01:38
0

சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று இணைந்து சுமார் 50 வரையான சிறிய ரக விண்கலங்களை செலுத்துவதற்கு தயாராகி வருகின்றனர்.

குறித்த திட்டத்திற்கு CubeSats எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன், அனைத்து விண்கலங்களும் பூமியிலிருந்து அப்பால் உள்ள வெப்ப மண்டலத்தில் நிலை நிறுத்தப்படவுள்ளது.

அதாவது பூமியிலிருந்து 200 கிலோ மீற்றர் முதல் 380 கிலோ மீற்றர்களுக்கு இடையிலான தூரத்தில் நிலை நிறுத்தப்படவுள்ளது.

இதன் ஊடாக பூமிக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய சூழல் காரணிகளை கண்டறிந்து அவற்றிற்கு தீர்வு காண தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத் திட்டத்தில் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா, மற்றும் அவுஸ்திரேலியா உட்பட சுமார் 28 நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பங்கு கொள்கின்றனர்.

அத்துடன் இவ் அனைத்து விண்கலங்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் விண்ணில் ஏவுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment