07:56
0
சுமார் 6400km ஆரையை உடைய புவியின் உள்ளமைப்பானது புவியோடு, இடையோடு, கோளவகம் ஆகிய பிரதான மூன்று படைகளால் உருவானதாகும்.

புவியின் உள்ளமைப்பு பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு புவிபௌதீகவியலாளர்கள் எரிமலை கக்குகைகளை  அடிப்படையாகக் கொண்டு அவற்றில் இருந்து வெளியேறிய பொருட்களின் அடிப்படையில் புவியின் உட்பகுதி பற்றிய சில இயல்புகளை குறிப்பிட்டனர். பின்னர் புவிப்பௌதிகவியலாளர்களுக்கு புவி நடுக்கங்களும் அவற்றினால் உருவாகின்ற புவிநடுக்க அலைகளும் புவியின் உள்ளமைப்பு பற்றிய தகவல்ளை விளக்குவதற்கு உதவியதாக இருந்தது.

   புவிநடுக்க அலைகள்:-
•    புவிநடுக்கம் ஒன்று உருவாகின்றபோது முதன்மை அலை, துணைஅலை, மேற்பரப்ப அலை என மூன்று அலைகள் உருவாகின்றன. புவிநடுக்கம் ஒன்று உருவாகின்ற போது அதனுடைய சக்தி சக்தி புவிடுக்க அலைகளுக்கூடாக பயணம் செய்கிறது. இப் புவிநடுக்க அலைகள் மூன்றும் பிரதானமாக உடலக அலை, மேற்பரப்பு அலை என இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.
•    உடலக அலை (Body wave)  எனும்போது புவியின் உட்பகுதியை ஊடறுத்து செல்கின்ற அலைகளாகும். அதாவது முதன்மை அலை, துணைஅலை என்பன அடங்கும்.
•    மேற்பரப்பு அலை (Surface wave)  எனும் போது இவை புவியின் மேற்பரப்பிற்கூடாக நீர் போன்று பயம் செய்பவை ஆகும். இந்த மேற்பரப்பலைகள் அவற்றின் தாழ் மீடிறன், நீண்;டநேரம் போண்ற காரணத்தினால் உடலக அலையை விட வேகம் குறைந்தவையாக காணப்படுகின்றது.
•    முதன்மை அலை (Primary wave) - முதன்மை அலைகள் நெடுங்கோட்டு அமுக்க அலைகள் எனப்படுகின்றது. இது 7-13km/s வேகத்தை உடையதாகவும் திண்ம திரவப் பொருட்களை ஊடுருவி செல்பவை ஆகவும் காணப்படுகின்றது.
•    துணை அலை (Secondary wave)  -துணை அலையானது அதிர்வு அலைகள் எனப்படுகிறது. இவை 4-7km/s வேகத்தில் பயணிப்பவையாகவும் திண்மப் பொருட்களை மாத்திரம் ஊடுருவிச் செல்பவையாகவும் காணப்படுகின்றது.
•    மேற்பரப்பு அலை (Surface wave) - மேற்பரப்பு அலை கடல் அலைகளை போன்றதாகவும் சுழற்சி மற்றும் அதிர்வை உண்டாக்கக் கூடியதாகவும் உள்ளது. இவற்றினுடைய வேகம் 2km/s  இலம் குறைந்ததாக காணப்படுகிறது. இவை மேற்பரப்பில் பயணம் செய்வதுடன்  புவிநடுக்கத்தின் போது பாதிப்பை ஏற்படுத்தும் அலையாகவும் காணப்படுகிறது.


 புவியின் உள்ளமைப்பும் இயல்புகளும்:-
•    புவிநடுக்க அலைகளினடிப்படையில் பெறப்பட்ட தகல்வகளுக்கமைவாக புவியானது புவியோடு, இடையோடு, கோளவகம் ஆகிய பிரதான மூன்று படைகளை கொண்டது கண்டறியப்பட்டது.

1)  புவியோடு
•    புவியின் மேலமைந்த படையே புவியோடு எனப்படுகிறது. புவியோடானது  கீழ் நோக்கி 70Kmவரையில் அமைந்து காணப்படுகிறது. புவியோடாணது  பிரதானமாக கண்ட ஓடு, சமுத்திர ஓடு என இரண்டு பிரிவுகளாக பிரித்து நோக்கப் படுகின்றது.
•    நிலத் திணிவுகளை கொண்டுள்ள பகுதி  கண்டஓடு எணப்படுகிறது. இது அலுமினியம்,சிலிக்கன்,பொட்டாசியம் போன்றவற்றின் கூட்டால் அமைந்த 'FELSIC'  எனப்படும் பாறை வகையை சேர்ந்தது ஆகும். கிறனைட் பாறை அப்பாறைகளில் ஒன்றாகும். கண்ட ஓடு அதிகளவில் சிலிக்கா மற்றும் அலுமினியத்தை கொன்டிருப்பதனால் 'SIAL'  படை என அழைக்கப்படுகிறது.  கண்ட ஓட்டின் உடைய அடர்த்தி 2.7 g/cm3 ஆகக் காணப்படுவதுடன் சராசரியாக 30km    வரையான தடிப்பினையும் உடையதாகும். கண்ட ஓட்டினுடைய மேல் அரைப்பகுதியையும் கீழ்அரைப்பகுதியையம் பிரிக்கும் எல்லையாக கொண்றாட் இடைவெளி காணப்படுகின்து.
•    சமுத்திர நீர் பரப்புக்களை கொண்டமைந்த சமுத்திர ஓடு எனப்படுகிறது.இதனுடைய தடிப்பு   15km வரையில் காணப் படுகின்ற போதிலும் சராசரியாக 0-10km வரையில் காணப்படுகிறது. சமுத்திர ஓடானது இரும்பு. மகனீசியம், சிலிக்கேற் முதலியவற்றால் உருவாகிய 'ஆயுகுஐஊ' வகை பாறை வகையைச் சேர்ந்தது. உதாரணமாக பசால்ட் பாறையை குறிப்பிடலாம்.
•    சமுத்திர ஓடு அதிகளவில் சிலிக்கா மற்றும் மகனீசியத்தை கொண்டிருப்பதால்  'SIMA' என அழைக்கப் படுகிறது. இதனுடைய அடர்த்தி. 3.0g/cm3 ஆகக் காணப்படும். புவியோட்டையும் இடையோட்டையும் பிரிக்கும் எல்லை மோகோ இடைவெளி எனப்படும்.

.2)  இடையோடு
•    புவியோட்டின் எல்லையில் இருந்து 2900km ஆழம் வரையிலான பகுதி இடையோடு எனப்படுகிறது. இடையோடானது சிலிக்கற் பாறைகளின் கூட்டினால் உருவாகி உள்ளது. இடையோட்டுப் பகுதியில் காணப்படுகின்ற உயர் வெப்பநிலை காரணமாக (1400-4000) பாறைகள் குழம்பு நிலையில் காணப்படுகிறது. இடையோட்டுப் பகதியில் பாறைகளின் வெப்பம் அமுக்கம் காரணமாக இடம் பெறுகின்ற மேற்காவுகை ஓட்டத்தினால் தகட்டசைவுகளுடன் தொடர்பான நிகழ்வுகளுக்கு இப்படை காரணமாக அமைகிறது. இடையோடானது மேல்இடையோடு, கீழ் இடையோடு என இரன்டாக பிரிக்கப் படுகின்றது.
•    புவியோட்டின் எல்லையில் இருந்து 650km வரையுமான பகுதி மேல் இடையோடு என அழைக்கப் படுகின்றது. மேல் இடையோட்டின் உடைய அடர்த்தி  3.4 - 4.3  g/cm3 ஆகக் காணப்படுவதுடன் வெப்பநிலையானது  1400-3000 oC வரையில் காணப்படுகின்றது.
•    கீழ் இடையோடு மேல் இடையோட்டின் எல்லையில் இருந்து குறிப்பாக 650-2900km வரையிலும் கீழ் இடையோடு அமைந்து காணப்படுகிறது. இப்பகுதியின் உடைய அடர்த்தி 4.3-5.4 g/cm3 ஆகவும் சராசரி வெப்பநிலை 3000 oC ஆகவும் காணப்படுகிண்றது. இடையோட்டுக்கு கீழே கோளவகத்தையும் இடையோட்டையும் பிரிக்கின்ற எல்லையாக கட்டன்பேக் எல்லை அமைந்துள்ளது.

3)  கோளவகம்
•    இடையோட்டுக்கு கீழே 2900 - 6378 km வரையிலும் அமைந்து காணப்படுகின்றது. இது சுமார் 350km ஆரை உடைய பகுதி கோளவகம் ஆகும். கோளவகப் பகுதியில் 80%  இரும்பும் மற்றும் நிக்கல் போனறவை அதிகளவில் காணப்படுவதுடன், இங்கு 5000 - 6000 oC அளவிலான உயர் வெப்பநிலை நிலவுவதற்கும் காரனமாக அமைகின்றது.


•    பூமியின் உடைய சராசரி அடர்த்தி 5515மஅ ஆகவும் காணப்படுகின்றது. ஆனால் கோளவகத்தின் உடைய அடர்த்தி மிக உயர்ந்தளவில் 15 g/cm3 வரையில் காணப்படுகின்றது. புவியின் உடைய தடிப்பில் அண்ணளவாக 56% இனை கொன்டிருக்கின்ற கோளவகமானது வெளிக்கோளவகம் , உட்கோளவகம் என இரண்டாகப் பிரிக்கப்படுகின்றது.
•    புவி மேற்பரப்பில் இருந்து 2900 – 5150 km வரையுமான பகுதி வெளிககோளவகம் என அழைக்கப்படுகின்றது. வெளிக் கோளவகம் திரவ நிலையில் காணப்படுவதுடன் இரும்பு, நிக்கல், சல்பர், ஒட்சிசன் போன்ற மூலகங்களையும் கொன்டுள்ளது. இப்பகுதியின் அடர்த்தி    10 - 12.5 cm3 ஆகக் காணப்படுவதுடன்   4000-5000 oC வரையிலான வெப்பத்தையும் கொண்டுள்ளது.
•    வெளிக் கோளவத்தின் எல்லையில் இருந்து குறிப்பாக 5150 – 6378 km வரையிலான பகுதி உட்கோளவகம்  எனப்படுகிறது. இது கடினமான பாகு நிiயில் கானப்படுவதுடன் இரும்பு, நிக்கல், சல்பர், காபன், ஒட்சிசன், பொட்டாசியம், சிலிக்கன் போன்ற மூலகங்களையும் கொன்டுள்ளது. இப்பகுதியின் உடைய அடர்த்தி 15 g/cm3 ஆகக் காணப்படுவதுடன் வெப்பநிலை 5000-6000 oC வரையிலும் உள்ளது.
•    உட்கோளவகத்தையும், வெளிக்கோளவகத்தையும் பிரிக்கின்ற எல்லையானது லெக்மன் இடைவெளி என அழைக்கப்படுகின்றது.  

0 comments:

Post a Comment