கை, கால் உறுப்புக்களை செயலிழக்க செய்யும் Paralysis என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் செயல்ப்பட வைக்கும் ஓர் அரிய கருவி ஒன்று சுவிட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுவிஸில் உள்ள Federal Polytechnic School of Lausanne (EPFL) என்ற ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தான் இந்த கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
மூளையின் உத்தரவுப்படி உடல் உறுப்புக்கள் இயங்குவதால், இந்த கருவி மூளையில் பொருத்தப்பட்டு இயக்கப்படும்.
இக்கருவியில் இருந்து வெளியாகும் உத்தரவுகள் உடலில் உள்ள முதுகு தண்டிற்கு சென்று, செயலிழந்த கை மற்றும் கால்களை மீண்டும் செயல்படுத்த தூண்டும்.
இந்த கண்டுபிடிப்பு குறித்து லூசென் பல்கலைக்கழகத்தை சேர்ந்த Jocelyne Bloch எனபவர் பேசியபோது, ’இந்த அபாரமான கருவியை முதலில் Paralysis நோய் தாக்கிய இரண்டு குரங்குகளுக்கு பொருத்தி பரிசோதனை செய்தோம்.
ஒரு வாரத்திற்கு பிறகு இரண்டு குரங்குகளும் சாதாரணமாக எழுந்து நடக்க தொடங்கியுள்ளன. எனவே, இக்கண்டுபிடிப்பு வெற்றிகரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இக்கருவியை கூடிய விரைவில் மனிதர்களுக்கு பொருத்தி பரிசோதனை செய்ய உள்ளதாகவும், இதில் வெற்றிப்பெற்றால் இக்கருவி விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் எனவும் Jocelyne Bloch தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment