03:10
0

லாப்டாப்பில் பெரிய பிரச்சனையாக இருப்பது அதில் பயன்படுத்தப்படும் பேட்டரி தான்.

அதிக விலை கொடுத்து பேட்டரி வாங்கினாலும், அது விரைவில் தீர்ந்து போகலாம். இதனால் பலரும் புதிய பேட்டரி வாங்க மனமில்லாமல் நேரடியாக மின்சாரத்தில் பொருத்தி லாப்டாப்பை பயன்படுத்துவர். இதனால் முழுவதும் தீர்ந்து போன பேட்டரிக்கு மறுவாழ்வு கொடுப்பது எப்படி என்று பார்க்கலாம்.

முதலில் முழுவதும் தீர்ந்து போன பேட்டரியை கழற்றி பிளாஸ்டிக் பாக்கெட்டில் வைத்து உங்கள் குளிரூட்டியின் Freezerக்குள் 11-12 மணி நேரம் வைக்க வேண்டும்.

பின்னர் அதை வெளியே எடுத்து குளிர் இருக்கும் வரை காத்திருந்து காய்ந்த துணியால் துடைக்க வேண்டும்.

சார்ஜ் ஆனதும் அதை காலி செய்ய வேண்டும். பின்னர் மீண்டும் சார்ஜ் செய்து காலி செய்ய வேண்டும். இந்த வழிமுறையை 3-4 முறை பின்பற்ற வேண்டும்.

இந்த வழிமுறை NiCD அல்லது NiMH வகை பேட்டரிகளில் மட்டுமே வேலை செய்யும். உயிரற்ற லித்தியம் பேட்டரிகளில் இந்த வழிமுறை வேலை செய்யாது.

0 comments:

Post a Comment