விஞ்ஞானிகள் தற்போது பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
இப் புதிய தொழில்நுட்பமானது முன்னைய தொழில்நுட்பங்களிலும் குறைந்தளவு சக்தியை பயன்படுத்துவதுடன், மிக தரமான இறுதி விளைபொருளை தருகிறது.
இத் தொழில்நுட்பமானது பொலி-எதிலீனை உடைத்து திரவமாக மாற்றுகின்றது. பொலி-எதிலீனானது உலகளவில் மிக எராளமாக பாவனையிலுள்ள பிளாஸ்டிக் பதார்த்தமாகும்.
இது தண்ணீர் போத்தல் முதல் உணவுப் பொதி வரை பாவனையில் உள்ளது. கிட்டத்தட்ட 100 மில்லியன் தொன்கள் வரையில் வருடாவருடம் உற்பத்தி செய்யப்படுகிறது.
95 வீதமான பிளாஸ்டிக் பொருட்கள் பாவனையின் பின்னர் தூக்கி வீசப்படுகின்றன. ஆனால் தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் மனிதர்களால் பயன்படுத்தக்கூடிய பொருளாக மாற்றியமைக்கப்படுகிறது.
பொலித்தீனை ஆக்கும் ஜதரசன் மற்றும் காபனானது திரவ ஜதரக்காபன் எரிபொருளாக மாற்றப்படக்கூடியது.
பொலித்தீனானது படிம எரிபொருட்களிலிருந்து உற்பத்திசெய்யப்படுகிறது. இதனை மீண்டும் அதன் தொடக்கப்பொருளாக மாற்றுவது சவாலான விடயம், ஏனெனில் பொலித்தீன் இரசாயன வலிமை மிக்கது.
இப் பிளாஸ்டிக் பொருட்களை கடலில் வீசினாலும் சரி, நிலத்தில் புதைத்தாலும் சரி அவை நீண்டகாலத்திற்கு எத்தகைய மாற்றமுமின்றி இருக்கக்கூடியன.
இத்தகைய பொருட்களை 400 பாகை வெப்பநிலைக்கு வெப்பப்படுத்துவதன் மூலம் அவற்றுக்கிடையிலான பிணைப்பை உடைக்க முடியும்.
ஆனாலும் விளை பொருட்களாக பயன்படுத்தப்பட முடியாத வாயுக்கள், எண்ணெய், மெழுகு மற்றும் கரி போன்றனவே எஞ்சுகின்றன.
தற்போது சீன விஞ்ஞானிகளால் பொலித்தீனை பிரிக்கும் நவீன தொழில்நுட்பம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு அவர்கள் பொலித்தீனை ஆக்க பயன்படுத்தப்படும் இரசாயனங்களை பயன்படுத்தி அதனை மீள்சுழற்சி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
முதலில் பயன்படுத்தப்பட்ட இரசாயனம் காபன் பிணைப்புக்களிலிருந்து ஜதரசனை விடுவிக்க பயன்படுத்தப்பட்டிருந்தது. இரண்டாவது இரசாயனம் காபன் பிணைப்புக்களை உடைப்பதற்கென பயன்படுத்தப்பட்டிருந்தது.
மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட இச்செயன்முறையானது பொலித்தீனின் கட்டமைப்பை மாற்றி அதிலிருந்து பயன்படுத்தக்கூடிய எரிபொருள் மற்றும் மெழுகு உருவாக்கப்பட்டது அவதானிக்கப்பட்டது.
இங்கு 175 பாகை வெப்பநிலையில் மேற்படி நிகழ்வு சாத்தியமானது குறிப்பிடத்தக்கது. இதுவே இதுவரையிலுள்ளதிலும் குறைந்தளவான சக்தியாகும்.
0 comments:
Post a Comment