இயற்கையின் படைப்பில் உலக நாடுகள் எங்கும் பல்வேறு வகையான மர இனங்கள் காணப்படுகின்றன.
இம் மர இனங்கள் ஒவ்வொன்றும் விசேட சிறப்பியல்புகளைக் கொண்டதாகவும் இருக்கின்றன.
தற்போது விஞ்ஞானிகள் உலகிலே மிகவும் உயரமான வெப்ப மண்டல மரம் ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.
இம் மரமானது தென் கிழக்கு ஆசியாவில் உள்ள உலகின் மூன்றாவது மிகப்பெரிய தீவான Borneo இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் உயரம் 94.1 மீற்றர்கள் (309 அடி) என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் மிகவும் உயரமான இவ்வாறான 49 மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
இவற்றின் ஆகக் கூடிய உயரம் 90 மீற்றர்களாக இருந்தது.
இந் நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மரம் 50வது மரமாக இருப்பதுடன் ஏனையவற்றினை விடவும் உயரமாக இருக்கின்றது.
0 comments:
Post a Comment