06:41
0

ஸ்மார்ட்போன் உலகின் ஜாம்பவான் என்றால் அது அப்பிள் நிறுவனம் தான்.

தங்களுடைய அடுத்த தயாரிப்பு எவ்வாறு அமையப் போகிறது என்பதை பரம ரகசியமாக கட்டிக்காப்பது அப்பிளின் மரபு.

நாளை (செப்ரெம்பர் 7ஆம் திகதி) சான் பிரான்ஸிஸ்கோ நகரில் அப்பிள் நிறுவனத்தின் மாநாடு நடக்கவிருக்கிறது.

அதில் எத்தகைய தயாரிப்புகள் வெளிவருமென பலரும் ஊகம் தெரிவிக்கத் தொடங்கியுள்ளார்கள்.

பெரும்பாலும் ஐபோன்-7, ஐபோன்-7பிளஸ் என்ற ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என பலரும் ஊகம் கூறுகிறார்கள்.

ஸ்மார்ட்போன்களின் பெயர்கள் பற்றிய ஊகம் ஒருபுறம் இருக்க, அவற்றின் சிறப்பு அம்சங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை முன்கூட்டியே சொல்வதற்கும் பலத்த போட்டி.

ஐபோன்கள் அறிமுகமாகும் முன்னர் அவை பற்றி ஊகம் தெரிவிப்பதில் கில்லாடி KGI Securities நிறுவனத்தைச் சேர்ந்த பகுப்பாய்வாளர் மிங்-ச்சி குவோ.



தண்ணீர் புகாத வசதி (Water Resistant)

சம்சங், சோனி நிறுவனங்கள் தண்ணீருக்குள் விழுந்தாலும் பாதிக்கப்படாத ஸ்மார்ட்போன்களை தயாரித்துள்ளன.

அந்த விடயத்தில் அப்பிள் நிறுவனம் அக்கறை காண்பித்ததில்லை. அதன் புதிய தொலைபேசிகள் தண்ணீர் புகாத வசதிகளைக் கொண்டிருக்கும் என்கிறார் மிங்-ச்சி.

நீர்மட்டத்தில் இருந்து மூன்று அடிவரை உள்ளே சென்றாலும், எதுவித பாதிப்பும் இல்லாத வகையில் புதிய போன்கள் அமைந்திருக்கும் என்பது அவரது கணிப்பு.

ஹெட்போன் (Headphone) புரட்சி

ஸ்மார்ட்போனும் ஹெட்போனும் இணை பிரியா நண்பர்கள். ஸ்மார்ட்போனில் உள்ள 3.5மிமி அளவிலான துளையில் ஹெட்போனை செலுத்தி இசை கேட்பது இனிய அனுபவம்.

ஐபோன்-7, ஐபோன்-7பிளஸ் போன்களில் 3.5மிமி துளை இருக்காது என்கிறார் துறை சார்ந்த நிபுணர்கள்.

இந்தத் துளையின் மூலம் கேட்கும் இசை 'Analog' வடிவத்தை சேர்ந்தது. எல்லாமே Digital-லான உலகில் இன்னமும் Analog தேவையா என அப்பிள் கருதியிருக்கலாம்.

Analog ஹெட்போனுக்கு பதிலாக Lightening Connector அல்லது ப்ளுடூத் ஹெட்போன் மூலம் மிகச்சிறப்பான ஒலித்தெளிவுடன் எதையும் கேட்க முடியும்.

மொத்தத்தில் Analog-க்கு முற்றுப்புள்ளி வைத்து Digital ஒலி நோக்கிய பாதையில் அப்பிள் நிறுவனம் காலடி எடுத்து வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment