இணையமானது பல்வேறு நன்மைகளைத் தருகின்ற போதிலும் பல சமயங்களில் பெரும் தலைவலியாகவே காணப்படுகின்றது.
இவ்வாறான ஒரு பிரச்சினைதான் இணையத்தின் ஊடாக தனிநபர் தகவல்கள் திருடப்படுதல் ஆகும்.
இதற்காக இணைய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தகவல்களை குறிமாற்றம் செய்த (Encryption) பரிமாற்றம் செய்வதுண்டு.
எனினும் தற்போது பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்திலும் குறைபாடுகள் காணப்படுவதனால் தமது பயனர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் முகமாக கூகுள், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் என்பன குறிமாற்றம் செய்யப்படும் தன்மையை அதிகரிக்க எண்ணியுள்ளன.
தகவல் குறிமாற்றம் தொடர்பில் Apple மற்றும் FBI நிறுவனங்கள் நீதிமன்ற வழக்கினை எதிர்நோக்கியுள்ள நிலையிலும், எதிர்காலத்தில் வாட்ஸ்அப் சேவையும் இதே பிரச்சினையை எதிர்நோக்கலாம் என்ற எதிர்பார்ப்பிலும் மேற்கண்ட நிறுவனங்கள் அதிரடி மாற்றத்தினை மேற்கொள்ள எண்ணியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment