22:02
0
உயிரியல் பொருட்கள் வளிமண்டலத்தின் கலப்பதன் மூலம் வளியினுடைய இயல்பு நிலையில் பாதிப்பை ஏற்படுத்துகின்ற நிகழ்வு வளிமாசடைதல் எனப்படுகின்றது. வளழமாசடைதலினால் மனிதன் மற்றும் ஏணைய உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிப்பதுடன், இயற்கைச் சூழலுக்கும் மானிடச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.



1)    வளிமாசடைவதற்குரிய காரணிகள் :-
•    போக்குவரத்து – அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கனரக வாகனங்களின் பாவனையினது எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதனால் வாகனங்களினால் ஆன மாசடைதல் உயர்ந்து காணப்படுகின்றது. லொஸ்ஏஞ்சல்ஸ் நகரத்தில் நாள் ஒன்றுக்கு 3 பில்லியன் வாகனங்கள் பாதையில் பயணிக்கின்றன. விருத்தியடை;து வரும் நாடுகள் குறைந்த ரகம் மற்றும்  ஈயம் அகற்றப்படாத வாகனங்களைப் பாவிப்பதனாலும் வளி அதிகளவில் மாசடைகின்றது. இந்தியா இலங்கை நேபாளம் போன்ற நாடகளில் இதனைக் காணலாம். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் உள்நாட்டு வெளிநாட்டு போக்குவரத்தில் அதிகளவு விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படல். உதாரணம் நியுயோர்க், லண்டன், டோக்கியோ.


•    கைத்தொழில் - கைத்தொழில்களின் வகையைப் பொறுத்தும் பயன்படுத்தப்படும் சக்திப் பொருட்களின் தன்மைகளைப் பொறுத்தும் வளிமாசடைதல் வேறுபடுகின்றது. இரும்புருக்கு தொழிற்சாலைகளை செறிவாகக் கொண்ட  கைத்தொழில் நகரங்களின் வளி மாசடைதல் உயர்வாகக் காணப்படும். இத்தகைய கைத்தொழில் நகரங்களின் வளியானது புகைப்படலங்களாலும், தூசுதுணிக்கைகளாலும் நிரம்கிப் காணப்படும். உதாரணம். பென்சில்வேர்னியா, யொக்ககாமா, ஜேர்மனி, பேமிங்காம். விருத்தியடைந்து வரும் நாடுகளில் சீமெந்து உற்பத்தி ஆலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளிலான வளிமாசடைதல் உயர்ந்து காணப்படுகின்றது.

•    தீயினால் மாசுபடல் - காடுகள், புற்கள் தீப்பற்றுவதனாலும் வளி மாசடைகின்றது. உதாரணமாக கான்பரோ நகரில் இதனை அவதானிக்கலாம். மரபு ரீதியிலான விவசாய முறைகளும் விருத்தியடைந்து வரும் நாடுகளில் வளிமாசடைதலுக்கு ஏதுவாகின்றது. குறிப்பாக பெயர்ச்சிப் பயிhச்செய்கை முறைகளுக்காக காடகள் எரிக்கப்படுவதனால் இத்தகைய வளிமாசடைதல் நிகழ்கின்றது. பெயர்ச்சிப் பயிhச்செய்கையினால் காடகள் அழிக்கப்படுவது தென்இந்தியா, சுமாத்ரா, பிறேசில் , இலங்கையின் வரண்ட வலயம் போன்றவற்றில் நிகழ்கின்றது.

•    யுத்தங்கள் - அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில், உலகின் ஏணைய நாடுகளில் சமாதானத்தைப் பேணுவதற்கு என்றும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் என்ற முறையிலும் பல நவீன ரக ஆயுதங்களை, யுத்த விமானங்களைப் பயன்படுத்துவதனாலும், வளிமாசடைதல் ஏற்படுகின்றது. 1988, 2003 ஆம் அண்டகளில் இடம்பெற்ற ஈராக் யுத்தம், இலங்கையின் வடகிழக்கில் இடம்பெற்ற யுத்தம் . ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய ராட்சியம், யப்பான் போன்ற உலக வல்லரசு நாடுகளின் யுத்த முன்னயாத்த பரிசோதனை மயற்சிகளாலும் வளிமாசடைகின்றது.

•    விண்வெளி ஆராய்ச்சிகள் - செய்மதிப் பயன்பாடுகளின் அதிகரிப்பகள், விண்வெளிப் பயணம், ஆராய்ச்சிகள் என்பனவும் வளியை மாசடையச் செய்கின்றன. ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ரஸ்யா, ஐக்கிய ராட்சியம், யப்பான், பிரான்சு, ஜேர்மனி முதலிய நாடுகள் இத்தகைய விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றன. விண்வெளி ஓடங்களை ஏவுகின்றபோது மிக அதிகளவில் நச்சு வாயுக்கள் வளிமண்டலத்தில் கலக்கின்றன. குறிப்பாக நாசா விண்வெளி அமைப்பினுடைய ஆராய்ச்சி விண்கலங்களை அனுப்புகின்ற புளோரிடா மானிலத்தில் உள்ள கேப் கணாவரல் முனையிலிருந்து ஏவப்படுவதனால் சூழவுள்ள வளிமண்டலம் மாசுபடுகின்து.


 
2)    வளிமாசடைவதினால் ஏற்படும் பாதிப்புகள்:-
•    சௌக்கிய இடர்கள் - சுவாசம் சார்ந்த பல்வகை நோய்கள் ஏற்படல். குறிப்பாக அஸ்மா, சுவாப் புற்றுநோய், மார்புச்சளி, இருமல், கண்நோய் ஏற்படல், கண்பார்வை பாதிப்படைதல் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.
•    உயிரினங்களுக்கான பாதிப்புகள் - விலங்குகள், கால்நடைகளின் மீள் உற்பத்தியாக்கல் பாதிப்படைதல், கால்நடைகளின் கண்பார்வை பாதிப்படைதல்
•    பயிர்களுக்கான பாதிப்புகள் – தாவரங்களின் வளர்ச்சி, விளைச்சல் பாதிப்படைதல், இலைகளின் நிறம் மாற்றமடைதல் (கலிபோர்னியாவில் புகைலைச் செடிகளின் நிறம்மாற்றமடைந்தமை இனங்காணப்பட்டது)
•    தெளிவற்ற தன்மை ஏற்படல் - தூசு துகள்கள் வளியில் கலந்திருப்பதனால் பொருட்களை தெளிவாகப் பார்க்கமுடியாதவாறு தௌவற்ற தன்மை காணப்படும். குறிப்பாக மின்சக்தி உ;பத்திநிலையங்கள், தொழிற்சாலை வசதிகள், வாகனங்கள் முதலியவ்ற்றின் மூலம் வெளியேறும் தூசுக்கள் வளிமண்டலத்தில் சேர்வதனால் தெளிவற்ற புலப்படும் தன்மையைத் தோற்றுவிக்கும்.
•    ஓசோன் படை தேய்வடைதல் - வளிமண்டலத்தில் குளோரோ புளோரோ காபன் போன்ற ஓசோன்படையைத் தேய்வடையச் செய்யும் வாயுக்கள் சோர்வதனால் அவை ஓசோன் படையில் தேய்வை ஏற்படுத்தும்.
•    அமில மழை – மழைவீழ்ச்சியில் நைதரசன் மற்றும் கந்தகம் (சல்பர்) ஆகிய இரசாயன மூலக்கூறுகளை அதிகளவில் கொண்டிருக்கின்றபோது அது அமில மழை எனப்படுகின்றது. உயிர்ச் சுவட்டு எரிபொருட்கள் எரிக்கப்படுவதனால் வளிமண்டலத்தில் நைதரசன் ஒட்சைட்டு, சல்பூரிக் ஒட்சைட்டு முதலியன வெளிவிடப்படுகின்றன.
•    காலநிலை மாற்றம் - வளிமண்லத்தில் பச்சை வீட்டு வாயுக்களின் அளவு அதிகரிப்பதனால் அது புவிவெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்ங்களுக்கு வழிவகுக்கும்.

3)    வளிமாசடைவதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:-
•    திண்மக்கழிவு முகாமைத்துவ முறையினை பின்பற்றுதல்.
•    தேவையற்ற வாகனப் பயன்பாட்டைத் தவிர்த்தல்.
•    மீள்புதுப்பிக்கக்கூடிய சக்தி மூலங்களைப் பயன்படுத்துதல்.
•    தாவரங்களை நடுதல்.
•    விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.


Akshayan BA (Hons) special in Geography 



0 comments:

Post a Comment