செல்போன், ஐபேட் போன்ற மின்னணு பொருட்களை தயாரிப்பதில் முன்னணி வகிக்கும் ஆப்பிள் நிறுவனம் 10.5 அங்குலம் கொண்ட புதிய ஐபேடை வெளியிட இருக்கிறது.
இப்போது நடைமுறையில் இருக்கும் 9.7 அங்குலம் ஐபேடானது நிறுவனங்கள் மற்றும் படிக்கும் மாணவர்கள் பயன்படுத்த அவ்வளவு வசதியாக இல்லை என கூறப்பட்டு வந்தது.
அதே போல 12.9 அங்குலத்தில் ஏற்கனவே இருக்கும் ஐபேட் மிக விலை உயர்வாக இருப்பதால் அதை எல்லோரும் வாங்கி பயன்படுத்துவது என்பது சாத்தியமில்லாதது.
இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தான் 10.5 அங்குலத்தில் ஐபேடை வெளியிட ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த புதிய 10.5 அங்குல ஐபேடானது அடுத்த வருடம் மார்ச் மாதம் சந்தையில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment