02:56
0

கடந்த வாரம் அப்பிள் நிறுவனம் iPhone 7 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

இக் கைப்பேசியின் விற்பனைக்கு போட்டியாக விளங்கும் வகையில் சாம்சுங் நிறுவனம் Galaxy Note 7 எனும் கைப்பேசியினை முன்னரே அறிமுகம் செய்திருந்தது.

எனினும் அவற்றின் மின் கலங்கள் வெடிக்க ஆரம்பித்தமையினால் 2.5 மில்லியன் வரையான கைப்பேசிகளை மீளப் பெற்றுக்கொண்டது.

இதன் காரணமாக சாம்சுங் நிறுவனத்தின் எதிர்பார்ப்பு தகர்ந்துள்ளது.

இந் நிலையில் செயற்பாட்டு வேகத்திலும் iPhone 7 கைப்பேசியினை காட்டிலும் பின்தங்கியுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக ஸ்மார்ட் கைப்பேசி பிரியர்களின் பார்வையானது iPhone 7 பக்கமே அதிகளவில் திரும்பியுள்ளது.

இதில் மற்றுமொரு துரதிர்ஸ்ட வசமான தகவல் என்னவென்றால் Galaxy Note 7 ஆனது அப்பிள் முன்னர் அறிமுகம் செய்த iPhone 6S கைப்பேசியின் வேகத்தினை விடவும் குறைவாக இருப்பதே.


0 comments:

Post a Comment