02:27
0

மனிதர்கள் வாழ தகுந்த பூமியை போன்றே மற்றொரு கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரண்டாவது பூமியாக திகழும் புதிய கிரகம் குறித்த தகவல்களை விஞ்ஞானிகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடுவர்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நமது சூரிய மண்டலத்தில் இருந்து சுமார் 4.2 ஒளியாண்டுகள் தொலைவில் குறித்த புதிய கிரகம் Proxima Centauri-யை சுற்றிவருகிறது.

இதுகுறித்து ஐரோப்பிய தேற்கு ஆய்வக செய்தி தொடர்பாளர் ரிச்சர்ட் ஹூக்கிடம் கேட்ட போது, நாளை புதிய கிரகம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்பதை அவர் உறுதி செய்ய மறுத்துள்ளார்.

இதுகுறித்து எக்கருத்தையும் அவர் கூறவில்லை. எனினும், நாளை ஆய்வகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய கிரகம் குறித்த தகவல் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment