கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் படி இப்பரீட்சையில் சித்தியடைந்து தகைமை பெற்ற மாணவர்களை 2014 ஆம் ஆண்டில் பிரபல சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் 6 ஆம் தரத்தில் அனுமதிப்பதற்கான் வெட்டுப்புள்ளிகள் நேற்று கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன . அதன் பிரகாரம் தமிழ் மொழி மூல பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வருமாறு
இருப்பினும் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் வெற்றிடங்கள் இல்லாமையினால் இக்கல்லூரிக்கான வெட்டுப்புள்ளிகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
ஆண்கள் பாடசாலை பாடசாலை வெட்டுப் புள்ளிகள்
டி . எஸ் . சேனநாயக்க , கொழும்பு -08 174
ஹார்ட்லி கல்லூரி , பருத்தித்துறை 167
யாழ்ப்பாணம் இந்து கல்லூரி , யாழ்ப்பாணம் 164
புனித மைக்கல் கல்லூரி , மட்டக்களப்பு 164
ஸாஹிரா கல்லூரி , கல்முனை 162
ஆர்.கே. எம் . ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி , திருகோணமலை 159
இந்துக் கல்லூரி , கொழும்பு -04 154
பெண்கள் பாடசாலை பாடசாலை வெட்டுப் புள்ளிகள்
முஸ்லிம் மகளிர் கல்லூரி , கொழும்பு - 04 , 175
வின்சன்ட் மகளிர் உயர் பாடசாலை , மட்டக்களப்பு 172
கண்டி பதியுதீன் மகளிர் கல்லூரி , கண்டி 168
புனித அந்தோனியார் மகளிர் கல்லூரி , கண்டி 167
ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி , திருகோணமலை 166
வேம்படி மகளிர் உயர் கல்லூரி , யாழ்ப்பாணம் , 163
மஹ்மூத் மகளிர் கல்லூரி , கல்முனை 162
மீரா பாலிகா மகளிர் கல்லூரி , காத்தான்குடி 156
கலவன் பாடசாலை
பாடசாலை வெட்டுப் புள்ளிகள்
ஹேம்பிரிஜ் த.வி. , கொட்டகலை 165
ஸாகிரா மு.ம.ம. வித்தியாலயம் , மாவனல்லை 163
கொக்குவில் இந்து வித்தியாலயம் , கொக்குவில் 162
அல் - மின்ஹாஜ் முஸ்லிம் ம.ம. ஹபுகஸ்தலாவ 160
மதினா முஸ்லிம் ம.ம. வித்தியாலயம் மடவளை பஸார் 159
அலிகார் முஸ்லிம் மத்திய கல்லூரி , ஏறாவூர் 159
விவேகானந்தா கல்லூரி , கொழும்பு - 13 157
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் , வவுனியா 156
கெகுணுகொல்ல முஸ்லிம் ம . வித்தியாலயம் , கெகுணுகொல்ல 156
பதூரியா முஸ்லிம் ம.ம. வித்தியாலயம் , மாவனல்லை 156
கிண்ணியா முஸ்லிம் . ம . ம , வித்தியா . கிண்ணியா 155
மதினா முஸ்லிம் ம.ம. வித்தியாலயம் , சியம்பலாஹஸ்கொட்டுவ 152
0 comments:
Post a Comment