21:46
0
இன்று அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் ஒவ்வொன்றிலும் உலகமயமாக்கல்
கூடியளவு செல்வாக்குச் செலுத்துவதை நாம் தெளிவாகக் காண்கின்றோம் . அந்தவகையில் இது கல்வித் துறையிலும் பூரணமாக ஊடுருவியுள்ளது .

எனவே , எமது கல்வித்தரத்தை உலக தரத்திற்கு மேம்படுத்த வேண்டிய அவசியம் எமக்கு ஏற்பட்டுள்ளது என்று றோசாலயா கலை , கலாசார சேவை நிலையத்தின் உபதலைவர் வே . பேரின்பம் தெரிவித்தார் .

பெரியகல்லாறு புனித அருளானந்தர் வித்தியாலய அதிபர் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற றோசாலயாவின் ஆங்கில எழுத்துக்கூட்டற் போட்டியில் பங்குபற்றியவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

அவர் மேலும் கூறுகையில் ,

இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக்கால த்தில் ஆங்கில மொழி மூலமே கல்வி புக ட்டப்பட்டு வந்தது .

நாடு சுதந்திரமடைந்த பின்னர் தாய் மொழி க்கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது . அதன் பின்னர் ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவம் குறைவடையத் தொடங்கியது .

எனினும் , தற்போது மீண்டும் ஆங்கிலக் கல்வியின் அவசியம் அரசினால் நன்று உணரப்பட்டு அதற்கான ஆயத்தங்களை ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயமாகும் . இதனால் க.பொ.த. மாணவர்களுக்கான பரீட்சையில் ஆங்கில மொழியில் கட்டாயம் குறிப்பிட்டளவு புள்ளிகளைப் பெற வேண்டும் என்ற நிபந்தனையை புதிதாக உருவாக்கியுள்ளதை தாங்கள் அறிவீர்கள் .

இது அரசு அண்மையில் எடுத்த முடிவாகும் .

எனவே , அரசைப் பொறுத்த வரையில் மாணவர்களிடையே ஆங்கிலக் கல்வி உட்புகுத்த வேண்டுமென்பதில் உறுதி பூண்டுள்ளதையே இது எடுத்துக்காட்டுகின்றது .

எனவே , மாணவர்கள் ஆங்கிலக்கல்வி இன்றேல் எதிர்காலத்தில் கல்வித்துறையில் பிரகாசிக்க முடியாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும் .

உலகளாவிய புலமைப்பரிசில் திட்டங்களில் நீங்கள் உள்வாங்கப் படுவதற்கான அடிப்படைத் தகுதியாகவும் ஆங்கில மொழியாற்றலே கணிக்கப்படுகின்றது . இது மாணவர்களுக்கு மட்டுமின்றி தொழில் செய் வோருக்கான புலமைப் பரிசில்களுக்கும் பொருந்தும் .

அத்துடன் இன்று உயர் கல்வி நிறுவனங்கள் தனியார் துறையினரால் நாடு தழுவிய ரீதியில் எல்லா இடங்களிலும் பரவலாக அமைக்கப்பட்டிருக்கின்றன . அங்கும் அநேகமாக ஆங்கிலம் மூலமே போதனை கள் இடம்பெறுகின்றன .

எனவே , உங்களிடம் பொருளாதார வசதி இருந்தாலும்கூட ஆங்கில அறிவின்றேல் அதற்கான வாய்ப்பைக்கூட இழந்து விடுவீர்கள் .

எனவே நீங்கள் கல்வியின் உச்சத்தைத் தொட வேண்டுமானால் நிச்சயமாக ஆங்கில கல்வியில் அக்கறையும் ஆர்வமும் உள்ளவர்களாக ஆக வேண்டும் .

இந்த நோக்கத்தை அடைவதற்காகவே உங்களுக்கு இத்தகைய போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றார் .

0 comments:

Post a Comment