22:07
0
உலகில் இன்று புவிவெப்பமடைதல், காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு சூழல்பிரச்சினைகளுக்கு முக்கிய காரணங்களுள் ஒன்றாக காடழிப்பு காணப்படுகின்றது. இந்த வகையில் காடுகளின்நன்மைகள், காடழிப்புக்குரிய காரணங்கள், காடழிப்பினால் ஏற்படும் பாதிப்புகள், காடழிப்பினை கட்டுப்படுத்தல் போன்ற விடயங்களை இக்கட்டுரை ஆராய்கின்றது.1)    காட்டுவளத்தின் நன்மைகள்:-
•    சூழல் மாசடைதலைத் தடுத்தல்:- காபனீரொட்சைட்டின் அளவைக் குறைத்து ஒட்சிசனின் அளவை அதிகரிப்பதில் காடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.  தாவரங்கள் ஒளித்தொகுப்பு நடவடிக்கைக்காக காபனீரொட்சைட்டு வாயுவை உள்ளெடுத்து ஒட்சிசனை வெளிவிடுகின்றன. இதனால் வளிமண்டலத்தில் பல்வேறு விதத்தில் வெளியேறும் காபனீரொட்சைட்டானது தாவரங்களால் உறிஞ்சிக் கொள்ளப்படுகின்றது. இன்றும் கூட தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் மற்றும் பல்வேறு விதத்தில் வெளியெறும் காபனீரொட்சைட்டு வாயுவை உறிஞ்சிக் கொள்ளக்கூடிய விதத்தில் செயற்கை மரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இம்மரங்கள் இயற்கையான தாவரங்களைப் போன்று உயிர்கலங்களை கொண்டிராவிட்டாலும் மரங்களின் செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டே இவை தொழிநுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டு;ள்ளமை குறிப்பிடத்தக்கது.

•    மழையைப் பெறத் துணை செய்தல்:- ஆவியுயிர்ப்புத் தொழிற்பாட்டின் மூலம் வளிமண்டலத்தில் நீராவியின் செறிவை அதிகரிக்கச் செய்வதுடன், உயர்ந்த காடுகள் காற்றுக்களைத் தடுத்து மழைவீழ்ச்சியைக் கொடுக்கின்றன. அண்மையில் இலங்கையில் மiநாட்டில்; மழைவீழ்ச்சி குறைவடைந்தமைக்கு காடுகள் பயிர்ச்செய்கைக்காக அழிக்கப்பட்டமையும் ஒரு காரணமாகக் கருதப்பட்டு, உப உணவுப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்ற பகுதிகளில் காடுகளை வளர்ப்பதுடன், பயிர்செய்கைக்கு வடக்கு கிழக்கிலுள்ள காடுகள் செறிவற்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்ற கருத்தும் கூறப்படுகின்றது.

•    மானிட தேவைகளைப் பூர்த்தி செய்தல்:- காடுகள் எரிபொருளாகப்பயன்படல், தளபாடங்களுக்குரிய மூலப்பொருளாகப் பயன்படல், மருந்துகளாகப் பயன்படல், மற்றும் உணவுகளை வழங்கல் என பல்வேறு பயன்பாடுடையதாகக் காணப்படுகின்றது. பெரும்பாலான வளர்முக நாடுகளில் எரிபொருளாக விறகே பயன்படுத்தப்படுகின்றது. வீடுகளிற்குரிய கதவுகள், கூரைகள், தளபாடங்கள் செய்வதற்கும் மரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. மேலும் அரிய பல மருந்து வகைகளையும் காடுகளே கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. உதாரணமாக ஆயுர்வேத வைத்தியத் துறைக்குத் தேவையான மருந்துக்களை இவை தன்னகத்தே சேமித்து வைத்துள்ளன. தாவர பட்டைகள், இலைகள், விதைகள் என்பன இவ்வாறு இன்று ஆயுhவேத வைத்தியத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

•    புயல், சூறாவளியின் தாக்கத்தைக் குறைத்தல்:- காற்றுக்களின் செல்வாக்கு பெரிதும் தாவரப் போர்வையற்ற பகுதிகளிலே மையம் கொள்பவை. உதாரணமாக பாலைவனப் பகுதிகளில் காற்றின் வேகம் மற்றும் அவற்றி;ன் செயற்பாடுகள் அதிகமாகக் காணப்படும். இதற்குக் காரணம் அங்கு தடையாக தாவரப்போர்வை காணப்படாமையே ஆகும். ஆனால் தாவரப் போர்வை மிகுந்த பகுதிகளில் காற்றுக்களின் செல்வாக்கு அதாவது வேகம் கட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படும். அத்துடன் புயற்காற்றுக்கள் விருத்தி பெறுவதும் தாவரப்போர்வையினால் கட்டுப்படுத்தப்படுகின்றது.

•    உயிர்ப்பல்வகைமையை பாதுகாத்தல்:- தாவரப்போர்வை மிக்க பிரதேசங்கள் உயிரினப்பல்வகைமையை அதிகளவில் கொண்டனவாக காணப்படுகின்றது. மிருகங்கள் முதல் ஊர்வன வரை ஒரு காட்டு சூழற்தொகுதியில்  இனங்காணக்கூடியனவாக உள்ளன. விலங்குகள், பறவைகளின் புகலிடங்களாகக் காடுகள் காணப்படுகின்றன. பூமியின் நிலப்பரப்பில் மழைக்காடுகள் 7 சதவீதம் மாத்திரமே உள்ள போதிலும் உலகில் வாழும் உயிரினங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக அங்கு காணப்படுகின்றது.

•    மண் வளத்தைப் பாதுகாத்தல்:- காடுகள் மண்ணரிப்பு, மண்வரட்சி, மண்சரிவு போன்றவற்றை குறைவடையச் செய்கின்றது. தாவரங்கள் காணப்படுகின்ற பகுதிகளில் மழைபெய்கின்றபோது பூமியில் நிர்த்துளிகள் நேரடியாக விழாமல் பாதுகாக்கின்றதுடன், தாவரவேர்கள் மண்பகுதிகளைப் பற்றிப்பிடிப்பதனாலும் மண்ணரிப்ப நிகழ்வதனைக் குறைவடையச் செய்கின்றது. மேலும் நதி;கரையோரங்களின் நிற்கும் தாவரங்களினால் நதியின் கரையோரம் அரிக்கப்படுவதனை தடுக்கின்ற ஒரு பாதுகாப்புச் சுவராகவும் இது காணப்படுகின்றது.  அத்துடன் தாவரங்கள் நிலத்திற்கு போர்வையாக அமைகின்றமையால் பெருமளவில் நீர்ஆவியாவதைத் தடுப்பபதுடன், மண்ணின் ஈரத்தன்மையினையும் பாதுகாக்கின்றது. இதனால் மண் வரடசியடைதல் குறைவடைகின்றது. தாவரங்கள் மலைச்சரிவுகளில் காணப்படுகின்றபோது நிலச்சரிவை குறைப்பதிலும் பங்காற்றுகி;ன்றது.

•    தரைக்கீழ் நீரைப் பாதுகாத்தல்:- காடுகள் காணப்படுகின்ற பகுதிகளில் மழைநீரானது பெமளவில் கழுவுநீராட்டமாகக் செல்வதனை பாதகாத்து தரைக்கீழே பொசிவு நீராக செல்வதற்கு தாவரங்கள் துணைபுரிகின்றன. தாவரங்களின் விதானத்தில் விழுகின்ற மழைத்துளிகள் கிகைளினூடாக கீழிறங்கி பின்னர் வேர்களுடாக நிலத்தின் கீழே வடிகின்றது.. அத்துடன் தாவரப்போர்வையுள்ள பகுதிகளிலிருந்து பெருமளவில் ஆவியாகச் செய்முறை மூலம் நிர்இழக்கப்டுதல் கட்டுப்படுத்தப்படுவதனாலும் தரைக்கீழ் நிர்வளம் பாதுகாக்கப்படுகின்றது.

•    வெள்ளப்பெருக்கைக் குறைத்தல்:- நதிவரம்புகளை விட்டு நீரானது பாய்கின்றபோது அது பொதுவாக வெள்ளப்பெருக்கு எனப்படுகின்றது. பெரும்பாலான நதிக்கரையோரலங்களில் மதுரை போன்ற தாவரங்கள் காணப்படுவதனால் அவை வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் வெள்ளப்பெருக்கு அணைகள் போன்று தொழிற்படுகின்றன. அத்துடன் அதிகளவில் நீரானது வேகமாகப் பாய்ந்து நதிக்கரையோரத்தை அரிப்புக்குள்ளாக்க முற்படுகின்றபோதும் இவை நதியின் அரிப்பை கட்டுப்படு;த்துகின்றன.

•    அழகை ஏற்படுத்தல்:-  காடுகள் ஒரு பிரதேசத்தின் இயற்கை அழகுமூலங்களாகக் காணப்படுகின்றன. பச்சைப் பசேலனக் காட்சியளிக்கும் காடுகள் கண்ணுக்கு குளிர்ச்சியையும் பிரதேசத்திற்கு அழகையும் கொடுக்கின்றது. மரத்தின் இலைகள், தொங்குகின்ற பழங்கள், அழகான பூக்கள் எல்லாம் இயற்கை அழகைப் பார்ப்பவருக்கு வழங்குகின்றன. கட்டடங்களாலே நிரம்பிவழிகின்ற நகர மக்கள் காடுகளின் அழகைப்பார்த்து ரசிக்கின்றனர். இதனால் நாட்டின் சுற்றுலாத்துறையும் வளர்ச்சியடைகின்றது.

2)    காடழிப்புக்குரிய காரணங்கள்:-
•    சனத்தொகை பெருக்கம் :- உலகின் சனத்தொகை இன்று 7 பில்லியனாக அதிகரித்துள்ளது. சனத்தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப வளங்களின் நுகர்விலும் அதிகரிப்பு காணப்படுகின்றது. மனித தேவைகள் அதிகரிப்பினால் உறைவிடங்களை அமைத்துக் கொள்வதற்கான நிலத்திற்குரிய தேவையினால் காட்டுநிலப்பரப்புக்கள் அழிக்கப்பட்டு குடியிருப்பு நிலங்களாக மாற்றப்படுகின்றன. குடியிருப்புக்கள் மாத்திரமன்றி அவற்றுக்குரிய போக்குவரத்துப் பாதைகளை அமைப்பதற்காகவும் காடுகளை ஊடறுத்துச் செல்லக்கூடிய வீதிகள் அமைக்கப்படுகின்றபோது அருகாமையிலுள்ள காட்டுநிலப்பரப்புக்கள் அழிக்கப்படுகின்றன.

•    பயிர்செய்கை:- உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவையும் வர்த்தக விருத்தியும் ஏற்பட்ட காரணத்தினால் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் பெருமளவில் அதிக நிலப்பரப்பில் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. உதாரணமாக ஆரம்ப காலங்களில் இயற்கையாகவே காணப்பட்ட காடுகளிலிருந்து இறப்பர் பால் எடுக்கப்பட்டது. பின்னர் தேவை அதிகரிப்பு ஏற்பட்டதனால் இறப்பரை பெருந்தோட்டங்களில் பயிரிடுவதற்கு முடிவெடுத்தனர். இதனால் பெருமளவில் காட்டுநிலப்பரப்புக்கள் அழிவடைவதற்கு இது வழிஏற்படுத்தியது. இறப்பர் மாத்திரமன்றி தேயிலை, கோப்பி, எண்ணெய்த்தாவரங்கள் முதலியவற்றினால் காட்டு நிலப்பரப்புக்கள் குறைவடைகின்றன. உதாரணமாக இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் எண்ணெய்த்தாவரங்கள் (pயடஅ ழடை pடயவெயவழைn) செய்கை பண்ணப்படுவதற்காக பெருமளவு அயனக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்நாடுகள் உலகின் pயடஅ ழடை  வினியோகத்தில் 80 சதவீதத்திலும் அதிகமாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நிலங்களை உருவாக்கிக் கொள்வதற்காக காடு மற்றும் பற்றைக்காடுகளைக் கொண்ட பகுதிகள் அழிக்கப்பட்டு பெற்படுகின்றன.

•    வெட்டுமர வர்த்தக வளர்ச்சி:- மரப்பலகைகள், மரக்குற்றிகள், மரக்கூழ், கடதாசிகள் போன்ற காட்டு உற்பத்திகளின் அளவு அதிகரித்துவருவதனால் காடுகள் அழிக்கப்பட்டு வருpன்றன. பெருமளவில் வைரமான மரங்களான முதிரை, தேக்கு முதலியவை பலகைகள், தளபாடங்கள் போன்றவற்றுக்காக அரியப்படுகின்றன.  வெட்டுமர உற்பத்தியில் முன்ன்ணி வகிக்கும் பிரன்ஸ், கொங்கோ, கானா ஆகிய நாடுகள் வகிக்கினறன. ஆனால் ஸ்புறுச், பேர்ச், அஸ்பென், மஞ்சள் பைன் போற் மரங்கள் காகிதக்கூழ் உற்பத்திக்காக பெருமளவில் அழிக்கப்படுகின்றன. பிறெசிலில் வெட்டுமர உற்பத்தி;க்காக 10000 சதுரகிலோமீற்றர் பரப்பளவு பகுதி காடழிக்கப்பட்டுள்ளது.

•    காட்டுத்தீ:- இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ ஏற்படுகின்ற காட்டுத்தீயினாலும் காடுகள் அழிவுக்குள்ளாக்கப்படுகின்றன. சூரிய வெப்பம், காற்று என்பவற்றின் சக்தி, மரங்களின் உராய்வு என்பன காட்டுத்தீ ஏற்பட துணை புரிகின்றன. காட்டுத்தீ ஏற்படுவதற்குரிய சூழ்நிலையை பிரதேசத்தில் ஏற்படும் வரட்சி ஏற்படுத்துகின்றது. இடிமின்னல் தாக்கம், எரிமலை வெடிப்பு, நிலக்க நடுக்கம் போன்ற நிகழ்வுகளின்போதும் காட்டுத்தீ ஏற்படுகின்றது. அயன, இடைவெப்ப வலயங்களில் காட்டுத்தீயினால் அதிகளிவில் காடுகள் அழிவடைகின்றன. 1977 ஆம் ஆண்டில் சீனாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 750000 ஹெக்டயர் காடுகள் அழிந்தன.இவற்றை விட மனிதர்களினது நடவடிக்கைகளினாலும் காடுகள் எரியூட்டப்படுகின்றன.

•    கனிப்பொருள் அகழ்வு நடவடிக்கைகள்:- இரத்தினக்கல் அகழ்வு, காரியம் தோண்டி எடுத்தல் , இரும்பு, மற்றும் கோல்டன் (ஊழடவழn) அகழ்தல் முதலிய நடவடிக்கைகளுக்காகவும் காடுகள் அழிக்கப்படுகின்றன. இத்தகைய கனிய அகழ்வு சுரங்கமறுத்தல் கைத்தொழிலுக்காக தெரிவு செய்யப்படும் பிரதேசங்களில் காணப்படுகின்ற மரங்கள் அழிக்கப்பட்டு வெறுமையான நிலங்களாக மாற்றப்படுகின்றது. சில சுரங்கமறுத்தல் நடவடிக்கைகளின்போது சுரங்கங்களின் மேலே காணப்படுகின்ற காட்டு நிலப்பரப்பகள் சுரங்கங்கள் இடிந்துவிழுவதனாலும் அழிவடைகின்றன.

•    போக்குவரத்துப் பாதைகள் அமைப்பு:- நாட்டின் உட்கட்மைப்பு வசதிகளில் போக்குவரத்து வசதி முக்கியமானதாகும். கைத்தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கோ அல்லது சந்தைக்கு பொருட்களைக் கொண்டு செல்வதற்காகவோ அல்லது மக்களின் அன்றாட போக்குவரத்துக்களை மேற்கொன்வதற்கோ பாதைகள் அவசியமாகின்றன. சனத்தொகை அதிகரிப்பு ஏற்படுகின்றபோது மக்களின், வாகனங்களின் பாவனை அதிகரிக்கின்றபோது  போக்குவரத்துப் பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியனவாக உள்ளன. இதனால் வீதிகளை புதிதாக அமை;ககின்றபோதோ அல்லது வீதிகளை அகலாமக்குகின்றபோதோ அவ்வப் பிரதேசங்களில் காணப்படுகின்ற காட்டு வளங்களும் அழிக்கப்படுகின்றன. பொதுவாக நெடுஞ்சாலைகளை அமைக்கும்போது பெருமளவில் காடுகள் அழிக்கப்படுகின்றன.

•    நகராக்கம்:- நகரின் பரப்பளவு விஸ்தரிக்கப்படுகின்றமையை பொதுவாக நகராக்கம் என்று கூறலாம். நகரப்பிரதேசங்களில் நாளாந்தம் உள்வரவின் காரணமாக சனத்தொகை அதிகரிப்பு ஏற்படுகின்றது. இதனால் எல்லைப் புறங்களில் காணப்படுகின்ற நிலங்களில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டு குடியிருப்புக்கள் அமைக்கப்படுகின்றன. அதுமட்டுமன்;றி பெருமளவிலான தொழிற்சாலைகள் நகரவெளிப் பகுதிகளிலே அமைக்கப்படுகின்றன. இதனாலும் காடுகள் வெட்டப்பட்டு நிலங்கள் பெறப்படுகின்றன. இதனால் விருத்தியடைந்த பெரும்பாலான நகரப்பிரதேசங்களில் நகர வெப்பத்தீவுகளும் உருவாகின்றன.

•    விலங்கு வேளான்மை:- விலங்குகளை வளர்த்து அவற்றிலிருந்து பால், இறைச்சி, கம்பளி மயிர்கள் என்பன பெற்றுக்கொள்வதனை பொதுவாக விலங்கு வேளான்மை என அழைக்கின்றனர். இவற்றுள் பாற்பண்ணைத் தொழில் மற்றும் இறைச்சிக்காக வர்த்தக நோக்கில் கால்நடை வளர்த்தலும் முக்கியம் பெறுகின்றது. கால்நடைப் பண்ணைகளோ அல்லது பாற்பண்ணைகளோ பெருமளவு நிலப்பரப்பிலெ மேற்கொள்ளப்படுகின்ற ஒரு விவசாய நடவடிக்கையாகும். இன்று உலக உணவுத்தேவையில பால் உற்பத்திப் பொருட்களுக்கும், அதே போன்று பெரும்பாலான மேலைத்தேய நாடுகளில் இறைச்சிகளுக்கும் பெருமளில் கிராக்கி காணப்படுகின்றது. இதனால் உற்பத்தியாளர்கள் தமது பண்ணை நிலங்களின் பரப்பளவுகளை அதிகரித்தக் கொள்வதற்காக மேலதிகமாக காடுகள் காணப்படுகின்ற பகுதிகளை வெட்டி அழித்து அவற்றை தமது பண்ணை நிலங்களாக மாற்றுகின்றனர். இத்தகைய நடவடிக்கைகளினால் பெருமளவில் காடுகள் அழிக்கப்படுகின்றன. பிறேசிலில் 1966-1975 வரையான காலப்பகுதிகளில் 38 சதவிதமான காடழிப்பு இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.

•    சட்டவிரோத காடழிப்பு:- கிராமிய மக்கள் வறுமை காரணமாக விறகுளை எடுத்தல், இலாபமீட்டும் நோக்கில் சட்டவிரோதமான முறையில் மரம் எடுத்தல் போன்றவற்றாலும் காடுகள் அழிக்கப்படுகின்றன. மிகவும் வறுமையான நாடுகளில் வாழுகின்ற மக்கள் தமது வயிற்றுப்பிழைப்பக்காக சட்டவிரோதமானமுறையில் காடுகளை வெட்டி விறகாக விற்கின்றனர். கெய்யா கொங்கோ போன்ற நாடகளில் வாழ்கின்ற மக்களில் பெரும்பாலோனோர் விறகுத் தேவைகளுக்காக காடுகளை அழிக்கின்றனர்.

•    யுத்த நடவடிக்கைகள்:- யுத்த நடவடிக்கைகளாலும் பெருமளவில் காடுகள் அழிக்கப்படகின்றன. யுத்தங்களின் போது பயன்படுத்தப்படுகின்ற விமானத்தாக்குதல்கள், பீரங்கி எறிகணை வீச்சுக்கள் என்பன பாரியளவில் காடுகள் அழிப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இலங்கையில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகளின்போது இலங்கை கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் காணப்பட்ட காதட்டு நிலப்பரப்புக்கள் பெருமளவில் இவ்வாறு அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

•    நீர்மின்சார நடவடிக்கைகளாலும் காடுகள் அழிக்கப்படுகின்றன.

•    அயனப்பகுதிகளில் இடம்பெறும் பெயர்ச்சிப் பயிர்ச்செய்கை.

3)    காடழிப்பினால் ஏற்படும் தீமைகள்.

•    மழைவீழ்ச்சி குறைவடைதல்:- பிரதேசங்களின் மழைவீழ்ச்சி நீடிப்பதும், குறைவடைவதும் காடுகளில் தங்கியுள்ளது. உலகின் பெருமளவில் காடுகள் காணப்படும் பகுதிகளான கொங்கொ, அமேசன் பகுதிகளில் 2000 மி.மீற்றருக்கும் மேற்பட்ட மழைவீழ்ச்சி கிடைக்கின்றது.  உயர் காட்டு மரங்கள் மழைமுகில்களைத் தடுத்தும், குளிரடைய வைத்தும் மழைவீழ்ச்சிக்குக் காரணமாகின்றன. காடுகளின் அழிவால் உலகின் பல பகுதிகளில் காலநிலை மாற்றங்கள் அவதானிக்கப்பட்டுள்ளது.

•    மண்ணரிப்பு ஏற்படுதல்:- தாவரங்கள் நிலத்திற்க ஒரு போர்வையாக அமைந்து காணப்படுகின்றது. இதனால் மழைவீழ்;ச்சியானது நேரடியாக நிலத்தில் விழுவதை அவைதடுக்கின்றன. அத்துடன் தாவர வேர்கள் தனது எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் காணப்படுகின்ற நிலப்பகுதியை பற்றிப் பிடித்துக்கொள்கின்றது. இதனால் மண்ணானது அரிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றது.

•    புவிவெப்பமடைதல்:- புவிவெப்பமடைவதில் பச்சைவீட்டு வாயுக்கள் முக்கியம் பெறுகின்றன. பச்சை வீட்டுவாயுக்களில் காபனிரொட்சைட்டு வாயு முக்கியமானது. இது 1959 ஆம் ஆண்டில் சராசரியாக 315.98 ppஅ ஆகவும், 2009 ஆம் ஆண்டில் சராசரியாக 385.57 ppஅ ஆகக் காணப்பட்டது. இவற்றின் அதிகரிப்பில் வேறுபல காரணிகள் சம்பந்தப்பட்டிருந்தாலும். இவற்றைக் கட்டுப்படுத்துவதில் தாவரங்களின் பங்கு முக்கியமானதாகும். தாவரங்கள் ஒளித்தொகுப்பிற்காக காபனீரொடசைட்டை உள்வாங்கி ஒட்சிசனை வெளிவிடுகின்றன. இதனால் வளிமண்டலத்தில் சேர்க்கப்படும் காபனீராட்சைட்டின் அளவு கட்டுப்படுத்த்படுகின்றது. காடுகள் அழிக்கப்படுகின்றபோது இந்த காபனிராட்சைட்டை உறிஞ்சும் செயற்பாடு குறைவடைகின்றபோது வளிமண்டலத்தில் சேரும் காபனீரொட்சைட்டின் அளவு அதிகரித்து வெப்பநிலை அதிகரிப்பிற்கு ஏதுவாகின்றது.

•    வறட்சி ஏற்படுதல்:- பொதுவாக படிவுவீழ்ச்சியை விட ஆவியாகக்கம் அதிகரிக்கின்றபோது வரட்சி ஏற்படுகின்றது. தாவரங்கள் குறிப்பிட்ட பிரதேசத்தில் மழைவீழ்ச்சிக்கு வித்திடுவதுடன் நிலத்தின் ஈரப்பதனையும் அதிகளவில் பாதுகாக்கின்றது. மரம் வியாபித்துக் காணப்படுகின்ற பிரதேசத்திற்குட்பட்ட நிலத்திலிரந்து ஆவியாக்கம் மூலம் நீர் வெளியேறுவதை குறைப்பதுடன் தாவரவேர்கள் ஈரப்பதனை பற்றிப்பிடித்துக் கொள்கின்றன. ஆனால் தாவரங்கள் அழிக்கப்படுகின்றபோது நேரடியாக ஆவியாக்கம் இடம்பெறுவதுடன், குறிப்பிட்ட பிரதேசத்தில் வறட்சி நிலைமையையும் உருவாக்கும். உதாரணமாக தாவரப்போவை மிக்க அயனக்காட்டுப்பகுதிகளில் ஈரலிப்பான நிலைமை காணப்படுவதுடன், தாவரப்போர்வை அரிதாகவுள்ள பாலைவனப்பிரதேசங்களில் வறட்சி நிலைமையும் படிவுவீழ்ச்சியைவிட ஆவியாக்கம் அதிகமாகவும் காணப்படுவதனை அவதானிக்கலாம்.

•    விலங்குகள் பாதிக்கப்படுதல்:- தாவரப்போர்வை மிக்க பிரதேசங்கள் உயிரினப்பல்வகைமையை அதிகளவில் கொண்டனவாக காணப்படுகின்றது. மிருகங்கள் முதல் ஊர்வன வரை ஒரு காட்டு சூழற்தொகுதியில்  இனங்காணக்கூடியனவாக உள்ளன. இங்கு  உற்பத்தியாளர்களாக விளங்குகின்ற தாவரங்கள் அழிக்கப்படுகின்றபோது முதலாம் படி நுகரிகளான தாவர உண்ணிகள் அழிவடைகின்றது. இதனால் அவற்றில் தங்கியிருக்கின்ற ஊணுண்ணிகள் அழிவடைகின்றன. இதனால் அரிய பல விலங்கினங்கள் அழிவடைவதுடன், உணவு இன்றியும், உiவிடம் இன்றியும் பல விலங்குகள் வேறு பிரதேசங்களை நோக்கி இடம்பெயர்கின்றன. உதாரணமாக இலங்கையின் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் போது பெருமளவில் வனவிலங்ககள் பாம்புகள் என்பன புகலிடம் இழந்து இடம்பெயர்சத்மை குறிப்பிடத்தக்கது.

•    மண்ணின் ஈரத்தன்மை குறைவடைதல்.
•    காற்றின் வேகம் அதிகரித்தல்.
•    வெள்ளப்பெருக்கு ஏற்படுதல்.

4)    காட்டுவளத்தை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள்:-
•    சட்டங்கள் மூலம் காடழிப்பை கட்டுப்படுத்தல்:- மழைக்காடுகளைப் பேணிப் பாதுகாப்பதற்கான கொள்கைகள், சட்டங்கள் முதலான நடைமுறைச் செயற்பாடுகளைச் சரியான முறையில் முன்வைக்க வெண்டும். சட்டத்தை மீறி சட்டவிரோதமான முறையில் காடழிப்பை மேற்கொள்வெருக்கு எதிராக கடுமையாக தண்டனைகளை வழங்குவதுடன் அவற்றை முiறாகப் பின்பற்றவும் வேண்டும். மேலும் கைத்தொழிற்சாலைகளையோ அமைக்கின்றபோது காட்டுப் பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படுகின்ற தொழிற்சாலைகளை அமைப்பதற்குரிய அனுமதியை சட்டத்தின் மூலம் இரத்துச் செய்தல்.

•    மக்களுக்கு அறிவூட்டல்:- காடுகளின் பயன்பாடு, அவற்றின் முககியத்துவம் என்பவற்றை மக்கள் மத்தியில் எடுத்துரைப்பதுடன், காட்டுவழங்களிகன் பரப்பளவு குறைவடைகின்றபோது எதிர்நோக்கும் பிரச்சினைகளை தெளிவாக எடுத்துக் கூறுவதுடன், கருத்தரங்குகள் மற்றும் பல் ஊடகங்களின் உதவியுடன் அவற்றை மக்கள் விளங்கிக்கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தல். உதாரணமாக தொலைக்காட்சிகளில் காடழிப்பினால்; ஏற்படும் தீமைகளை ஒளிப்படக்காட்சிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கொண்ட நிகழ்ச்சிளை ஒழுங்குபடுத்தல்.

•    மீள்காடாக்கம்:- காடுகள் அழிக்கப்பட்ட இடங்களில் மீள்காடாக்கம் செய்வதும் புதிய காடுகளை உருவாக்குவதன் மூலமும் காட்டுவழத்தை அழிவிலிருந்து ஓரளவு மீட்கக்கூடியதாகவிருக்கும். அரச தேவைக்காக அல்லது அபிவிருத்திப் பணிகளுக்காக காடுகள் அழிக்கப்படுகின்றபோது அந்த காட்டுநிலப்பரப்பிற்குப் பதிலாக வேறோர் இடத்தில் காடுகளை உருவாக்குவதன் மூலம் காட்டு நிலப்பரப்பின் பரப்பளவை குறைவடையாமல் பாதுகாக்கலாம். அத்துடன் மனித பயன்பாட்டிற்கு அண்மைக்காலங்களில் உட்படாத ஒதுக்குப் புற நிலங்களில் புதிய காடுகளை உருவாக்குவதன் மூலமும் இது சாத்தியமாகும். மரநடுகை திட்டங்கள், மற்றும் காடுகளை பயிர்ச்செய்கை முறையாக மேற்கொள்ளல் என்பன இவ்வாறு மிள்காடாக்கலுக்கு வழிசெய்யும்.

•    மர எரிபொருளுக்குப் பதிலாக பிரதியீட்டுப் பொருட்களை பயன்படுத்தல்:- பெரும்பாலான வறிய நாடுகளில் விறகுகளே பெரும்பாலும் எரிபொருளாக பயன்படுத்தப்படுகின்றது.இதனை தவிர்ப்பதற்காக விளகுக்குப் பதிலாக மாற்று அதுவும் சூழலுக்குச் சார்பான எரிபொருட்களை பாவனைக்குட்படுத்துவதன் மூலம் விறகுக்ககாக அழிக்கப்படும் காடுகளை பாதுகாக்க முடியும். உயிர்வாயு , மின்சாரம் போன்ற மாற்று வலுவளங்களை எரிபொருளாகப் பயன்படுத்தல். ஆயினும் வறிய நாடுகளில் இம்முறைகளை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதுடன், செலவு கூடிய முறையாகவும் இருக்கும். எனவே மர எரிபொருளையும் வினைத்திறனாக பயன்படுத்தக்கூடிய அடுப்புக்களை உருவாக்கலும் பயன்படுத்தலும் ஓரளவு சாத்தியமானதாகும்.

•    மாற்று தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தல்:- வறிய நாடுகளில் வாழ்கின்ற பெரும்பாலோனோர் வேறு தொழில் வாய்ப்பின்மையால் தமது குடும்ப வருமானத்திற்காக  சட்டவிரோதமான முறையில் மரம் எடுத்தல், விறகு சேகரித்தல் முதலிய தொழில்களில் ஈடுபடுகின்றனர். எனவே இத்தொழில்களில் ஈடுபடுகின்ற மக்களுக்கு வேறு வருமானம் பெறக்கூடிய தொழில்வாய்ப்பக்களை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் காடுகைளை பாதுகாக்கலாம். உதாரணமாக கொங்கோ போன்ற ஆபிரிக்க நாடுகளில் விறகு சேகரித்தல் தொழிலில் இடுபடுபவர்களுக்கு சில அபிவிருத்தியடைந்த நாடுகளினால் உள்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட கைத்தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

•    சூழலின் தாங்குதிறனை தாண்டக்கூடிய வகையில் மந்தைகளை மேய்ப்பதனை தடை செய்தல் வேண்டும். குறி;பபபாக மலைச் சாய்வுகளில் தீவிர மேய்ச்சல் கட்டுப்படுத்த வேண்டும்.

•    காடடுத்தீ பரவுவதனை முறையாக செய்மதிகள், கதுவீ என்பவற்றின் துணையுடன் கண்ணகாணித்து அதனை மிக வேகமாகவும், காடுகளுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தா வண்ணமும் கட்டுப்படுத்துவதற்கரிய நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.

•    சனத்தொகை அதிகரிப்பினால் ஏற்படுகின்ற காடழிப்பை தடுப்பதற்க அரசினால் முறையாக திட்டமிடப்பட்ட குடியேற்றத் தி;ட்டங்களை காடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படாத வகையில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

•    கடற்கரையோர கண்டல் தாவரங்களை பாதுகாத்தல்:-


5)    அயன மழைக்காடுகளை பாதூப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள்:-
•    குடித்தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப கட்டங்களை அமைக்கவேண்டிய தேவை காணப்படுதல்
•    அயன மழைக்காடுகளை கொண்ட சில வளர்முக நாடுகளில் போதிய கல்வியறிவில்லாமை விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்துகின்றது.
•    விறகுசேகரித்தல், வெட்டுமரம் அரிதல் என்பன முக்கிய தொழில்நடவடிக்கையாக மேற்கொள்ளபவர்களை அதிலிரந்து மீட்கமுடியாமை.
•    பாரிய அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்துவதற்கான அரசியல் திட்டங்கள்.

6)    இலங்கையின் காடாக்கப் பெருந்திட்டம்:-
•    இலங்கையின் காட்டு வளத்தினைப் பேணும் நோக்குடன் தேசியக் காட்டுவளக் கொள்கைக்கான பாரிய திட்டத்தினை விவசாய, நில, காட்டுவள அமைச்சு முன்வைத்தது. இதன் பிரதான குறிக்கோள் காட்டுவளத்தின் நீண்டகால அபிவிருத்தி பற்றியதாக அமையப் பெறுகின்றது. இதன் மூலம் இயற்கைக் காட்டு வளத்தினைப் பேணுவதுடன், அங்கு அதில் வாழும் காட்டு விலங்குகளைப் பேணுவதன்மூலம் உயிர்ப்பல்லினத் தன்மையினையும் பேணக்கூடியதாக அமையப் பெறுகின்றது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் காட்டுவளம், மனிதர்களுக்குப் பெருமளவு காட்டு உற்பத்திகளை வழங்குவதற்கான ஆற்றல்களைக் கொண்டனவாகவும் அமையப் பெறும். இப்பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் பிரதான கூறுகளாவன,
•    காட்டின் பல் உயிரினத் தன்மையினையும், மண்வளம், நீர் என்பவற்றைப் பேணுதல்.
•    காட்டுவளத்தின் பயன்பாட்டினை அதிகரிக்கச் செய்தல்.
•    காடாக்கத்தினை ஏற்படுத்தல்.
•    காட்டுவள உற்பத்திகளை அதிகரிப்படையச் செய்தல்.

7)    இலங்கையில் மீள்காடாக்கம்:-
•    காடழிப்புக்குட்பட்ட அல்லது கைவிடப்பட்ட நிலங்களில் தாவரப்போர்வைகளை அமைத்தலை மீள்காடாக்கம் எனப்படும். சாய்வுகள் அல்லது ஏணைய இடவிளக்கவியல் மற்றும் மண்ணில் வளமற்ற தன்மையின் வரையறைகளினால் பயிர்ச்செய்கைக்குப் பொருத்தமற்றதெனக் கருதப்படும் நிலங்களில் காடகளை உருவாக்குதல்.
•    நீரேந்து பகுதிகளின் நிலத்தினை தவறான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துதல் பாரியமுறையில் நிலம் அருகிச் செல்லுதலை உண்டு பண்ணுகின்றது. இத்தகைய பகுதிகளின் நிலத்தின் உறுதிப்பாட்டிற்காக மண்ணரிப்பைத் தடுக்கும் உடனடி சடவடிக்கைகளை அல்லது நிரந்தரத் தாவரப்போர்வைகளை உண்டு பண்ணும் முயற்சிகள் மேற்கொள்ளுதல் வேண்டும்.

8)    நீரேந்து பகுதிகளில் மீள்காடாக்கத்தை மேற்கொள்வதற்கான காரணங்கள்
•    மண்ணின் வளத்தைப் பாதுகாத்தல்
•    சாய்வுகளின் கீழ்ப்பாக விவசாய நிலங்களில் அடையல்கள் படியாத வண்ணம் பாதுகாக்கப்படும்.
•    ஆற்றினால் எடுத்துச் செல்லப்படும் படிதலின் அளவினைக் குறைப்பதற்கு, இல்லாவிடின் நீர்த்தேக்கங்களின் நீரின் கொள்ளவு குறைவதுடன், நீர்மின் உற்பத்தியையும் பாதிப்படையச் செய்யும்.
•    நதிகளின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துதல். இதனால் ஈரப்பருவங்களில் வெள்ளப்பெருக்கு கட்டுப்படுத்தப்படுவதுடன், வரண்ட பருவத்தில் நதியின் பாய்ச்சல் அதிகரிக்கும்.
•    நிலவழுக்குகைகளினால் ஏற்படும் உயிர்ச்சேதம், பொருட்சேதங்களைக் குறைக்கலாம்.

9)    மீள்காடாக்கத்தின் நன்மைகள்:-
•    தாவரக் குவிப்புக்கள், மழைத்தகழ்களினால் ஏற்படும் மண்ணரிப்பைத் தடுக்கின்றன.
•    கழிவு நீரோட்டளவினைக் கட்டுப்படுத்தல்.
•    ஊடுவடிதலின் அளவினை அதிகரித்தல்.
•    தாவரங்களின் வேர்கள் மண்ணினைக் கெட்டியாகப் பிடித்துவைத்துப் பௌதிகத் தடைகளாக அமையப்பெறுதல் மண்ணரிப்பினை குறைவடைய செய்கின்றது.
•    மண்ணில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள நீரின் அளவு அல்லது மண்ணின் ஈரம் பாதுகாக்கப்படுகின்றது.
•    சிறிய மழையின் போது கழுவுநீரோட்டம் குறைந்து, ஊடுவடிதல் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படல்.

10)    தாவரத் தொடர்:-
    ஒரு தாவரக் குழுமத்தினது காலரீதியாக எதிர்பார்க்கப்படும் மாற்றமே தாவரத் தொடர் எனப்படுகின்றது. ஒவ்வொரு தாவரக் குழுமத்தினது காலரீதியான தொடர் வரிசை வித்தியாசமாயிருக்கும். வெறும் நிலத்தில் அல்லது காணியில் தோன்றும் தாவரக் குழுமம் முதனிலை தொடர் (ளநசநள) ஆகவும் அதனை அடுத்து சூழலுக்குகந்த இன்னுமொரு தொடர் (ளநசநள) தோன்றும். ஆகவே சூழலின் உயிரினக் காரணிகளினதும் மண்ணினதும் கால அடிப்படையான விருத்தியோடு தோன்றும் தொடர்களயே (ளநசநள) தாவரத் தொடர் எனலாம்.
    ஒரு தாவரக் குழுமம் வளர்ந்து இடத்தைப் பயன்படுத்தி பின் அப்குதியை அக்குழுமம் தனக்கே பொருத்தமற்றதாக்கிக் கொள்கின்றது. ஆகவே ஒரு குழுமத்துள் உள்ள தாவர இனங்கள் தமது சூழலையே மாற்றியமைக்கும் பொழுது தாவரத் தொடர்ச்சி ஏற்படுகின்றது. இத்தகைய மாற்றங்கள் நிகழுவதற்குப் பலநூற்றாண்டுகள் தேவையாகும்.
    கைவிடப்பட்ட வயலொன்று இத்தொடர்ச்சியை அறிவதற்கு நல்ல இடமாயிருக்கும். தொடக்கத்தில் வருடாந்த புல்வகைகள் அப்பகுதியுள் தோன்றும். இரண்டு அல்லது மூன்று வருடங்களின் பின் என்றுமுள்ள புல்வகைகள் தோன்றி 10 இலிருந்து 50 வருடங்களுள் புதர்ச்செடிகளும் மரங்களும் தோன்றத் தொடங்கும். இறுதியாக காடுகள் வளரத் தொடங்கும். ஏரிகளும் சிறந்த உதாரணங்களாயமையலாம். ஏரியினுள் அடையல்கள் நிரம்ப அப்பகுதியின் உயிரினத்தில் மாற்றமேற்பட்டு சதுப்புகளாகி, ஈரப்புல் நிலமாகி இறுதியாக காடுகளாக மாறுகின்றது.


11)    இலங்கையின் மழைக்காடுகளையும், கண்டற்காடுகளையும் முகாமைத்துவப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள்:-
•    விறகிற்காக கண்டற்காடும், மழைக்காடும் அழிவதைத் தடுக்க மாற்றுச் சக்திவளப் பாவனையை அதிகரித்தல்.
•    பொருத்தமான இடங்களில் கண்டற்காடுகளை மிள்நடுகை செய்தல்.
•    சுற்றுலா விடுதிகள், வீடுகள், இறால் வளர்ப்புப் பண்ணைகள் உப்பளங்களை உருவாக்குதல் போன்றவற்றின் கட்டுமானத்திற்காக கண்டற்காட்டுப்பிரதேசங்களை பயன்படுத்துவதைத் தடைசெய்தல்.
•    தற்போதுள்ள மழைக்காடகளைப் பாதுகாப்பதற்கு மீள்நடுகைத் திட்டங்களை ஏற்படுத்துதல்.
•    பல்தேசியக் கம்பனிகளுக்கு காடகளை விற்பதைத் தடுக்கும் சட்ட நடைமுறைகளை ஏற்படுத்துதல்.
•    கண்டற்காடுகள், மழைக்காடகள் ஆகியவற்றிற்கு அருகெ வாழும் மக்கள் சமூகங்களின் ஒத்துழைப்பைப் பெறுதல்.
•    பொதுமக்கள், பாடசாலைச் சிறார்கள் மத்தியில் கண்டற்காடு, மழைக்காடு என்பவற்றின் பயன்பாட்டுத் தன்மை பற்றியும் அவற்றின் பெறுமதி பற்றியும் விழுப்புணர்வை ஏற்படுத்தும் திட்டங்களை உருவாக்கதல்.
•    தற்போதுள்ள இயற்கை ஒதுக்கிடங்களைப் பேணுதல்.
•    மழைக்காட்டுத் தாவரங்கள் மரங்களில் தொற்றக்கூடிய தாவரநோய், பங்கஸ் என்பவற்றை இனம்காணவும் தடுக்கவும் ஆய்வுகளை மேற்கொள்ளத்தக்க வசதிகளை ஏற்படுத்தல்.
•    சட்டவிரோதமானமுறையில் மரங்களைத் தறிப்பவாகளுக்கெதிராக அதிகபட்டச குற்றப்பணம் அறிவிட நடவடிக்கை எடுத்தல்.
•    வனவளத்தினைக்களம், வனவிலங்குப் பாதுகாப்புத் தினைக்களம், மகாவலி ஆணைக்குழு போன்ற நிறுவனங்களுக்கிடையே நெருங்கிய தொடர்புகளை வலுப்பெறச் செய்தல்.
•    சர்வதேச நிறுவனங்கள்:-
  IUCN - இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான ஒன்றியம்.
  WWF – உலக விலங்கின வாழ்வக்கரிய நிதி
  MAB – மனிதன் மற்றும் உயிரின மண்டலத் திட்டம்

Akshayan BA (Hons) special in Geography  

0 comments:

Post a Comment