21:45
0

மலேசிய பள்ளிகளில் திருக்குறளை பாடமாக சேர்க்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது என, மலேசிய நாட்டின் கல்வித்துறை இணை அமைச்சர் கமலநாதன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சென்னை வந்த அவர் செய்தியாளர்களுடனான பேட்டியில் கூறும்போது, “தமிழ் தொன்மையான மொழி, அந்த மொழிக்கு மலேசிய அரசு உரிய மரியாதையை வழங்கி வருகிறது.

வரும் கல்வியாண்டு முதல் 254 அரசு பள்ளிகளில் திருக்குறளை பாடத்திட்டமாக அமைக்க உள்ளோம். ஆரம்பப் பள்ளிகள் மட்டுமின்றி, உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் இரண்டு பல்கலைக்கழகங்களிலும் திருக்குறளை பாடத்திட்டமாக சேர்க்க உள்ளோம்.

இந்தியா - மலேசிய நாடுகள் கலாச்சார அடிப்படையில் ஒன்றிணைந்து உள்ளன. அங்கு இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் அதிகம் பேர் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

உதவித்தொகை பெற்று, மலேசியாவில் கல்வி கற்க வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை வரும் கல்வியாண்டு முதல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மலேசியாவில் கல்வி பயிலும் இந்தியர்கள், முழு சுதந்திரத்துடனும் பாதுகாப்புடனும் உள்ளனர்”. என மலேசிய நாட்டின் கல்வித்துறை இணை அமைச்சர் கமலநாதன் கூறினார்.

0 comments:

Post a Comment