00:51
0
தற்போது மாணவர்கள் பாடசாலைக் கல்வியை நாடுவதை விட தனியார் கல்வியையே அதிகம் நாடுகின்றனர் .
அதற்கு காரணம் சரியான முறையில் அவர்களுக்கு வழிகாட்டல் இல்லாமை என கல்வி அமைச்சர் குருகுலராஜா தெரிவித்தார் .

ஆம் ஆண்டு க 2013 . பொ . த உயர் தர பரீட்சையில் வடமாகாண பாடசாலைகளில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற இருபது சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றது . இதன் போதே அமைச்சர் அதனைத் தெரிவித்தார் .

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா உரையாற்றுகையில் ,

இந்த சாதனைகள் யாவும் மாணவர்களை சேர்வதுடன் அவர்களை பெரிதும் ஊக்குவித்த பெற்றோர்கள் பாடசாலை ஆசிரியர்களின் பங்களிப்பே அவர்களை வெற்றி பாதைக்கு இட்டுச் சென்றுள்ளது .

மேலும் வடக்கில் கல்வி பாரிய பிரச்சனையை எதிர்நோக்கியுள்ளது . வடக்கின் கஷ்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் குறிப்பாக மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட தேசிய பாடசாலைகளில் கூட ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது . இதனால் அந்த பாடசாலைகள் கல்வியில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளன .

ஆனால் யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் வளம் அதிகம் காணப்படுகிறது . அவர்களை தூர இடங்களுக்கு ஆசிரியராக நியமக்க தீர்மானம் எடுக்க முனைந்தால் ஆசிரியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் . எனவே யாரும் முன்வந்து போவதில்லை எப்போது அவர்களிடையே மனமாற்றம் ஏற்படுகின்றதோ அப்போது தான் வடக்கின் கல்விப் பயணமும் இடைநிற்காது தொடரும் . அதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு மிக மிக அவசியமானது என்றார் .

மாணவர்கள் சரியான வழிகாட்டல் இன்மையால் தனியார் கல்வியை அதிகம் நாடுகின்றனர் ஆகவே வடக்கின் கல்விப் பயணம் தொடர்ந்து சமுதாயம் மிளிர வேண்டுமாயின் மாணவர்களுக்கு சரியான விதத்தில் வழிகாட்டல்கள் அமைந்தால் வடக்கின் கல்வியின் எதிர்காலம் நன்றாக மிளிரும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார் .

மேலும் இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் வடமாகாண கல்வி பணிப்பாளர் செல்வராசா , வடமாகாண போக்குவரத்து கடற்தொழில் அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் , மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் பிரதம பொறியியலாளர் குகநேசன் , மாணவர்கள் , ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .

0 comments:

Post a Comment