22:48
0

நமது ஸ்மார்ட் ஃபோன்களை இனி ஒருமுறை மட்டுமே சார்ஜ் செய்துகொண்டால் வாரம் முழுக்க பயன்படுத்தும் புதிய திரையை அறிவியல் நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர்.
நாம் நமது ஸ்மார்ட் ஃபோனகள், டேப்லெட் உள்ளிட்டவையில் அதிக செயலிகள் பயன்படுத்துவதால் உடனுக்குடன் அதன் சார்ஜ் காலியாகி விடுகிறது.

இந்த தொல்லை காரணமாக நாம் நமது ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் டேப்லெட்களை தினசரி பல மணி நேரம் சார்ஜ் செய்வதிலேயே நேரத்தை வீணடிக்கின்றொம்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரித்தானிய அறிவியல் நிபுணர்கள் புதுவகையான ஒரு ஸ்மார்ட் திரையை வடிவமைத்துள்ளனர்.

இந்த திரையை நமது ஸ்மார்ட் ஃபோன், டேப்லெட் உள்ளிட்டவைகளில் பொருத்துவதன் மூலம் பேட்டரிகளின் ஆயுள் நீட்டிக்கப்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதுவகையான திரைக்கு மின்சார இணைப்பு தேவையில்லை என்பது மட்டுமல்ல, இந்த திரை பொருத்தியிருந்தால் நண்பகலிலும் நமது ஸ்மார்ட் ஃபோன் திரையை துல்லியமாக பார்க்க முடியும்.

தற்போதைய ஸ்மார்ட் ஃபோன் யுகத்தில் பேட்டரி ஆயுளை நீட்டிப்பதே பெரும் சிக்கலானதாக அறிவியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

அந்த வகையில் பிரித்தானியா அறிவியல் நிபுணர்களின் கண்டுபிடிப்பு இனி வரும் காலங்களில் மாற்றாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment