02:34
0

தற்போது உலகெங்கிலும் ஸ்மார்ட் கைப்பேசிகளின் பாவனை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகின்றது.

இதனால் சாதாரண கைப்பேசிகளின் பாவனையும் குறைவடைந்துவருகின்றது.

இந்நிலையில் ஸ்மார்ட் கைப்பேசிகளில் தரப்பட்டுள்ள சிறப்பம்சங்களுக்கு அமைவாக அவற்றில் பயன்படுத்தப்படும் மின்கலங்கள் விரைவாக சார்ஜ் அற்றுப் போகின்றது.

இதனைக் கருத்தில் கொண்டு தற்போது பாவனையிலுள்ள மின்கலங்களை விடவும் இரண்டு மடங்கு நேரத்திற்கு மின்சக்தியை வழங்கக்கூடிய மின்கலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதனை அமெரிக்க நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது.

இது தொடர்பாக குறித்த நிறுவனம் கருத்து தெரிவிக்கையில் தற்போதைய மின்கலங்கள் ஒரு முறை சார்ஜ் செய்த பின்னர் 200 மைல் தூரப் பயணங்கள் வரை பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.

ஆனால், இப் புதிய மின்கலத்தின் உதவியுடன் ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டு 400 மைல்கள் வரை துணிந்து பயணிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இம்மின்கலங்கள் அடுத்த வருடத்திலேயே சந்தைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment