இலங்கையின் குடியிருப்புகளை பிரதானமாக நகரக்குடியிரப்புகள், கிராம குடியிருப்புகள் என வகைப்படுத்தமுடியும். இலங்கையின் உலர்வலயத்தில் காணப்படும் கிராமியக் குடியிருப்புக்களில் பெரும்பாலானவை விவாசய நடவடிக்கைகளிலே பெரிதும் தங்கியுள்ளமையினால் அத்தகை விவாசய நடவடிக்கைகளில் தங்கியுள்ள குடியிருப்புகள் விவசாயக் குடியிருப்புகள் எனப்படுகின்றன.
குடியிருப்புகளுக்கு அருகாமையில் விவசாய நிலங்களைக் கொண்டிருத்தல், குடியிருப்புகளுடன் சேர்த்தவாறே விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளல், குளங்களை அடிப்படையாக் கொண்டிருத்தல் இயல்புகளைக் கொண்டவையாக விவசாயக் குடியிருப்புகள் பெரும்பாலும் காணப்படுகின்றன.
ஆரியர் வருகையுடன் ஆரம்பித்த விவசாயக் குடியிருப்புகள் உலர்வலயத்திலேயே அதிகளவில் காணப்பட்டன. 300 மீற்றர் உயரத்துக்கு மேற்பட்ட தென்மேற்கு ஈரவலய, மத்திய மலைநாட்டுப் பகுதிகள் விவசாயத்திற்குச் சாதகமான இடங்களாக இல்லாதபடியால் உலர்வலயப் பகுதிகளில் விவசாயக் குடியிருப்புக்கள் அதிகளவில் தோற்றம் பெற்றன.உலர் வலயத்தில் வாழ்ந்த விவசாயிகள் விவசாயச் செய்கையின்போது நீர்ப்பற்றாக்குறையை எதிர்நோக்கியபடியால் குளங்கள், கால்வாய்கள் போன்றன அமைக்கப்பட்டன. கிமு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்தே இலங்கையில் விவசயாக் குடியிருப்பகள் தோன்றியிருந்தது. தற்காலம் வரையில் விவசாயக் குடியிருப்புக்களை இலங்கையில் அவதமானிக்க முடிந்தாலும், கி.பி. 13 ஆம் நூற்றாண்டுவரை காணப்பட்ட விவசாயக் குடியிரப்பகளின் அளவு மற்றும் இயல்புகளில் தற்போதைய நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
நீர்ப்பாசனக் குளங்கள், கால்வாய்களை அண்டி அதிகளவில் மக்கள் வாழத்தொடங்கினார்கள். இக்குடியிருப்புக்கள் குளம், வயல், மேட்டு நிலம், புல் நிலம், காடு என்பனவற்றைக் கொண்டதாக விளங்கியது. இவை தன்னிறைவு பெற்ற கிராமங்களாகக் காணப்பட்டன. நெற்பயிர்ச்செய்கை பிரதான வாழ்வாதார நடவடிக்கையாகவும் அரிசி பிரதான உணவாகவும் காணப்பட்டது. மேட்டு நிலத்தில் வீட்டுத் தோட்டங்களும் சேனைப் பயிர்ச்செய்கையும் இடம்பெற்றன. அரிசிக்குப் பதிலாக குரக்கன், சாமை போன்ற தானியங்களும் வீட்டுத் தோட்டங்களில் மரக்கறி, பழவகை போன்றனவும் பயிரிடப்பட்டன. பசளை, பால் என்பவற்றைப் பெறுவதற்காக மாடுகள் வளர்க்கப்பட்டமை இக்கிராம விவசாயக் குடியிருப்புக்களின் சிறப்பான பண்புகளாகும்.
விவசாயக் குடியிருப்புககளின் இயல்புகள் மாற்றமடைந்த போதிலும் இன்றும் இலங்கையின் உலர்வலயத்தில் பெரும்பாலும் அவதானிக்கலாம். இலஙடகையில் மகாவலி போன்ற குடியிரப்பகளும் திட்டமிட்டு அமைக்கப்பட்ட விவசாயக் குடியிருப்புக்களாகும்.
M.S.Akshayan
0 comments:
Post a Comment