19:44
0

நண்பர்களே, வரலாறு என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒன்று.. இப்படிப்பட்ட வரலாற்றை மீட்டுப்பார்ப்பது மிகவும் இனிமையானது.

இந்த நாளில் என்ன சிறப்பு என்பது பற்றி ஒவ்வொரு நாளும் இனி தெரிந்து கொள்ளுவோம்.

வரலாற்றில் இன்று நவம்பர் 18 இன்றைய தினத்தில் வரலாற்றில் பதிவான சில மிக முக்கிய விடயங்களை மீட்டு பார்ப்போம்...

1883
கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் ஒரே நேர எல்லைகளை வகுத்துக் கொண்டனடது இன்றைய தினத்தில்தான்.

1421
நெதர்லாந்தில் கடல் தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து வெள்ளம் பரவியதில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

1477
இங்கிலாந்தில் அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்ட முதலாவது நூலான "Dictes or Sayengis of the Philosophres" வில்லியம் கக்ஸ்டன் என்பவரால் வெளியிடப்படட்து.

1493
கொலம்பஸ் புவேர்ட்டோ ரிக்கோ என இன்றழைக்கப்படும் நாட்டை முதன்முறையாகக் கண்ணுற்றார்.

1626
புனித பீட்டர் பசிலிக்கா தேவாலயம் ரோம் நகரில் திறந்து வைக்கப்பட்டது.

1803
எயிட்டி புரட்சியின் கடைசிப் பெரும் போர் இடம்பெற்றது. இது எயிட்டி குடியரசு என்ற மேற்கு அரைக்கோளத்தின் முதலாவது கறுப்பினக் குடியரசு அமைக்கப்பட வழிவகுத்தது.

1863
டென்மார்க்கின் ஒன்பதாம் கிறிஸ்டியன் ஷ்லெஸ்விக் நகரம் டென்மார்க்குக்குச் சொந்தம் என அறிவிக்கும் சட்டமூலத்துக்கு ஒப்பமிட்டான். இது 1864 இல் ஜேர்மன்-டென்மார்க் போர் ஏற்பட வழிவகுத்தது.

1903
பனாமா கால்வாய்க்கு தனிப்பட்ட உரிமையை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்பாடு பனாமாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.

1909
நிக்கராகுவாவில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 500 புரட்சியாளர்கள் அரசுப்படையினால் கொல்லப்பட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா இரண்டு போர்க்கப்பல்களை அந்நாட்டுக்கு அனுப்பியது.

1918
லாத்வியா ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1926
ஜோர்ஜ் பேர்னாட் ஷா தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுப் பணத்தை ஏற்க மறுத்தார்.

1929
advertisement

அத்திலாந்திக் பெருங்கடலில் நியூஃபின்லாந்துக் கரையில் இடம்பெற்ற 7.2 ரிக்டர் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக பலத்த சேத எற்பட்டது. 28 பேர் கொல்லப்பட்டனர்.

1943
இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் பேர்லின் நகரில் குண்டுகளை வீசியதில் 131 பேர் கொல்லப்பட்டனர். இச்சமரில் 9 பிரித்தானிய வான்கலங்கள் அழிக்கப்பட்டன.

1943
உக்ரேனில் லூவிவ் என்ற இடத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த 6,000 யூதர்கள் நாசிப் படைகளினால் கொல்லப்பட்டனர்.

1947
நியூசிலாந்தில் கிறைஸ்ட்சேர்ச் என்ற இடத்தில் வர்த்தகத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 41 பேர் கொல்லப்பட்டனர்.

1978
கயானாவில் ஜிம் ஜோன்ஸ் என்பவரின் மக்கள் கோயிலில் இடம்பெற்ற கொலை மற்றும் தற்கொலை நிகழ்வுகளில் 270 குழந்தைகள் உட்பட 918 பேர் இறந்தனர்.

1987
லண்டனில் கிங் க்ரொஸ் சுரங்கத் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற தீயில் 31 பேர் கொல்லப்பட்டனர்.

1989
கோபெ செயற்கைமதி விண்வெளிக்கு ஏவப்பட்டது.

1991
தமிழீழ காவல்துறையின் முதலாவது அணி பயிற்சி முடிந்து வெளியேறியது.

2002
சென்னை புறநகர் பேருந்து நிலையம் கோயம்பேட்டில் திறக்கப்பட்டது.

2006
ஈழப்போர்: மன்னார்க் கடற்பரப்பில் இடம்பெற்ற மோதலில் இலங்கைக் கடற்படையினர் 10 பேர் கொல்லப்பட்டு 3 விடுதலைப் புலிகள் காயமடைந்தனர்.

பிறப்புகள்

1787
லூயிசு டாகுவேரே, பிரான்சிய இயற்பியலாளர், படப்பிடிப்பாளர் (இ. 1851)

1836
டபிள்யூ. எஸ். கில்பர்ட், ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1911)

1882 – ஜாக் மாரித்தேன், பிரான்சிய மெய்யியலாளர் (இ. 1973)

1888 – பிரான்சஸ் மரியன், அமெரிக்க எழுத்தாளர், ஊடகவியலாளர் (இ. 1973)

1901 – வி. சாந்தாராம், இந்திய நடிகர், இயக்குநர் (இ. 1984)

1923 – அலன் ஷெப்பர்ட், அமெரிக்க விண்வெளி வீரர் (இ. 1998)

1929 – பி. எஸ். சரோஜா, தமிழ்த் திரைப்பட நடிகை

1939 – மார்கரெட் அட்வுட், கனடிய எழுத்தாளர், கவிஞர்

1945 – மகிந்த ராசபக்ச, இலங்கையின் 6வது அரசுத்தலைவர்

1956 – ஜிம் விரிச், அமெரிக்கக் கணினியாளர் (இ. 2014)

1959 – ஜான் ஓ'கீஃப், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க-பிரித்தானிய நரம்பணுவியல் அறிஞர்

1968 – ஓவன் வில்சன், அமெரிக்க நடிகர்

1992 – நேத்தன் கிரெஸ், அமெரிக்க நடிகர், இயக்குநர்

இறப்புகள்

1887 – குஸ்டாவ் பெச்னர், செருமானியக் கவிஞர், மெய்யியலாளர் (பி. 1801)

1922 – மார்செல் புரூஸ்ட், பிரான்சிய எழுத்தாளர் (பி. 1871)

1936 – வ. உ. சிதம்பரம்பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1872)

1952 – போல் எல்யூவார், பிரான்சியக் கவிஞர் (பி. 1895)

1962 – நீல்சு போர், நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு இயற்பியலாளர் (பி. 1885)

2013 – செம்பனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன், தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1929)

2014 – சி. ருத்ரைய்யா, இந்திய இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1947)

2015 – கா. மீனாட்சிசுந்தரம், தமிழறிஞர் (பி. 1925)

சிறப்பு நாள்

விடுதலை நாள் (லாத்வியா, 1918)

விடுதலை நாள் (மொரோக்கோ, 1956)

0 comments:

Post a Comment