இன்று வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சைப் பெறுபேற்றின் பிரகாரம் உயிரியல் துறையில் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மாணவி செல்வி ரவிசங்கர் கீர்த்திகா முதலிடம் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இவரது இசட் புள்ளி 2.1708 அம்பாறை மாவட்டத்தில் முதலிடம். தேசியரீதியில் 200வது இடம். காரைதீவு வரலாற்றில் உயிரியல்துறையில் ஏலவே மாவட்டமட்டத்தில் உயிரியல்துறையில் முருகேசு கேதுஜா என்றமாணவி முதலிடம் பெற்றிருந்தார். கீர்த்திகா முதலிடம் பெற்ற இரண்டாமவராவார்
காரைதீவு விபுலானந்த மத்தியகல்லூரியில் பயின்ற செல்வி கீர்த்திகாவை அவரது வீட்டில் சந்தித்து கலந்துரையாடியபோது கிடைத்த செவ்வியைத் திரட்டித்தருகிறோம்.
கீர்த்தியா தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையில் 2004இல் இப்பிராந்தியத்தில் கூடுதல்புள்ளியைப்பெற்றவர் என்பதோடு கடந்த க.கொ.த.சாதாரணதரப்பரீட்சையில் 9ஏ அதிசிறப்புச்சித்திபெற்றுச்சாதனை படைத்தவராவார்.
செல்வி கீர்த்திகா ரவிசங்கர் யோகேஸ்வரி தம்பதிகளின் 2வது புதல்வியாவார். மூத்த புதல்வன் புஸ்பகாந் காரைதீவு சண்முகா மகாவித்தியாலய வரலாற்றில் கலைத்துறையில் 3ஏ பெற்று முதல்தடவையாக சாதனை படைத்தவர். தங்கை கேதுஜா க.பொ.த. சாதாரணதரப்பரீட்சைக்கு இம்முறை தோற்றியவராவார்.
கீர்த்திகா கூறுகையில்,
எனது இலட்சியம் வைத்தியராக வரவேண்டும் என்பதே. அதன் முதற்கட்டத்தை அடைய வைத்த இறைவனுக்கு முதலில் நன்றியைக் கூறுகின்றேன். நான் இச்சாதனையை நிகழ்த்துவேன் என எதிர்பார்த்திருக்கவில்லை.
எனினும் இச்சாதனை கிடைத்தமை பற்றி சந்தேசாமடைகிறேன். இதற்கான நன்றியை பெற்றோர் கற்பித்த ஆசிரியர்கள் அண்ணா நண்பர்கள் அனைவருக்கும் கூறுகின்றேன்.
நான் ரி.வி. ரேடியோ பத்திரிகை பர்ர்ப்பதுண்டு. எனினும் படிப்பதில் கூடுதலான நேரத்தை செலவழித்துள்ளேன்.
ரியுசனுக்குப் போவதுண்டு. பொதுவாக 1979 ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற உயர்தரப்பரீட்சை வினாத்தாள்களை செய்து பார்த்தேன். பயிற்சி எடுத்தேன்.
படிக்கும்போது வேறு பக்கம் கவனத்தை திருப்பாமல் படித்தால் யாரும் சாதனை படைக்கலாம் என்றார்.
விபுலானந்த மத்தியகல்லூரி அதிபர் தி.வித்யாராஜனின் சகோதரனின் புதல்வி கீர்த்திகா என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment