07:08
0

நம்மில் பல பேர் விமானங்களில் பயணித்தது உண்டு. அப்படி பயணிக்கும் போது விமானங்களில் உள்ள ஜன்னல்கள் ஏன் வட்டமாக உள்ளது என்று யோசித்தது உண்டா?

இதற்கு அறிவியல் ரீதியான காரணம் உள்ளது.

விமானங்கள் வானில் பறக்கும் போது, உயர் அழுத்த பிரச்சனைகளுக்கு உள்ளாகும்.

இதனால், விமானத்தின் வெளியே அழுத்தம் குறைவாகவும், விமானத்தின் உள்ளே அழுத்தம் அதிகமாகவும் இருக்கும்.

விமானத்தின் ஜன்னல்கள் வட்டமாக இருப்பதால், விமானத்தின் உள்ளே ஏற்படும் அழுத்தமானது அனைத்து இடங்களுக்கும் பரவி விடும். இதனால் விமானத்தின் உள்ளே இருப்பவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

இதுவே விமானத்தின் ஜன்னல்கள் சதுரமாக இருந்தால், விமானத்தின் உள்ளே உள்ள அழுத்தம் அனைத்து இடங்களுக்கும் பரவாமல், ஜன்னல்களின் மூளைகளில் தாக்கி கண்ணாடியை உடையச் செய்து பெரிய பாதிப்புகளுக்கு உள்ளாக்கும்.

0 comments:

Post a Comment