05:15
0

சாம்சுங் நிறுவனம் இவ் வருடம் மார்ச் மாதத்தில் Galaxy S7 Edge எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.

அட்டகாசமான வசதிகளைக் கொண்ட இக் கைப்பேசியானது நான்கு வர்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இக் கைப்பேசி பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்றிருந்தமையைத் தொடர்ந்து தற்போது மேலும் சிறிய மாற்றத்துடன் கூடியதாக மீண்டும் அறிமுகமாகின்றது.

இதன்படி White, Black Onyx, Gold Platinum மற்றும் Silver Titanium போன்ற வர்ணங்களில் அறிமுகமாகியிருந்த குறித்த கைப்பேசியானது தற்போது நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்டு மீண்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இக் கைப்பேசியின் சிறப்பம்சங்களாக 5.5 அங்குல அளவு, 1440 x 2560 Pixel Resolution என்பவற்றினைக் கொண்ட தொடுதிரை காணப்படுகின்றது.

இவை தவிர பிரதான நினைவகமாக 4GB RAM, 32/64 GB சேமிப்பு நினைவகம், 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளது.

இவற்றுடன் நீடித்து உழைக்கக்கூடிய 3600mAh மின்கலமும் உள்ளடக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

0 comments:

Post a Comment