08:15
0

பிரபஞ்சத்தில் புத்தி கூர்மை உள்ள வேற்று கிரகவாசிகளை கண்டறிய சீன மிகபெரிய ரேடியோ தொலை நோக்கியை அமைக்க திட்டமிட்டு உள்ளது. தென் மேற்கு சீனாவின் குயிசு மாகாணத்தில் இந்த தொலை நோக்கியை அமைக்கிறது. உலகில் இது போன்ற தொலை நோக்கி புர்டோ ரிகோவில் அமைக்கபட்டு உள்ளது.

தற்போது இதை விட பெரிய சுமார் 500 மீட்டர் பரந்த ரேடியோ தொலை நோக்கியை சீனா அமைக்க் திட்டமிட்டு உள்ளது.

இந்த தொலை நோக்கியை அமைக்க 5 கிலோமீட்டருக்குள் வசிக்கும் 9110 பேர் அப்புறப்படுத்தப்பட உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த தொலை நோக்கி 1.2 பில்லியன் யுவான் இந்திய மதிப்பில் 1264 கோடி செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்பதை ஆராய புதிய திட்டம் ஒன்றை லண்டனில் தொடங்கியுள்ளார். இந்த திட்டத்துக்காக அடுத்த 10 ஆண்டுகளூக்கு ரூ.640 கோடி செலவிடப்படும். ரஷ்யாவை சேர்ந்த சிலிகான் வேலி தொழில் அதிபர் யூரி மில்னர் இந்த திட்டத்துக்கு நிதி உதவி அளிக்கிறார். இந்த திட்டத்திற்கு கேம்ரீஜ் பல்கலைகழகத்தை சேர்ந்த வானவியலாளர், காஸ்மோலாகிஸ்ட் பேராசிரியர் லார்டு மார்ட்டீன் ரீஸ், தலைமை தாங்குகிறார்

இந்த திட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வெல்சில் 64 மீட்டர் ( 210 அடி ) பார்க் தொலைநோக்கி மூலமும், மேற்கு வர்ஜினியாவில் 100 மீட்டர் (328 அடி) பர்ட் கிரீன் பேங்க் தொலைநோக்கியும் நிறுவப்பட்டு கண்காணிக்கபட்டு வருகிறது.

0 comments:

Post a Comment