05:47
0

ஆயவாளர்கள் தற்போது மறைந்துள்ள HIV Virus இனை கண்டுபிடித்து, அவற்றை நச்சுக்குள்ளாக்கும் புரதம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

இக் கண்டுபிடிப்பானது மேற்படி தொற்றுக்கெதிராக சிகிச்சையளிப்பதற்கு பயனுள்ளதாகலாம் என நம்பப்படுகிறது.

Galectin-9 எனப்படும் மனித வெல்லங்களை இணைக்கும் புரதமே அது.

இவை மறைந்துள்ள HIV Virus இனால் தாக்கப்பட்ட கலங்களை இனங்கண்டு அவற்றை நிர்ப்பீடனத் தொகுதிக்கு வெளிக்காட்டுகிறது.

இந்தச் செயற்பாடு "shock and kill" மூலோபாயம் எனப்படுகிறது.

மேற்படி Galectin-9 எனப்படும் புரதம், தொற்றுக்குள்ளான கலங்களின் வெல்லங்களை சீரமைத்து, அவை தொற்றுக்குள்ளாக்கப்பட்டுள்ளமைக்கான சழிக்ஞைகளை அனுப்பச் செய்கிறது.

இதற்கென கல மேற்பரப்பிலுள்ள குறித்த வகுப்பு வெல்லங்களை ஒன்றாக இணைக்கிறது.

இதள் மூலம் HIV Virus களுக்கெதிரான, வேறுவகையான தொற்று நோய்களுக்கெதிராக சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியம் என ஆய்வாளர் Abdel-Mohsen சொல்கிறார்.

அத்துடன் இவ் Galectin-9 ஆனது APOBEC3G எனப்படும் மற்றுமொரு வகை புரதத்தை அதிகரிக்கச் செய்கிறது.

மாறல்களுக்கு பொறுப்பான இவ் APOBEC3G, HIV Virus உட்பட, பல Virus களின் பரம்பரை திரவியங்களை அழிக்கிறது.

இதன்படி வருங்கால HIV Virus களுக்கெதிரான சிகிச்சை, எல்லா வகையான Virus களையும் உடலிலிருந்து அகற்றக்கூடிதாக இருக்கும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெருவிக்கின்றனர்.

0 comments:

Post a Comment