07:29
0
மலை என்றாலே அதிசயம், அதிலும் ஒளிரும் மலை என்றாலே அபூர்வம் தானே. வடக்கு கரோலினா பகுதியில் உள்ள "பிரவுன் மவுண்டென்" என்ற மலை தான் இரவு நேரத்தில் ஒளிர்கிறதாம். நூற்றாண்டுகளாகவே இந்த அதிசயம் நிகழ்வதாகவும் கூறப்படுகிறது, மலைப் பகுதியில் பந்து போன்ற ஒளி தெரிவதும், பிறகு மத்தாப்பு போலச் சிதறுவதுமாகச் சில விநாடிகள் நீடிப்பதைக் காண மக்கள் கூட்டம் கூடுகிறது.

 பெரும்பாலும் ஊதா, பிரவுன் வண்ணங்களில் தோன்றுவது வாடிக்கை. சில நேரங்களில் பச்சை, மஞ்சள், சிவப்பு எனப் பிற நிறங்களிலும் மலை ஒளிரும். சில சமயங்களில் முழு நிலவு போன்ற வடிவில் இந்த மலை ஜொலிக்கவும் செய்கிறது என்கிறார்கள் அங்கு வாழும் மக்கள். இதற்கான உண்மை இன்றும் புலப்படாமலேயே உள்ளது,

 எனவே பேய் இருப்பதாகவும், வேற்றுக் கிரகவாசிகள் வசிப்பதாகவும் பல கட்டுக் கதைகளும் உலா வருகின்றன.



0 comments:

Post a Comment