சாம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy Note 7 ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்து பாரிய பின்னடைவை சந்தித்திருந்தமை அனைவரும் அறிந்ததே.
ஆனால் அத்துடன் நின்றுவிடாது அதன் பின்னரான குறுகிய காலத்தில் ஏறத்தாழ மூன்று வகையான கைப்பேசிகளை அந் நிறுவனம் அறிமுகம் செய்துவிட்டது.
இந்நிலையில் தற்போது Samsung Galaxy C9 Pro எனும் மற்றுமொரு புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இக் கைப்பேசியானது 6 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Snapdragon 652 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM, 64GB சேமிப்பு கொள்ளளவு என்பவற்றினைக் கொண்டுள்ளன.
இவற்றுடன் தலா 16 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் நீண்ட நேரத்திற்கு மின் சக்தியை வழங்கக்கூடிய 4,000 mAh மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளது.
இக் கைப்பேசியின் விலையானது 474 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment