22:18
0

WWW என்ற மூன்றெழுத்தின் மூலம் உலகின் கடைக்கோடியில் இருக்கும் மக்களை மற்றொரு மூலையில் உள்ளவர்களுடன் இணைக்கும் இணையதளம் உருவாகி நேற்று (6) 25 ஆண்டுகள் ஆகின்றன.

WWW என்ற மூன்றெழுத்தின் மூலம் உலகின் கடைக்கோடியில் இருக்கும் மக்களை மற்றொரு மூலையில் உள்ளவர்களுடன் இணைக்கும் இணையதளம் உருவாகி  25 ஆண்டுகள் ஆகின்றன.

1991-ம் ஆண்டு பிரிட்டன் நாட்டு கம்ப்யூட்டர் விஞ்ஞானியான டிம் பெர்னெர்ஸ் லீ என்பவர் உலக மக்கள் அனைவருக்கும் பயன்தரும் வகையில் இணையதளம் என்ற கணினிகளுக்கு   இடையிலான வெளிப்படையான ஓர் இணைப்பை அறிமுகப்படுத்தினார். இந்த இணைப்பின்மூலம் ஆராய்ச்சியாளர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விக்கூடங்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் மிக எளிதாக நடந்து வந்தது.

அதற்கும் முன்னதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகானில் சில தகவல்களை ரகசியமாக பரிமாறிக் கொள்ள இணையம் பயன்பட்டது. எனினும், இந்த கணினிகளில் உள்ள தகவல்களை வெளிநபர்கள் பார்க்க அனுமதி இல்லை.

0 comments:

Post a Comment