ரோபோக்களின் கண்டுபிடிப்பானது தொழில்நுட்ப உலகின் புதிய அத்தியாயமாக நோக்கப்பட்டு வருகின்றது.
இதுவரை காலமும் மனித வேலைகளை இலகுபடுத்துவதற்கான ரோபோக்களே அதிகளவில் உருவாக்கப்பட்டு வந்தன.
ஆனால் முதன் முறையாக மனிதர்களை தண்டிக்கக்கூடி ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை கலிபோர்னியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.
இது ஊசி போன்ற ஒரு பகுதியினால் குத்துவதன் மூலம் பௌதீக சேதங்களை உருவாக்கவல்லது.
இப் புதிய ரோபோவானது திருட்டுக்களை தடுப்பதற்கு அதிகளவில் பயன்படுத்த முடியும்.
எனினும் இதனை தனி நபர்கள் பயன்படுத்துவதற்கான உரிமம் தொடர்பில் இதுவரை எதுவித தகவல்களும் வெளியாகவில்லை.
காரணம் இது ரோபோ ஒன்றினை உருவாக்குவதற்கான கட்டுப்பாடுகளை மீறி உருவாக்கப்பட்டுள்ளமை ஆகும்.
0 comments:
Post a Comment