04:05
0

கண்ணை இமைப்­பதன் மூலம் காணொளிக் காட்­சி­களைப் பதிவு செய்­யவும் காட்­சிப்­ப­டுத்­தவும் கூடிய வல்­ல­மையைக் கொண்ட மதி­நுட்ப கண் வில்­லை­களை கண்­டு­பி­டித்­துள்­ள­தாக ஜப்­பா­னிய டோக்­கியோ நகரை அடிப்­ப­டை­யாகக் கொண்ட சோனி நிறு­வனம் தெரி­விக்­கி­றது.

புகைப்­ப­டக்­க­ருவி, கம்­பி­யில்லா செயற்­கி­ரம அலகு மற்றும் சேமிப்­பகம் என்­ப­வற்றை உள்­ள­டக்­கிய இந்த கண் வில்­லை­களை சோனி நிறு­வ­னத்தைச் சேர்ந்த 7 நிபு­ணர்கள் ஒருங்­கி­ணைத்து வடி­வ­மைத்­துள்­ளனர்.

ஏற்­க­னவே சம்சுங் நிறு­வ­னத்தால் உரித்­து­டைமை கோரப்­பட்­டி­ருந்த மதி­நுட்ப கண் வில்­லை­களை விடவும் இவை முன்­னேற்­ற­க­ர­மா­ன­வை­யாகும். சம்சுங் நிறு­வ­னத்தின் வில்­லைகள் ஸ்மார்ட் கைய­டக்­கத்­தொ­லை­பே­சி­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­ப­டு­கின்ற நிலையில், சோனி நிறு­வ­னத்தின் கண் வில்­லைகள் சுய­மாக சொந்தக் காணொளிக் காட்­சியை பதிவு செய்து காட்­சிப்­ப­டுத்தும் வல்­ல­மையைக் கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

வழ­மை­யாக கண்­ணி­மைக்கும் நேரம் 0.2 செக்­கன்­க­ளி­லி­ருந்து 0.4 செக்­கன்­க­ளாகும். இந்­நி­லையில், இந்த வில்­லை­களை உப­யோ­கிப்­ப­வர்கள் தமது கண்­சி­மிட்­டலை திட்டமிட்டு மேற்­கொள்­வ­தன் மூலம் இந்த மதிநுட்ப கண்வில்லையை சிறப்­பாக செயற்படுத்தக் கூடியதாக இருக்கும் என ஜப்பானிய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments:

Post a Comment