சர்வதேச ....
விண்வெளி நிலையத்தில் ஒரு வருடத்தை கழித்த அமெரிக்க விண்வெளிவீரரான ஸ்கொட் கெல்லியும் ரஷ்ய விண்வெளிவீரரான மிகெயில் கொர்னியன்கோவும் சொயுஸ் விண்கலத்தின் மூலம் நேற்று புதன்கிழமை கஸகஸ்தானிலுள்ள ஸெஸ்கஸ்கன் பிராந்தியத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளனர்.அவர்கள், இதற்கு முன்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கியிருந்த உச்சபட்ச காலத்தை விடவும் இரு மடங்கு காலம் (340 நாட்கள்) அங்கு தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் கெல்லி 4 தடவைகள் சர்வ தேச விண்வெளி நிலையத்துக்கு பயண த்தை மேற்கொண்டு அங்கு மொத்தம் 520 நாட்கள் தங்கியிருந்து, அந்த நிலையத்தில் அதிக காலத்தைக் கழித்த விண்வெளிவீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
நீண்ட காலம் விண்வெளியில் தங்கியிருப்பதால் மனித உடலில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான ஆய்வின் அங்க மாகவே அவர்கள் விண்வெளி நிலையத்தில் நீண்ட காலம் தங்கியிருந்து பணியாற்றும் இந்த சாதனை முயற்சியை மேற்கொண்டனர்.
ஸ்கொட் கெல்லியை பூமியில் தங்கியிருந்த அவரது இரட்டைச் சகோதரரான மார்க்குடன் ஒப்பிட்டு அவருக்கு உடலி யல் ரீதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் ஆய்வை மேற்கொள்ள விஞ்ஞானிகள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த ஆய்வானது எதிர்காலத்தில் செவ் வாய்க்கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பு வதற்கான திட்டத்திற்கு அவசியமான ஒன்றா கவுள்ளதாக அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தெரிவிக்கிறது.
0 comments:
Post a Comment