இலைக்குரியமரபுப்பெயர்கள்
இலை - மா,பலா,வாழை
ஓலை - தென்னை,பனை,கமுகு,ஈஞ்சு,தாழை
தாள் - நெல்,புல்
பிஞ்சுக்குரிய மரபுப்பெயர்கள்
கச்சல் - வாழையின் இளம்பிஞ்சு
குரும்பை - தென்னையின் இளங்காய்
நுங்கு - பனையின் இளங்காய்
வடு - மாவின் இளம்பிஞ்சு
மூசு - பலாவின் பிஞ்சு
குலைக்குரிய மரபுப்பெயர்கள்
குலை - வாழை,முந்திரி,ஈஞ்சு,என்பவற்றின் காய்த்தொகுதி
கொத்து - மா,புளி,என்பவற்றின் காய்த்தொகுதி
கதிர் - நெல்,சோளம்,என்பவற்றின் காய்த்தொகுதி
தாறு - வாழைக்குலை
வித்துக்குரிய மரபுப்பெயர்கள்
கொட்டை - மா,பலா,புளி
மணி - நெல்,சோளம்
விதை - கத்தரி
முத்து - ஆமணக்கு
உள்ளீட்டுக்குரிய பெயர்கள்
அரிசி - நெல்,கம்பு,வரகு,திணை
சதை - மா,வாழை
சுளை - தோடை,பலா
பருப்பு - கத்தரி,மிளகாய்
பிற மரபுப்பெயர்கள்
ஆட்டுமலம் - பிழுக்கை
கழுதைமலம் - விட்டை
பறவைமலம் - எச்சம்
மாடு,எருமைமலம் - சாணம்
யானை,குதிரை,ஒட்டகம்
என்பவற்றின் மலம் - இலத்தி,இலண்டம்
நிலங்கள்
குறிஞ்சி - மயலயம்,மலை சார்ந்த இடமும்
மருதம் - வயலும்,வயல் சார்ந்த இடமும்
முல்லை - காடும்,காடு சார்ந்த இடமும்
பாலை - மணலும்,மணல் சார்ந்த இடமும்
நெய்தல் - கடலும்,கடல் சார்ந்த இடமும்
ஆடு மேய்ப்பவன் - இடையன்
பசு மேய்ப்பவன் - ஆயன்,இடையன்
குதிரை,யானை,தேர்செலுத்துவபன் - வலவன்
வானூர்தி செலத்துவபன் - வலவன்
அக்சயன்
மகிழ்ச்சி
ReplyDeleteதொழில் வினையர்கள்
ReplyDeleteமா
ReplyDelete