03:31
0

லைட்டிங் முறையில் கம்பியில்லா இணைய சக்தி மூலம் வினாடிக்கு 2 ஜிகாபைட் தரவு வேகம் வழங்கும் புதிய நானோ பொருள் ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இதில் நீல ஒளிக்கு மாறாக வெள்ளை ஒளியை தொடர்ச்சியாக வெளியேற்றும் ஒரு புதிய நானோகிரிஸ்டலின் பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை சவுதி அரேபியாவில் உள்ள மன்னர் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப (KAUST) பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த தரவை கடத்த பயன்படுத்தப்படும் மின்காந்த அலைகளின் அலைநீளம் குறைக்கப்படுவதின் மூலம் பல நன்மைகளை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Visible light communication (VLC) எனப்படும் தெரியும் ஒளி தொடர்பில் உள்ள மின்காந்த நிறமாலையின் பாகங்கள் முறைப்படுத்தப்படாத மற்றும் அதிக ஆற்றல் திறன் ஆகியவைகளை வழங்கும் என ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது வெளிச்சம் மற்றும் காட்சி தொழில்நுட்ப தகவல் ஒலிபரப்பை இணைக்கவும் உதவும். இதன் மூலமே மின் விளக்குகள் பயன்படுத்தி மடிக்கணனிகளுக்கு இணைய இணைப்புகளை வழங்க முடியும்.

இதன் பெரும்பாலான பயன்பாடுகளுக்கு வெள்ளை ஒளி உற்பத்தியினை நிகழ்த்த ஒளி உமிழும் டயோடுகள் (LED) தேவைப்படும். அவைகள் தான் வழக்கமான பாஸ்பரஸ் நீல நிற வெளியேற்றத்தை ஒரு டையோடு இணைப்பின் மூலம் சிவப்பு மற்றும் பச்சை ஒளியாக மாற்றும்.

எனினும், இந்த மாற்ற செயல்முறையானது எல்இடி ஆன் மற்றும் ஆப் செய்யப்படும் வேகத்திற்கு பொருந்தாது என்ற விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆராய்ச்சியாளர்கள் சுமார் எட்டு நானோமீட்டர் அளவு உள்ள சீசியம் லீட் பிரோமைட் (cesium lead bromide) நானோபடிகங்களை உருவாக்கினர்.

இதன் மூலம் பாஸ்பரஸ் பயன்படுத்தி அடையும் இணைய சாத்தியத்தை விட 40 மடங்கு வேகமாக அளவிலான ஒரு அலைவரிசை ஆப்டிகல் உமிழ்வை ஒழுங்குப்படுத்த முடியும்.

0 comments:

Post a Comment