கல்விப் பொது தராதர உயர் தரப் பரீட்சை வினாத்தாள் மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்களை
எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலை மூலமான பரீட்சாத்திகள் மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்களை அவர்களுடைய பாடசாலை அதிபரிடம் கையளிக்க முடியும்.
தனியார் பரீட்சாத்திகள் எதிர்வரும் 26ஆம் திகதி பத்திரிகைகளில் வெளியாகும் அறிவுறுத்தல்களுக்கு அமைய விண்ணப்ப படிவத்தை நிரப்ப முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை நேற்று வெளியான கல்விப் பொது தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்று (21) தபாலிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment