06:51
1
சமிபாடு (அல்லது செரிமானம் அல்லது செரித்தல்) (Digestion) என்பது, உண்ணப்படும் உணவானது, குருதியினூடாக உறிஞ்சப்பட்டு உடல் தேவைகளுக்கு பயன்படுவதற்கு வசதியாக பொறிமுறை, வேதியியல்முறைகளினால் உடலினுள் வைத்து உடைக்கப்பட்டு சிறு மூலக்கூறுகளாகமாற்றப்படுவதைக் குறிக்கும்.


 உடலானது உண்ட உணவைப் பிசைந்தும், இளக்கியும்,  பிரித்தும் பகுத்தும் தனது தேவைக்கு ஏற்றவாறு அதில் இருந்து ஊட்டச்சத்துக்களை உடலினுள் உறிஞ்சிக்கொண்டு, மிகுதியான வேண்டாத சக்கையை வெளித்தள்ளிவிடும்.

சமிபாட்டுத் தொகுதி

வாய்

பாலூட்டிகளில், சமிபாட்டுக்கான தொடக்கநிலை வாயிலேயே நடைபெறுகின்றது. மாந்தர்கள் உணவை வாயில் இட்டவுடன் இந்த சமிபாடு ஆரம்பமாகின்றது. முதலில் உணவானது பற்களால் மெல்லப்பட்டு சிறு துணிக்கைகளாக உடைக்கப்படுகின்றது. இதில் உதவுவதற்காக நாக்கு உணவை பிரட்டிக் கொடுக்கிறது. வாயில் ஊறும் உமிழ்நீர் உணவை ஈரப்படுத்திக் கொடுப்பதுடன், உமிழ்நீரில் உள்ள அமிலேசு போன்ற நொதியானதுமாப்பொருளை வேதியியல் மாற்றத்துக்கு உட்படுத்துகின்றது. பல்லால் மெல்லும்பொழுது மேலும் உமிழ்நீர் சுரக்கின்றது. ஈரப்படுத்திய உணவு சிறு கவளங்களாக தொண்டை வழியாக கீழிறங்கி உணவுக்குழாயை/களத்தை அடைகின்றது.


உணவுக்குழாய்/களம்

இந்த உணவுக்குழாய்/உணவுக்குழல்/களம் சுமார் 20-30 செ.மீ நீளமுள்ளது. இந்த களத்தின் தசைகள் சுருங்கியும் விரிந்தும் ஏற்படுத்தும் சுற்றிழுப்பசைவு எனப்படும் அலை போன்ற அசைவுகளால் உணவானது உணவுக்குழாயில் நகர்ந்து இரைப்பையை அடைகின்றது.


இரைப்பை

இரைப்பையில் சமிபாட்டு நொதியங்கள் சில உருவாக்கப்படுகின்றன. உணவை உடைக்கும் வேலை வயிற்றிலும் தொடர்கின்றது. இங்கே வயிற்றுத் தசைகள் சுருங்கி விரிந்து உணவைக் கடைவதன் மூலம் அதனை உடைத்து நொதியத்துடன் கலக்குகின்றது. அத்துடன் அங்கே சுரக்கப்படும் அமிலத் தன்மையான நீரானது அங்கு சுரக்கப்படும் நொதியங்கள் சிக்கலான மூலக்கூறுகளை வேதியியல் செயல்முறையில் உடைத்து எளிய மூலக்கூறுகளாக மாற்றுவதற்கு உதவுகின்றன. அத்துடன் விட்டமின் B -12, அல்ககோல் போன்ற சில பொருட்கள் இந்த இரைப்பைப் பகுதியிலேயே நேரடியாக உறிஞ்சப்படுகின்றன.


முன் சிறுகுடல்

இரைப்பையையும், சிறுகுடலையும் இணைக்கும் வளைந்த அமைப்பாகும். இதன் வளைந்த பகுதிக்குள்கணையம் அல்லது சதையி காணப்படும். இந்த கணையத்திலிருந்து சுரக்கப்படும் கணையநீரில் பல மூலக்கூறுகளை வேதியியல் செயல்முறையில் உடைக்கக்கூடிய நொதிகள் காணப்படும். அத்துடன்பித்தப்பையினால் சுரக்கப்படும் பித்தநீரானது அங்கே தொழிற்படும் நொதியங்களுக்கு உதவுவதற்காக உணவைகாரத் தனமை உள்ளதாக மாற்றும்.


சிறு குடல்

இந்த சிறுகுடல் அல்லது இரையகக் குடல் பாதையிலேயே அதிகளவில் உறிஞ்சல் நடைபெறுகின்றது.


பெருங்குடல்

மேலதிக நீரானது பெருங்குடல் பகுதியில் உறிஞ்சப்படும்.


குதம்

கழிவுப் பொருட்கள் குதத்தினூடாக வெளியேற்றப்படுகின்றன.



நன்றி
விக்கிபீடியா 

1 comments: