23:29
0



இன்றைய உலகில் குற்றங்களை கண்டுபிடித்தல் (Detection) என்பதை விட தடுத்தல் (Prevention) என்பது அதிகம் முக்கியத்துவம் பெற்றதாகும். ஏனெனில் குற்ற நிகழ்விற்கு பின் குற்றவாளியை இனங்காண்பது மற்றும் தண்டனைக்குட்படுத்துவது போன்ற செயற்பாடுகள் குற்றவிசாரணை முறைமையின் (Criminal Investigation) எதிராக்க விளைவுகளை சமூகத்திற்கு அளித்து அதன் மூலம் எதிர்காலக்குற்றங்களை தடுத்து நிறுத்த முடியும் எனும் வாதாட்டாத்தை பார்க்கினும் குற்றத்தடுப்பு முறைமை அதை விட சிறப்பானதே. Criminology என்பது குற்றங்களைப்பற்றி விஞ்ஞான ரீதியில் பகுப்பாராய்ந்து கற்பதாகும். அத்துடன் குற்றங்கட்கான பொதுவான காரணங்கள் மற்றும் குற்றத்தடுப்பு முறைமைகள் என்பன பற்றிய கற்கைகளும் இதனுள் அடக்கப்படும்.


இக்கற்கை நெறியானது சமூகவியல் (Sociology) கற்கைகளின் ஒரு வரையறுக்கப்பட்ட  கற்றல் செயற்பாடே ஆகும். ஒரு துறை பற்றிய விஞ்ஞானரீதியிலான ஒப்பீட்டு கற்றலே அத்துறையை முழுமையாக கற்று தெளிவடைய உதவுகின்றது. மேலும் இக்கற்கை சட்ட அமுலாக்கல் முகவர்களை ஆராய்யவும் அவைகளின் குற்றக்கட்டுப்படுத்தலின் தகைமை போன்றவற்றை ஒப்பீட்டு ஆராயவும் உதவுகின்றது. மேலும் குற்றவியலை நான்கு வகையான கற்கைகளாக மேலும் வகுக்கப்பட முடியும்.







வகைகள்
விபரம்
தண்டனையும் சிறை நிர்வாகம் பற்றிய இயல் (Penology)
ஒரு நாட்டின் சிறைக்கட்டமைப்பு மற்றும் பொருத்தப்பாடுடைய குற்றக்கட்டுப்பாடு பற்றிய ஆய்வு
குற்ற நடத்தையை உயிரியல் ரீதியில் ஆய்வு செய்யும் இயல் (Bio Criminology)
குற்றவாளிகளின் நடத்தைப்பாங்கு மற்றும் அவர்களின் பரம்பரை குற்றவாளிகள் அலகு போன்றன பற்றிய ஆய்வு
பெண்களும் குற்றங்களும் பற்றிய இயல் (Feminist Criminology)
பெண்களுக்கெதிரான குற்றங்கட்கான மனப்பாங்கு மற்றும் எதிர்வினையாற்றல் பற்றிய ஆய்வு
குற்றக் கண்டுபிடிப்பு பற்றிய இயல் (Criminalization)
குற்ற நிகழ்விற்கு பின்னரான தேடலுடன் இணைந்த புலனாய்வு மற்றும் குற்றச்சாட்டு நடவடிக்கைகள்







பல்வேறு கோட்பாடுகள் குற்றவியல் பற்றி இருப்பினும் அவை சுமார் 30 தசாப்த கால வரலாற்றை தொகுக்கப்பட்ட ஆவண அடிப்படையில் கொண்டது. இருப்பினும் அன்றைய பல கோட்பாடுகள் இன்றைய தொழினுட்ப வளர்ச்சிசார் குற்றங்களிலும் கூட செயற்வுறு தகைமையை கொண்டு காணப்படுவதானது தத்துவார்த்திகளின் தொலைநோக்கிற்கு ஒரு சான்றாகும். குற்றவியல் கற்கைகளின் போது பிரதானமான மூன்று விதமான கோட்பாடுகளாக நோக்க முடியும்.


01.Classical School of Criminology

02.Positive School of Criminology

03.Chicago School of Criminology



Cesare Beccaria மற்றும் Jermy Bentham அவர்களின் Classical School of Criminology என அறியப்பட்ட கோட்பாடு மகிழ்விற்கும் (Pleasure) வலிக்கும் (Pain) இடைப்பட்ட குற்றவாளிகளின் தீர்மானத்தில் தங்கியிருக்கின்றது. அதாவது ஒரு குற்றவாளி குற்றம் ஒன்றினுாடாக பெறும் மகிழ்ச்சியினை விட அதற்கான அவன் அனுபவிக்கும் தண்டனையின் வலி அதிகமாக இருப்பின் அது அவனது குற்றவியல் நடைமுறையில் பாரிய கட்டுப்பாடுகளை விதிக்கும் என அவர்கள் வாதிட்டனர். ஆனால் அது தொடர்ச்சியாக சமகால உலகத்தில் நிலைத்திருக்கவில்லை.  ஏனெனில் நிரூபிக்கபட்ட ஆராய்ச்சி முறைமைகளின் படி தண்டனையின் அளவு அதிகரிப்பானது குற்றவாளிகளின் மனநிலை மாற்றத்திற்கு அடிப்படை காரணம் என்றோ அல்லது இக்கோட்பாட்டின் நிகழ்வியல் ரீதியில் ஒப்பீட்டிற்காக வழங்கபப்ட்ட காரணிகள் குற்றத்தின் அடிப்படையை குற்றவாளிகள் தீர்மானிக்க பொருத்தமானது அல்ல என உணரப்பட்டது.  எனவே காலத்தின் வளர்ச்சியால் இக்கோட்பாடு புறக்கணிக்கப்பட்டது.



இரண்டாவது கோட்பாடான Positive Theory படி முன்னைய கோட்பாட்டின் மகிழ்ச்சி மற்றும் வலி எனும் இரு தெரிவுக்காரணிகளையும் விட வேறு புற அழுத்தக்காரணிகளும் செல்வாக்கு செலுத்துகின்றது. இக்கோட்பாட்டு கருத்துப்படி குற்றங்கள் நிகழ குற்றவாளிகளின் கட்டுப்பாட்டிற்கு அப்பால் உள்ள உயிரியல் ரீதியான காரணங்கள், உளவியல் ரீதியான காரணங்கள் மற்றும் சுற்றாடல் சார் காரணங்கள் என்பனவற்றை குற்றம் நிகழ்வதற்கான காரணங்களாக வகையிடுகின்றது. இக்கோட்பாட்டு முனைவரான Cesare Lombroso அவர்களின் விஞ்ஞான ரீதியில் மனித இயல்புகளை ஆராய்தல் எனும் அடிப்படையின் கீழ் குற்றவாளிகளது முக அமைப்பு குறிப்பாக அவர்களது நெற்றிப்பகுதி மற்றும் தாடை விரிவாக்கற் பகுதி என்பவற்றின் அடிப்படையில் அவர்களின் குற்றப்பிண்ணனியை கணிக்கலாம் என்பது கோட்பாட்டு ரீதியில் விளக்கியிருப்பினும் கால மற்றும் தொழினுட்ப வளர்ச்சியின் காரணமாக புறத்தொதுக்கப்பட்டது. 



மூன்றாவது கோட்பாடான சிக்காகோ பல்கலைக்கழக குற்றவியல் கோட்பாடு இக்கோட்பாடு 1920ம் ஆண்டுகளில் சிக்காகோ பல்கலைக்கழக சூழலிலே உருவாக்கம் கண்டது. இது குற்றவாளிகளின் குற்றவியல் நடத்தை ஆனது பகுதியளவிலாவது அவர்களது சமூக கட்டமைப்புடன் (Social Structure) தொடர்பு பட்டது என்பதே இக்கோட்பாட்டின் அடிப்படையாகும். இதற்கு காரணம் மனிதனின் உளவியல் அடிப்படை ஆனது அவனது சமூகத்தை அவனுள் உள்வாங்குவதாக அமைகின்றது. இதே போன்று சமூகம் ஒரு கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட வன்செயலை ஆதரிக்கும் போது அல்லது அதை குற்றம் என நிகழ்வுப்படுத்தாத போது அது சாதாரண மனிதனை குற்றம் செய்ய துாண்டுவதுடன் எது குற்றம் என அவனிடம் காணப்படும் வகைப்படுத்தலையும் செல்லாததாக்கிவிடுகின்றது. மேலும் சமூகமே எது குற்றம் என்பதை தீர்மானிக்கும் சக்தி என்பதால் சமூகம் கண்நோக்காததை தனிமனிதன் குற்றம் என தீர்மானிக்க மாட்டான்.


இக்குற்றவியல் கற்கை மற்றும் அபிவிருத்தி முறைகளானது குற்றவியல் நீதி அமுலாக்கற் பொறிமுறை முகாமைத்துவத்தில் முக்கிய பங்காற்றுகின்றது. குற்றக் கட்டுப்படுத்தலில் முக்கியம் பெறும் வளர்ச்சியடைந்த நாடுகள் பல இன்று குற்றவியலில் கற்கைநெறிகளுக்கு முக்கியதுவம் அளிப்பது போல இலங்கை போன்ற நாடுகளும் முக்கியதுமளிப்பது கட்டாயமானதாகும். 








0 comments:

Post a Comment