19:06
0

    1. உலகில் உள்ள விஷ மரங்களில் இந்தோனேசியாவில் உள்ள ‘உபர்ஸ்’ மரம்தான் அதிக விஷமானது.
    2. ஒவ்வொரு முழு நிலவுக்கும் இடைப்பட்ட காலம் 29 1/2 நாட்கள்
    3. புகழ்பெற்ற ஈஃபில் டவரின் பிளானை வரைய ஆறாயிரம் சதுர கஜம் காகிதம் தேவைப்பட்டதாம்.
    4. உலகில் மிக அகலமான பாலம் சிட்னி ஹார்பர் பாலம்.
    5. உலகில் அடிக்கடி பூகம்பம் ஏற்படும் நாடு ஜப்பான் அல்ல; மெக்சிகோ
    6. நண்டுக்கு ஐந்து ஜோடி கால்கள் உண்டு. செவுல்களால்தான் அது மூச்சுவிடும்.
    7. வைக்கோலால் ஆன தொப்பிகளை ஈக்வடாரில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்
    8. இந்தியாவில் அதிகம் பயிராகும் மிளகாய் ரகம் ௲ ஹங்கேரியன் ‘பாப்ரிகா’
    9. இந்தியாவில் மலை ஏறுவதற்கான கிளப்புகள் அதிக அளவில் மேற்கு வங்க மாநிலத்தில்தான் உள்ளன.
    10. சுறா மீனை ஜப்பானியர்கள் ‘கடல் தங்கம்’ என்று அழைக்கிறார்கள்
    11. ‘சிரிப்’ என்ற பறவை நீர்ப்பரப்பின் மேல் தன் கூட்டைக் கட்டுகிறது.
    12. முதல் உலகப் போர் 1914 முதல் 1918 வரை.
    13. இரண்டாம் உலகப் போர் 1939 முதல் 1945 வரை.
    14. இரண்டாம் உலகப் போருக்குப்பின் 1945-ம் ஆண்டு ‘உலக ஐக்கிய நாடுகள் சபை’ அமைக்கப்பட்டது.
    15. பழந்தமிழர் காலம் சுமார் கி.மு.10,000 ஆண்டில் தொடங்குவதாக கூறப்படுகிறது.
    16. லட்சத்தீவில் மொத்தமுள்ள 36 தீவுகளில் 11 மட்டும் மக்கள் வசிக்கிறார்கள்.
    17. இறந்து போனவர்களின் உடலை பதம் செய்து காப்பாற்றுவதற்கு பெயர் ‘எம்பாம்’.
    18. ‘இம்பாலா’ என்ற மான் ஒரே தாவலில் 8 அடி உயரம் துள்ளி 25 அடி தூரம் பாயும்.
    19. அமெரிக்காவில் ஹெலிகொப்டர்களை டாக்சிகளாக பயன்படுத்துகிறார்கள். இதை ‘சாப்பர்ஸ்’ என்று அழைக்கிறார்கள்.
    20. தலைவலிகளில் 47 விதங்கள் இருக்கின்றன.
    21. மனித சிந்தனையின் வேகம் மணிக்கு 150 மைல் செயல்படுகிறதாம்.
    22. ‘செரியம்’ எனப்படும் பொருளை நகத்தால் கீறினாலே தீப்பற்றிக் கொள்ளும்.
    23. கழுகு பறக்கும்போது அதன் கால்களும், தலையும் கீழ் நோக்கியே இருக்கும்.
    24. உலகில் மிகுதியான மக்களால் பயன்படுத்தப்படுவது ரோமன் எழுத்துக்கள்தான்.
    25. வெயில் 150 டிகிரிக்கும் மேலாக அடித்தால்தான் ஒட்டகத்திற்கு வியர்க்கும்.
    26. நேபாள வீரர் “ஆக்ரிட்டா ஷெர்பா” என்பவர் பத்து முறை எவரெஸ்ட்டை அடைந்ததால், அவருக்கு “பனிச் சிறுத்தை மனிதன்” என்ற சிறப்பு பட்டம் உண்டு.
    27. தேசியக் கொடியில் “ஆலமரம்” இடம்பெற்றுள்ள நாடு லெபனான்.
    28. மாட்டுச்சாண எரிபொருளில் உள்ள முக்கியமான வாயு “மீத்தேன்”.
    29. முயலின் உடலில் அபாய அறிவிப்புக் கொடுக்கும் பகுதி வால்.
    30. முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கும் ஆண் இன மீன் “கடல் குதிரை”.
    31. பாங்க ஆஃப் இங்கிலாந்து 1804-ம் ஆண்டு முதல் 1806-ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் டாலர்களான வெள்ளி டாலர் நாணயங்களை கொள்ளுப் பட்டறையால் அடித்து வெளியிட்டது.
    32. விண்வெளியில் ஆறுமுறை பயணித்த பெருமை “கேப்டன் ஜான் வாட்ஸ் எங்” என்ற அமெரிக்கருக்கு உண்டு.
    33. சயாமிய மொழியில் “நான்” என்ற சொல்லை ஒன்பது விதமான சொற்களால் வெளிப்படுத்தலாம். உலகில் வேறு எந்த மொழிக்கும் இந்தச் சிறப்பு இல்லை.
    34. 13 நாட்டு எல்லைகளைக் கொண்டுள்ள ஒரே நாடு சீனா
    35. உலகின் மிகப்பெரிய வளைகுடா ௲ மெக்ஸிகோ வளைகுடா.
    36. நீர் பனிக்கட்டியாக உறையும்போது அதன் பரிமாணம் அதிகமாகும்.
    37. அமெரிக்காவின் கொடி “ஓல்டு குளோரி” எனப்படுகிறது.
    38. “அமாரிக்” எத்தியோப்பியாவில் பேசப்படும் மொழி.
    39. மூங்கிலில் சுமார் 500 வகைகள் உள்ளன.
    40. குரங்குகளுக்குப் பல வகையான நிறங்களைப் பிரித்தறியும் ஆற்றல் உண்டு.
    41. முப்பதாம் வருட விழாவை ஆங்கிலத்தில் “பெர்ல் ஜூப்ளி” என்று அழைப்பார்கள்.
    42. பிச்சைக்காரர்களுக்கு பென்ஷன் வழங்கிய நாடு ௲ இலங்கை.
    43. சீக்கியர்களின் கடைசி குரு ௲ “குரு கோவிந்த் சிங்
    44. “சகாரா” 35 லட்சம் சதுர மைல் பரப்பில் உள்ளது.
    45. சந்திரனைப் போன்று வீனஸ் கோளுக்கும் பிறைகள் உண்டு.
    46. பாலில் இல்லாத சத்து “இரும்புச்சத்து”
    47. நாட்டில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கும் மையம் “டோராடூன்” என்ற இடத்தில் உள்ளது.
    48. இந்திய நேரம் “அலகாபாத்” என்ற இடத்தின் நேரத்தை வைத்து கணக்கிடப்படுகிறது.
    49.  

0 comments:

Post a Comment