அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ளதா? என பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த விமானி, கட்டிட வடிவமைப்பாளர், பத்திரிகையாளர் மற்றும் மணல் ஆய்வாளர் என 4 பேர் மற்றும் பிரான்சு நாட்டு உயிரியல் வல்லுநர், ஜெர்மனை சேர்ந்த இயற்பியலாளர் ஆகியோர் என 2 பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட குழுவை நாசா தேர்வு செய்து செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான ஒத்திகையை நடத்த ஏற்பாடு செய்தது.
இதைத் தொடர்ந்து, இந்த குழு அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 29-ந் திகதி தங்களது ஒத்திகை ஆய்வை தொடங்கியது.
தீவில் செவ்வாய் கிரகத்தில் இருப்பது போலவே கூடாரம் அமைத்து செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போலவே வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்றுடன் தங்களது ஒரு வருட கால ஒத்திகை ஆய்வினை வெற்றிகரமாக முடித்து செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான நம்பிக்கையை இந்த ஆய்வு அளித்து உள்ளதாக குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் அவர்கள் கூறியதாவது, நாங்கள் அமைத்திருந்த விண்வெளி கூடாரத்திற்கும் வெளியுலகிற்கும் தொலைத் தொடர்பு கால நேரம் 20 நிமிடம் தாமதமாகவே இருந்தது.
இதை தவிர நாங்கள் பல சாவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. அதில் முக்கியமாக இரண்டு வாரத்திற்கு ஒருமுறை ஒரு வாளி தண்ணீரில் மட்டுமே குளித்தது தான் என தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment