21:45
0

நம்மை பெற்ற தாயையும் மம்மி என அழைக்கிறோம், எகிப்தில் பதப்படுத்தப்பட்ட சடலத்தையும் மம்மி என அழைக்கிறோம்.

Mother என்பதைப் பேச்சு வழக்கில் Mummy என்கிறோம். இதைப் பிரிட்டிஷார் Mum என்றும் அமெரிக்கர்கள் Mom என்றும் சுருக்கிக் குறிப்பிடுகிறர்கள்.

எகிப்தில் இறந்தவர்களின் உடலைப் பாதுகாத்தனர். நீர் புகாமல் இருப்பதற்காக அந்த உடலின்மீது கட்டுப்போட்டனர். அந்தக் கட்டு அவிழாமல் இருக்க அதன் மேல் மெழுகைத் தடவினர்.

பாரசீக மொழியில் மெழுகை ‘மம்’ என்பார்கள், இதிலிருந்து Mummy வந்தது, மற்றபடி இதில் அம்மா சென்டிமென்ட் இல்லை.

0 comments:

Post a Comment