சில மாதங்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனம் தான் வழங்கி வந்த Google Project எனும் சேவையினை நிறுத்தியிருந்தமை தெரிந்ததே.
இந்த சேவையானது சிறுவர்களின் அறிவை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் தற்போது மேற்கண்ட சேவைக்கு பதிலாக Google Cast எனும் சேவையினை அறிமுகம் செய்யவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் விசேட அப்பிளிக்கேஷன் மூலம் மாணவர்கள் தமது கணணிகளை ஒன்றிணைத்து பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் வயர்லெஸ் தொழில்நுட்பம் மூலம் இணைக்கக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.
இது தவிர வகுப்பறையிலுள்ள பெரிய திரை ஒன்றில் கற்பிக்கப்படும் விடயங்களை தமது கணணிகளிலும் பார்வையிடுவதுடன், தமது கணணியில் உள்ள விடயங்களை பெரிய திரையிலும் பகிர்ந்து கொள்ளக் கூடிய வசதியினை இது தரக்கூடியதாக இருக்கும்.
இந்த வசதியினை விளக்கும் வீடியோ தொகுப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment