ஒலியை அகத்துறுஞ்சுவதற்காக ரெஜிபோம் போன்றவற்றினைப் பயன்படுத்தி கட்டிடங்களை வடிவமைக்கும் நுட்பம் பல காலமாக காணப்பட்டு வந்தது.
எனினும் இத்தொழில்நுட்பமானது முற்றிலும் வெற்றிகரமான தொழில்நுட்பமாக இல்லாதிருந்தமையினால் முழுமையான தீர்வு காணும் முயற்சியில் ஹொங்ஹொங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு ஒன்று முழு வீச்சில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.
இதன் பயனாக ஒலியை 99.7 சதவீதம் வரைக்கும் அகத்துறுஞ்சும் தொழில்நுட்பம் ஒன்றினை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இதனை ஹோம் தியேட்டர்களில் பயன்படுத்தி சிறந்த பயனைப் பெறக்கூடியதாக இருப்பதுடன் எந்தவொரு அதிர்வெண்களைக் கொண்ட ஒலிகளையும் கட்டுப்படுத்தக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.
இதில் இரு ரெசொனேட்டர் எனும் சாதனம் பொருத்தப்பட்டுள்ளதுடன் அவற்றில் ஒன்று சூழலில் உள்ள திறந்த வளியினை உறுஞ்சுவதுடன் மற்றையது ஒலியினை அகத்துறுஞ்சுகின்றது.
0 comments:
Post a Comment