05:15
0
உயிரினப் பல்வகைமை என்பது புவிமேற்பரப்பில் வாழிடத்தைக் கொண்டிருக்கும் பல்வேறுவகையான உயிர்வடிவங்களையே குறிக்கும். இவ்வுயிர்வடிவங்கள் என்னும்பொழுது பல்வேறுவகையான வாழிடங்களுக்கிடையில் காணப்படும் வாழிடப்பல்வகைத்தன்மை, தாவரம் மற்றும் விலங்கினங்களின் பல்வகைத்தன்மை , தனிப்பட்ட இனங்களின் பிறப்புரிமையியல் பல்வகைத்தன்மை ஆகியவற்றை இது உள்ளடக்கும். பொதுவாக 'பரம்பரை அலகிலிருந்து இனங்கள் வரை சூழல்தொகுதியில் காணப்படும் பல்வேறுவகைப்பட்ட முழுஉயிரின வடிவங்கள்'; உயிரினப் பல்வகைமை எனப்படுகின்றது.



•    நமது உயிர்ச்சூழலில் அல்கா வகை நுண்ணங்கிகளிலிருந்து செடி, மரஇனங்கள் உட்பட மூன்றரைஇலட்சம் தாவரங்கள் உள்ளன. புரொட்டோசோவா எனும் ஒரு செல்(கலம்) உயிரினம் முதல் மனிதன் வரையிலான 68 300 விலங்கினங்களுள்ளன. இவற்றில் 60000  பூச்சியினங்களும், 1600 வகை மீன்கள் 372 பாலூட்டிகள் அடங்குகின்றன. இவற்றுள் வீட்டுவளர்ப்பு விலங்குகளான எருமை, ஆடு, மாடு, செம்மறி, பன்றி, கோழி, குதிரை, ஒட்டகம் முதலானவையும் அடங்கும். இவை எதுவும் தனித்து உயிர்வாழமுடியாதவையாகும். சூழலில் இவை அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்தே வாழ்கின்றன. தாவர உண்ணிகள், விலங்குண்ணிகள், அனைத்துமுண்ணிகள் ஆகியன அனைத்துமே தாவரங்கள் சேமித்த உணவு ஆற்றலில் தங்கியுள்ளன.
•    ஐக்கியநாடுகள் சபை புவி உச்சிமாநாடு(1992 றியோடி ஜெனீரா):- தாங்களும் ஒரு பகுதியாகவுள்ள நிலம், கடல் மற்றும் ஏணைய நீர்சார் சூழலியல் முறைமைகள் மற்றும் வாழ்சூழலியற் தொகுதிகள் உட்பட்ட எல்லா இடங்களையும் சார்ந்த உயிரினங்கள் மத்தியிலான பல்வகைமை உயிரியற் பல்வகைமை எனப்படுகின்றது. இது உயிர்வகைகளுக்குள்ளும், அவற்றுக்கு இடையிலும், சூழலியல் முறைமை சார்ந்தும் உள்ள பல்வகைமைகளை உள்ளடக்கின்றது.

2)    உயிரினப் பல்வகைமை பாதிக்கப்படுதல்:-
•    உயிரினப்பல்வகைமை பாதிப்படைதல் என்பதானது குறிப்பிட்ட சூழலில்; தொடர்ச்சியாக ஓர் உயிரினம் அல்லது மேற்பட்ட உயிரினங்கள் அழிக்கப்பட்டோ அல்லது வேறு இடங்களுக்கு மாறிச்செல்வதனூடாவோ இப்பிரதேசத்து சூழலில் இருந்து அகற்றப்படுதல்  உயிரினப்பல்வகைமை பாதிப்படைதல் அல்லது மாற்றமடைதல் எனப்படுகின்றது. புதிய ஒரு இனம் உருவாக்கப்படுதல் மற்றும் இடம்பெயர்ந்து குறிப்பிட்ட பிரதேசத்தை அடைதலும் உயிர்பல்வகைமை பாதிக்கப்படுதல் ஆகும்.

3)    உயிரினப் பல்வகைமை அருகிச்செல்வதற்குரிய காரணிகள்:-
•    காடுகளை அழித்தல்:- உலகின் உயிர்பல்வகைமையை அதிகளவில் கொண்டுள்ள பிரதேசங்களாக காடுகளே காணப்படுகின்றன. உலகின் அயன மழைக்காடுககள் பெருமளவில் உயிரினப் பலவகைமையைக் கொண்ட பகுதியாகும். இத்தகைய பகுதிகள் அழிவுக்குள்ளாக்குகின்றபோது அங்கு வாழ்கின்ற மிருகங்கள் பறவைகள் உணவின்றியும் தங்குமிடமின்றியும் அழிவடைந்தோ அல்லது வேறு இடங்களுக்கு நகர்ந்தோ செல்லவேண்டி ஏற்படும்.
•    முருகைக்கற்பாறைகளை அழித்தல்:-சமுத்திரப் பகுதிகளில் அதிகளவு உயிரினங்களைக் கொண்டிருக்கின்றமையால் முருகைக்கற்பாறைகளை சமுத்திரத்தின் அயன மழைக்காடுகள் என அழைக்கப்படுகின்றன. . உலகிலுள்ள மீன் இனங்களில் 25மூ உயிர்வாழ்க்கைக்கு இச்சூழல் தொகுதியே உதவுகிறது.  முருகைக்கற்பாறைப் பகுதிகளில் இவ்வாறு வாழ்கின்ற உயிரினங்கள் முருகைக் கற்பாறைகள் அழிவடைகின்றபோது தாமும் அழிந்துபோவதுடன், சில இடம்பெயர்ந்தும் செல்கின்றன.
•    ஈரநிலங்களை மீளப்பெறல்:- ஈரநிலப்பகுதிகள் மீனினங்கள் முதலியவற்றின் வாழ்விடங்களாகவும், இனவிருத்திக்கு ஏற்ற இடங்களாகவும் விளங்குகின்றன. குடியிருப்புக்களை அமைத்தல் மற்றும் நகர விரிவாக்ககங்கள் என்பவற்றிற்காகவும், திண்மக்கழிவகளை கொட்டுவதனாலும் ஈரநிலங்கள் மீளப்பெறப்படுகின்றன. இதனால் ஈரநிலங்களில் வாழும் உயிரினங்கள் அழிவடைய ஏதுவாயமைகின்றது.
•    இரசாயண உள்ளீடுகளின் பாவனை அதிகரிப்பு:- அதிகரித்து வருகின்ற சனத்தொகைக்கு ஏற்ப உணவுற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் பசுமைப் புரட்சி போன் விவசாயத்தில் உற்பத்தியைப் பெருக்குவதற்காக ஏற்பட்ட புரட்சிகளின் பயனாக அதிகளவான இரசாயண உள்ளீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இரசாயண உரங்கள், கிருமிநாசினிகள், களைநாசினிகள் என்பன இத்தகைய இரசாண உள்ளீடுகளாகும். இவ்வாறு இரசாயண உள்ளீடுகளை நிலத்தில் பயன்படுத்துகின்றபோது அவை மண்ணிலுள்ள நுண்ணங்கிகளின் செயற்பாடுகளை பாதிப்படையச் செய்கின்றன. இதனால் விவசாய நிலப்பரப்பில் காணப்படுகின்ற நுண்ணங்கிகள் அழிவடைகின்றன.
•    நெருப்பு வைத்தல்;:- பெயர்ச்சிப் பயிhச்செய்கை மற்றும் விலங்குகளை இலகுவாக பிடிப்பதற்கும் காடுகளுக்கு தீ வைக்கப்படுகின்றன. பெயர்ச்சிப் பயிர்ச்செய்கைக்காக தெரிவு செய்யப்படுகின்ற காட்டுப் பகுதிகள் தீவைத்து எரிக்கப்படுகின்றபோது அப்பகுதியில் வாழ்கின்ற பல்வேறு உயிரினங்கள் அழிவடைகின்றன. அத்துடன் இத்தீவைத்தல் செயற்பாடானது அருகிலுள்ள ஏணைய பகுதிகளுக்கும் பரவி அங்குள்ள உயிரினங்களின் அழிவிற்கும் வழிவகுக்கின்றது. ஆபிரிக்கா போன்ற நாடுகளில் மிருகங்களைப் பிடிப்பதற்காக ஏற்படுத்தப்படம் தீவளையங்களினாலும் பெருமளவில் உயிர்ப்பல்வகைமை பாதிக்கப்படுகின்றது.
•    வேட்டையாடுதல்:- சட்டவிரோதமாக விருத்தியடைந்து வருகின்ற சில நாடுகளில் காட்டு விலங்குகள் வேட்டையாடப்படுவதுடன் வர்த்தக நோக்கத்தில் வனவிலங்குகளைச் சிறைப்பிடித்தலாலும்  உயிர்பல்வகைமை பாதிப்படைகின்றது. இந்நாடுகளில் பல விலங்குகளின் தோல், யானைகளின் தந்தம் என்பவற்றை சட்டவிரோத முறையில் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.
•    இயற்கை அனர்த்தங்கள்:- எரிமலை, வரட்சி, வெள்ளம், சூறாவளி, காட்டுத்தீ போன்வற்றாலும் உயிர்பல்வகைமை பாதிப்படைகின்றன. எரிமலை வெடிப்பு ஏற்படுகின்றபோது எரிமலைக் குழம்பு அயலிலுள்ள பிரதேசத்தினால் பரவிச் செல்கின்றபோது உயிhகள் அழிவடைய ஏதுவாகின்றது. அதேபோன்று வரடசியின்போது நீர்த்தட்டுப்பாடு போன்றவற்றினாலும் அதிகளவில் விலங்குகள் அழிவடைகின்றன. உதாரணம் எரிமலை-கொலம்பியா, வரடசி- இலங்கை, இந்தியா, வெள்ளப்பெருக்கு- இந்தயா, பங்களாதேஸ்
•    ஆற்றுவடிநில அபிவிருத்தித் திட்டங்கள்:- ஆற்றுவடிநிலங்களை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்திட்டங்களின் மூலமும் உயிர்பல்வகைமை பாதிப்படைகின்றது. குறிப்பாக இத்தயை நிலைமை வளர்முக நாடுகளில் அதிகளவில் காணலாம். இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மகாவலி, கல்லோயா, உடவளவை நீர்த்தேக்கங்கள் நைஜீரியாவில் மேற்கொள்ளப்பட்ட நைகர் நதித் திட்டம், சம்பியாவில் மேற்கொள்ளப்பட்ட சாம்பசி திட்டம் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
•    பூகோள வெப்பநிலை அதிகரிப்பு:- காலநிலை மாற்றமும் பூகோ வெபமயமாதலும் உயிரின பலவகைமை இழப்பில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரிக்கின்றபோது அதன் தீவிரத்தை தாங்கமுடியாத விலங்கினங்கள் உயரிழக்கின்றன. குறிப்பாக டைனோசர் முதலிய உயிரினங்கள் அழிவடைந்தன என்ற கூறப்படுகின்றது.


4)    உயிர் பல்வகைமை இழப்பினால் ஏற்படும் பாதகமான விளைவுகள்:-
•    தாவர இனங்கள் அழிவடைதல்:- காடுகள் அழிக்கப்படுவதனால் பெறுமதி மிக்க பல தாவர இனங்கள் அழிவடைகின்றன. மேலும் காடுகள் அழிக்கப்பட்டு மிள் காடாக்க மரநடுகைகளின்போது ஓரின மரங்களே நடப்படுகின்றன. இதனால் பல அரிய இனமரங்கள் செடிகள் முற்றிலுமாக சூழற்தொகுதியிலுருந்து அழிந்து விடுகின்றன. குறிப்பாக காட்டினங்கள் பெருமளவுக்கு ஒன்றில் ஒன்று தங்கிக் காணப்படும் இயல்பினைக் கொண்டிருக்கின்றன. இவற்றின் உணவுற்பத்தி மற்றும் உணவுச் சங்கிலித் தொடர் என்பனவும் பாதிப்படைகின்றது.
•    நோய்கள் பரவுதல்:- இயற்கைச் சூழலில் இட்பெற்றுக் காணப்படுகின்ற தாவரங்கள்  பலவகை நோய்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய இயல்புகளைக் கொண்டன. சில இனத்தாவரங்கள் அழிவடையும்போது புதுவித நோயகள் சூழலில் ஏற்பட வழிவகுப்துடன் இந்நோய்கள் மனிதாகளையும் பாதிக்கின்றன.
•    வெள்ளப்பெருக்கு ஏற்படுதல்;:- ஈரநிலங்கள் மீளப்பெறுதல் மற்றும் காடழித்தல் போன்ற காரணங்களினால் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இரநிலங்கள் மீளப்பெறப்படுகின்றபோது மழைகாலங்களில் நீர்தேங்கிவடிய இடமில்லாது போகின்றபோது வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்துகின்றன. மேலும் நதிவடிநிலங்களில் தாவரப்போர்வைகள் குறைவாக உள்ளபோது நேரடியாக வெள்ளப்பெருக்கு நதிவரம்புகளைத் அரித்து அகற்றி வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும்.
•    மருத்துவப் பொருடகளின் உற்பத்தி குறைவடைதல்:- பலவகை நோய்களுக்கான மூலிகைகள் மற்றும் மருந்துகளுக்கான பொருட்கள் காடகளிலிருந்தே பெறப்படுகின்றன. காட்டுபகுதிகள் அழிவடைகின்றபோது சிலவகை மூலிகைகள் அழிவடைந்து போவதுடன், இயற்கை மூலிகைகளிலிருந்து உற்பத்தியாகும் மருந்து உற்பத்திகளும் பாதிப்படையும். குறிப்பாக அஸ்பிரின் போன்ற மருந்துகள் விலோவ் (றுடைடழற) எனப்படும் தாவரத்தின் இலையிலிருந்தே தயாரிக்கப்படுகின்றது.
•    இயற்கை அழகு பாதிப்படைதல்:- தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பரம்பலில் குறைவு ஏற்படுகின்றபோது இயற்கை அழகு குறிப்பிட்ட பிரதேசத்தில் குறைவடைவதுடன், இதனால் இயற்கையை ரசிப்பதற்காக வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும்.
•    உயிரினங்கள் தனிமைப்படுத்தப்படும்:- காடுகள் அழிக்கப்படுவதனால் அவற்றிலே வசிக்கும் பறவைகள், விலங்ககள் என்பன தனிமைப்படுத்தப்படும். குறிப்பாக அவற்றினுடைய உறைவிடங்கள் அழிக்கப்படுகின்றபோது இத்தகை தனிமைப்படும் நிலை உருவாகும்.
•    சூழல் சமநிலை பாதிப்படையும்:- சூழற்தொகுதியொன்றில் காணப்படுகின்ற உயிருள்ள கூறுகளின் அளவில் மாற்றம் ஏற்படுகின்றபோது அது சூழல் சமநிலையைப் பாதிப்பதாக அமையும்.

5)    உயிர்பல்வகைமையைப் பாதுகாப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள்:-
•    ஆபத்தான நிலையிலுள்ள உயிரினங்களைப் பாதுகாத்தல்:- யானைத்தந்தம், ஆமைஓடு, விலங்ககளின் தோல் என்பவற்றிலான உற்பத்திப் பொருட்களை வாங்குவதைத் தவிர்ப்பதன் மூலம் உயிர்ப்பல்வகைமையைப் பாதகாக்கலாம்.
•    விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்தல்:- உலக குடித்தொகையில் 75 சதவீதத்தையும், உயிர்பல்வகைமையின் 80 சதவீதத்தினையும் வளர்முக நாடுகளே கொண்டுள்ளன. எனினும் இந்நாடுகளில் இவற்றைப் பேணுவதற்கான மக்களுக்குரிய விழிப்பணர்ச்சித் திட்டங்கள் நடைமுறையில் இல்லை. இதனால் இவற்றைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்ச்சித் திட்டங்களையும் விஞ்ஞான ஆய்வகளையும் இந்நாடுகளில் மேற்கொள்வதன் மூலம் உயிர்பல்வகைமையைப் பாதுகாக்கலாம்.
•    உறுதியான நுகர்வு முறைகளை ஏற்படுத்தல்:- உலகின் மூலவளத்தின் அபிவிருத்தியடைந்த நாடுகளே நுகர்கின்றன. வளர்முக நாடுகளில் நிலவப்பெறும் வறுமை, பட்டினி, பஞ்சம் முதலிவற்றை நீக்கவதுடன் சமூகநீதியையும் இந்நாடுகளில் வழங்குவதன் மூலம் ஒரு நிலையான நுகர்வு முறையினை ஏற்படுத்தலாம்.
•    புவிவெப்பமடைதலைக் கட்டுப்படுத்தல்:- வளிமாசடைதற் செயற்பாடகளினால் புவியின் சராசரி வெப்பநிலை அதிகரிக்கின்றது. புவிவெப்பமடைதலை ஏற்படுத்தக்கூடிய உற்பத்திகளையும், உற்பத்திப் பொருட்களின் பயன்பாட்டையும் தவிர்த்தல் இன்றியமையாததாகும்.

6)    இலங்கையில் உயிர்பல்வகைமையை பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:-
•    சட்ட நடவடிக்கைகள் மூலம் விலங்குகளை அல்லது விலங்ககளின் பாகங்களை அல்லது இறந்த விலங்குகளின் அல்லது விலங்குகளினால் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதைத் தடைசெய்தல்.
•    இனக்கலப்பிற்கு உட்படுத்தி ஆபத்தைர எதிர்நோக்கிய விலங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்.
•    சட்டநடவடிக்கைகள் மூலம் ஆபத்தை எதிர்நோக்கிய விலங்ககள், விலங்குகளின் சமநிலையைச் சூழல் தொகுதியில் பேணுதல்.
•    காப்பு நடவடிக்கைகளை அரச சார்புள்ள அரசாங்க ஊடகங்களின் மூலம் எடுத்துச் செல்லுதல்.
•    பாதுகாக்கப்பட்ட காடுகள், சரணாலயங்கள், தேசிய பூங்காகக்கள் முதலியவற்றை உருவாக்கி அவற்றினூடாக உயிர்பல்வகைமையைப் பாதுகாத்தல்.

7)    வளர்முக நாடுகள் உயிர்பல்வகைமையைப் பாதுகாப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்:-
•    இப்பிரதேசங்களில் அடிக்கடி ஏற்படுகின்ற இயற்கை அனர்த்தங்களான வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, வரட்சி, காட்டுத்தீ போன்றவற்றால் உயிர்பல்வகைமைiயின் அழிவு கட்டுப்படுத்தப்பட முடியாமல் உள்ளது.
•    சூழல் பாதுகாப்பின் பல்வகைத் தன்மையின் முக்கியத்துவம் பற்றி இப்பகுதி மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளாமல் இருக்கின்றமை.
•    சூழலுடன் சம்பந்தப்பட்ட அரச சார்பு நிறுவனங்களினதும், அரச சார்பற்ற நிறுவனங்களினதும் செய்றபாடகள் மந்த கதியில் இடம்பெறுகின்றமை.
•    குடித்தொகை அதிகரிப்பினால் உணவுத் தேவைகளு;ககாகவும், மருந்து மூலிகைகளுக்காகவும் காடுகளையும், காடுசார்ந்த உயிரினங்களையும் அழித்தமை.
•    இந்நாடுகளில் குடித்தொகை வளர்ச்சியினால் நிலப்பரப்பிற்கான கேள்வி அதிகரித்து வருவதனால் காடுகள்; அழிக்கப்படுகின்றமை.

8)    வேட்டையாடுதலால் அழிவடைந்த மற்றும் அழிவடையும் நிலையிலுள்ள உயிரினங்கள்:-
•    ஐரோப்பா, வடஅமெரிக்காக் கண்டங்களில் பயணிப் புறாக்கள் பில்லியன் கணக்கில் இருந்தன. அவை அனைத்தும் இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டன. நியுயோர்க் நகரில் ஒரு நாளைக்கு 18000 புறாக்கள் 1855 ஆம் ஆண்டில் இறைச்சியாக்கப்பட்டன. உலகத்தில் எஞ்சியிருந்தகடைசிப் பயணப்புறா 1919 செப்டம்பர் மாதம் சின்சினாட்டி மிருகச் சாலையில் மரணமாகியது.
•    அத்திலாந்திக் தீவுகளில் இரண்டரையடி உயரமான, பறக்குந் திறனற்ற சிறுஇறகுகளைக் கொண்ட அவுக் என்ற பறவை ஆயிரக்கணக்கில் இருந்தன. இவற்றை ஸ்கண்டினேவியக் கடலோடிகள், எசுக்கிமோவர் ஆகியோர் வேட்டையாடித் தின்றுதீர்த்தனர். அவுக்பறவையின் எஞ்சிய இருபறவைகளும் 1844 யூன்மாதம் ஐஸ்லாந்தில் வேட்டையாடப்பட்டன.
•    மொரிசியஸ் தீவுகளில் காணப்பட்ட டோடோ என்ற பறவை உணவுக்காக வேட்டையாடித் தீர்க்கப்பட்டது. பன்றிகளும் இப்பறவைகளின் முட்டைகளைத் தேடித் தின்றன. 1680 இல் கடைசிப் பறவையும் அழிந்துபோனது.
•    நியுசிலாந்தில் மோவா என்ற தீக்கோழி போன்ற பெரியதொரு பறவை காணப்பட்டது. இது 12 அடி உயரமாகவும் பறக்கும் திறனற்றவையாகவும் காணப்பட்டது. 1907 ஆம் ஆண்டின் பின்னர் இப்பறவைகள் எதுவும் காணப்படவில்லை.
•    ஹவாய்த்தீவுகளில் ஆரம்பத்தில் 68 வகையான பறவைகள் காணப்பட்டன. அமெரிக்கா அங்குள்ள காடுகளை வெட்டுமரத் தேவைக்காக அழித்துவிட்டமையால் 40 வகையான பறவைகள் இன்று முற்றாக அழிவடைந்துள்ளன.
•    அமெரிக்க பிசன் எருமைகள் ஆங்கிலேயரால் குடியேறுவதற்குமுன் 60 மில்லியன் வரையிலிருந்தன. உணவுக்காக அவை வேட்டையாடப்பட்டன. இன்று எஞ்சியவை ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் தேசிய பூங்காக்களில் நூற்றுக்கணக்கில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
•    காண்டா மிருகங்கள் தொடர்ந்து அழிந்துவருகின்றன. ஆறு அடி உயரமும் மூன்றுதொன் நிறையுமுடைய இப்பெரிய மிருகம் ஒரு சிறுகொம்புக்காகக் கொல்லப்பட்டுவருகின்றது. ஆபிரிக்காவில் ஆயிரக்கணக்கில் இருந்தவை இன்று நூற்றுக்கணக்கில் குறைந்துவிட்டன.
•    சீனாவின் சுதேசிய விலங்கு பண்டா கரடியாகும். மூங்கில் காடுகளில் வாழும் இவை துரிதமாக அழிந்து போயின. இன்று நூற்றுக்கணக்கில் எஞ்சியுள்ள இவற்றை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
•    100 அடி நீளமும் 150 தொன் எடையும் கொண்ட உலகின் மிகப்பெரிய மிருகமான நீலத்திமிங்கிலம் எண்ணிக்கையில் மிக அருகிவிட்டது.

9)    வன விலங்குகள் அழிவடைவதற்கான காரணங்கள்:-
•    மனிதனின் வேட்டையாடும் முறை:- உணவுத் தேவைக்காகவும், உடற்பாகங்களை பெறுவதற்காகவும் அழகு சாதனப் பொருட்களின் உற்பத்திக்காகவும், பெருமளவு காட்டு விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன.
•    மாற்றமடையும் காலநிலை:- பூமியில் வெ;பபநிலை படிப்படியாக அதிகரித்த செல்வதனால் ஏற்படுகின்ற காலநிலை மாற்றங்கள் வனவிலங்குகளின் அழிவுக்கு காரணமாகின்றது.
•    காட்டுத்தீ ஏற்படுதல்:- இயற்கையாகவோ அல்லது மனித செயற்பாடகளினாலேயோ பெருமளவு காடுகள் எரிதலுக்குள்ளாகி காட்டு விலங்கினங்கள் அழிவுக்குள்ளாகியது. உ-ம் கலிபோர்னியா, மலேசியா, இந்தோனேசியா, அவுஸ்ரேலியா பகுதிகள்
•    இயற்கை அனர்த்தங்கள்:- இயற்கை அனர்த்தங்களான வரட்சி, வெள்ளப்பெருக்கு, எரிமலைச் செயற்பாடுகள், புவிநடுக்கம் போன்றவற்றாலும் பெருமளவில் விலங்குகள் அழிவடைகின்றன.
•    காட்டு நிலங்களை பயன்படுத்தல்:- நிலத்தின் கேள்வி அதிகரிப்பதனாலும் உணவுத்தேவைக்காகவும், எரிபொருள் மற்றும் உறைவிடங்களை அமைப்பதற்காகவும் காட்டுநிலங்களை அத்துமீறிப் பய்னபடுத்துதல்.
•    போதிய அறிவின்மை:- சூழலினை சமநிலையில் வைத்திருப்பதற்கு வனவிலங்குகளின் முக்கியத்துவம் பற்றி போதிய அறிவின்மை. உ-ம்:- மத்திய ஆபிரிக்க காடுகள், அமேசன் காடுகள்
•    இரசாயண உள்ளீடுகளின் பாவனை:- விவசாய நிலங்களில் அதிகளவு இரசாயண உள்ளீடுகளை பயன்படுத்துவதால் நீர்மாசடைதல் அதிகரித்து இதனால் அப்பிரதேசத்தது நிர்நிலைகளில் நீரருந்து; விலங்ககள் இறக்கின்றன.
•    வியாபார நோக்கத்திற்காக சட்டவிரோதமான முறையில் அதிகளவில்யானைகளைக் கொல்லுதல். குறிப்பாக ஆபிரிக்க நாடுகளில் இவ்வாறு யானைகள் கொல்லப்படுகின்றன.
•    வளர்முக நாடகளிலிரந்து அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு மிருகக் காடசிச் சாலைகளுக்கு அருமையான விலங்குகளைப் பிடித்து அனுப்புதல். உதாரணமாக கிழக்கிந்தித் தீவுகளில் காணப்படுகின்ற வாலில்லாக் குரங்குகள்.
•    யுத்த நடவடிக்கைகளினாலும் அதிகளவில் வனவிலங்குகள் அழிவடைகின்றன. இலங்கையில் நிலவிய யுத்தநடவடிக்கைகளினாலும் அதிகளவில் விலங்குகள் பல்வேறு விதத்தில் அழிவடைந்தன.
•    அரச கொள்கைகளினாலும் வனவிலங்குகள் அழிக்கப்படுகின்றன.. குறிப்பாக இலங்கையின் வனனிப் பகுதியில் கொக்கிளாய் பகுதியில் காணப்படுகின்ற சுமார் 6000 ஏக்கர் நிலப்பரப்பிலமைந்த பறவைகள் சரணாலயப் பகுதி குடியேற்ற நடவடிக்கைகளுக்காக அழிக்கப்பட்டு வருகின்றது. இதனை பல சூழல் ஆர்வலர்களும் எதிர்த்துள்ள போதிலும் அரச ஆதரவுடன் இடம்பெறுகின்றமையால் இதனை தடுத்து நிறுத்த முடியாதுள்ளது.


10)    வனவிலங்குகளை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்படும் வழிமுறைகள்:-
•    வனங்களை மற்றும் தேசிய சரணாலயங்களை இடையில்  மூடிவைக்கும் காலமொன்றை அறிமகம் செய்தல்:- வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக மூடிய காலமென குறிப்பாக வரண்ட பருவத்தை தீர்மானிப்பதன் மூலம் பாதுகாக்கலாம். இப்பருவத்தின்போது நீரினைத் தேடியும், உணவினைத் தேடியும் அதிகளவான விலங்குகள் வெளியே வருவதால் இவற்றை பாதகாத்தல் அவசியமாகும். இவ்வாறு மூடப்பட்ட காலத்தில் விலங்கினங்களைப் பிடிப்பதையோ அல்லது வேட்டையாடுவதையோ முற்றாக தடைசெய்ய சட்டத்தை அமுல்படுத்துதல்.
•    வனவிலங்ககளின் உறைவிடங்களைப் பாதுகாத்தல்:- விலங்ககளுக்கத் தேவைப்படும் இயற்கைத் தாவரங்களின் வகையானது விலங்கினங்களைப் பொறுத்து வேறுபட்டு அமையப்பெறும். அடர்ந்த காடுகள் அல்லது தாவரப்போhர்வைகள் விலங்குகளின் இனப்பெருக்கத்திற்கும் உயவு வகைகளைப் பெறுவதற்கும், எதிரிகளிடமிருந்து தமக்கான பாதுகாப்பினை பெற்றுக்கொள்வதற்கும் உதவியாக அரைமயப்பெறுகின்றன. பெரும்பாலான விலங்குகள் தமக்கான உறைவிடங்களை புதர்காடுகளிலும் மரங்களிலும் அமைத்துக் கொள்கின்றன.
•    பொதுமக்களுக்கு அறிவூட்டல்:- அழிந்துபோகும் விலங்கினங்களின் முக்கியத்துவம் பற்றி பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்குதல் அவசியமாகும். உயிர்பல்வகைமையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு விளங்கவைக்கவேண்டும். தொடர்பாடல் ஊடகங்களின் மூலம் பாமர மக்களைக்கூட கவர்ந்து ஈர்ககக் கூடிய முறையில் விலங்கினங்களின் முக்கியத்துவம் சார்ந்த படங்களையும், அதுசார்ந்த அம்சங்களையும் வெளிப்படுத்தி மக்களுக்கு உணர்த்துதல். விலங்கினங்களை அழிக்கும் மக்களது மனப்பாங்கை மாற்றமுறச் செய்தல்.
•    புதிய சட்டங்களை ஏற்படுத்துதலும், ஏற்கனவே உள்ள சட்டங்களை வலுவடையச் செய்தலும்:- அருகிச் செல்லும் விலங்கினங்களையும், வர்த்தக ரீதியில் பெறுமதி வாய்ந்த விலங்கினங்களையும் சட்டங்கள் இயற்றுவதன் மூலம் பாதகாக்க முடியும். தோல்களையும் தந்தங்களையும், கொம்புகளையும் வழங்கும் விலங்கினங்களே இன்று பெருளவில் அழிக்கப்படுகின்றன. உதாரணமாக யானை, சிறுத்தை முதலியன.
•    காட்டுத்தீ, வெள்ளப்பெருக்கு வரட்சி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது விலங்கினங்களைப் பாதுகாக்க துரித நடவடிக்iகைகளை மேற்கொள்ளவேண்டும்.
•    காட்டு விலங்குகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு அழிவடையும் நிலையில் உள்ள விலங்குகளை பாதுகாத்தல்.
•    சர்வதேச அமைப்புக்களின் உதவிகளைப் பெற்று வனவிலங்குகளைப் பாதுகாத்தல்.

0 comments:

Post a Comment