01:44
0

உத்திரபிரதேச மாநிலத்தில் 4 வயதில் 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியின் அறிவாற்றல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் அமைந்துள்ள பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் தேஜ் பகதூர் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இவர்கள் மூவரும் அறிவாற்றல் மிகுந்து காணப்படுகின்றனர்.

இவரது மகள் சுஷ்மா (15) என்பவர் தனது அறிவுக் கூர்மையால் இந்த சிறுவயதியிலேயே பட்டதாரியாகி, நுண்ணுயிரியில் தொடர்பான முனைவர் பட்டத்துக்கு படித்து கொண்டிருக்கிறார். இவரது 2வது மகனான ஷைலேந்திரா 9 வயதிலேயே 12-வது வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்துள்ளார்.

இந்நிலையில் தேஜ் பகதூரின் கடைசி குழந்தையான அனன்யா என்பவர் தனது மழலை பருவத்திலேயே அறிவாற்றலில் சிறந்து விளங்கி நேரடியாக 9 ஆம் வகுப்பு சேர்வதற்கான நுழைவு தேர்வினை எழுதி வெற்றி கண்டுள்ளார்.



இதே பள்ளியில் தான் அனன்யாவின் அக்காவான சுஷ்மா தனது ஐந்து வயதில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தார்.

மேலும், அனன்யா இந்த சிறுவயதிலேயே ராமாயனத்தின் பெரும் பகுதியை தெரிந்து கொண்டுள்ளார் என அவரது தாயார் பெருமையுடன் கூறுகிறார்.

குழந்தைகளின் அறிவாற்றல் செய்திகள் வெளிவர தொடங்கிய பின்பு தான் தேஜ் பகதூருக்கு பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தேஜ் பகதூர் கூறுகையில், எனக்கு வசதி குறைவு அதனால் எனது குழந்தைகளுக்கு எந்த சிறப்பு பயிற்சிகளும் ஏற்பாடு செய்யவில்லை. எனினும் இறைவன் கொடுத்த அறிவாற்றல் கொண்டு எங்கள் வம்சத்திற்கே பெரும் புகழை தேடிக் கொடுத்துள்ளனர் என மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment