மொத்தப் புள்ளிகளினடிப்படையில் பெறப்படும் நிலைக்குமிடையில் வேறுபாடு காணப்படுவதனை அவதானிக்கலாம். எனவேதான் Z Score அடிப்படையில் மாணவர்களின் நிலை கணிக்கப்பட்டு பல்கலைக்கழககத்திற்குரிய தேர்வு இடம்பெறுகின்றது.

மாணவர்களின் நிலைகள்



எனவே மாணவர்கள் மிகவும் அவதானமாக தமது பாடங்களைத் தெரிவுசெய்வதுடன் அதில் உச்ச புள்ளிகளைப் பெறுகின்றபோதே சாதகமான தன்மையினைப் பெறமுடியும் என்பது மேற்கூறப்பட்ட கணிப்புமுறையிலிருந்து அறியமுடிகின்றது. இக்கணிப்புக்கு பயனபடுத்தப்பட்ட தரவுகள் கற்பனையாகவிருப்பதுடன், இலகுபடுத்தலுக்காக எண்கள் பொருத்தமான முறையில் பாடத்திற்குரிய புள்ளிகளாக இடப்பட்டிருக்கின்றன. இவ்வாறு நாம் செய்கின்ற கணிப்பு முறையினை கணனியின் உதவியுடன் மிக இலகுவாகவும் குறைந்த நேரத்திலும் செய்துகொள்ளமுடியும். இதற்காக இன்று கணனி மென்பொருட்கள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.







































1 comments:

  1. பல்கலைக்கழகம் தவிர்ந்த ஏனைய கல்வி நிறுவகங்களில் தொழில்வாய்ப்புக்கு தெரிவுசெய்யப்பட z Score அவசியமாக இருக்கிறது..எனவே ஒரு சாதாதர மாணவன் மூன்று முறையும் உயர்தரம் தோற்றி தோல்வியடைகிறான்..ஆனால் நான்காவது முறை முயன்று மூன்று பாடங்களும் சித்திபெற்றால் அவனுக்கு
    Z Score புள்ளி கிடைக்குமா?

    ReplyDelete